திருக்குறள் : தமிழரின் தன்மானம்

அகரம், ஆதி பகவன், உலகு இதெல்லாம் சமஸ்கிருதம்ன்னு ஒரு ட்வீட் நானும் பாத்தேன், சும்மா கேலி பண்ணிட்டு, அது அவங்க கருத்து, அது நமக்கெதுக்குன்னு சுலபமா கடந்து வந்துட்டேன். முருகர் அது பத்தி பெரிசா கோவப்பட்டு twitlonger, தொடர் ட்வீட்ஸ் எழுதினப்போக் கூட எதுக்கு இவ்ளோ கோவம், அவங்க யாரோ, நம்ம அவங்கள follow கூட பண்ணலன்னு தான் நெனச்சேன். ஆனா அவர் குடுத்த தரவுகள், விளக்கங்கள் கேட்டப்போ இப்படி தமிழுணர்வு மழுங்கிப் போய் இத்துப் போய் … More திருக்குறள் : தமிழரின் தன்மானம்

வேலைக்கு செல்லும் பெண்கள்

  பெண்கள் ஏன் வேலைக்கு செல்கிறார்கள் ? இது ஒரு அபத்தமான கேள்வி (ஆண்கள் ஏன் வேலைக்கு செல்கிறார்கள் என்று நாங்கள் கேட்பதில்லை). ஆனாலும் இதற்கான பதில்கள் சுவாரஸ்யமானவை குடும்ப பாரம் பகிர்ந்து கொள்ள அத்தியாவசியத் தேவைகளுக்கு ஆடம்பர செலவுகளுக்கு வீட்டில் போரடிப்பதால் படித்த படிப்பு வீணாகாமல் இருக்க மாமியார் தொல்லையில் இருந்து தப்பிக்க தனக்கென ஒரு அடையாளம் தேவை என சுயத்தை நிலைநாட்ட பணம் ஈட்ட பெண்கள் வேலைக்கு செல்வதற்கு நேரும் இடையூறுகள் இப்போதெல்லாம் முன்னை … More வேலைக்கு செல்லும் பெண்கள்

இறைவி

  முகநூலில் பகிர்ந்த நாள் 11 June at 17:11 எனக்குத் தெரிஞ்சு என்னைத் தவிர எல்லாரும் இறைவி விமர்சனம் எழுதிட்டீங்க.. நான் மட்டும் எதாச்சும் சொல்லாம விடலாமா என்ற ஆதங்கத்தில் நானும் எழுதிக்கிறேன்.🙂 படம் நல்லா இருக்கு.. எடுத்திருக்க காட்சிகள், பின்னணி இசை எல்லாம் நல்லா இருக்கு. ஒரு எல்லா ஆண்களும் ஒரு வகையில் சுயநலவாதிகள்ன்னு தோனற மாதிரி எடுத்திருக்காங்க. ஆனா உண்மையில் பெண்களுக்கு சமமா ஆண்களிலும் நல்லவர்கள் இருக்கிறார்கள். அஞ்சலி நல்ல தேர்வு, பின்னிட்டாங்க.. கமாலினி … More இறைவி

நமது பாரதம்

சுதந்திர தின நிகழ்சிகளைத் தொலைக் காட்சியில் பார்த்துக் கொண்டிருந்தோம். வண்ண வண்ண ஊர்திகள் இந்தியாவின் பல மாநிலங்களில் இருந்து வந்த காட்சிகள் மனதை விட்டு என்றும் அகலாது. எத்தனை வகை மக்கள், ஆடைகள், மொழிகள், கலாச்சாரம், வேறுபட்ட இனக் குழுக்கள் என்று இருந்தாலும் அனைத்தையும் ஒரு குடைக்குக் கீழ் அமைக்கும் இந்திய அரசின் வலிமை வியக்க வைக்கிறது. இப்படிப் பட்ட வேற்றுமையில் ஒற்றுமை கொண்ட நமது பாரதம் பற்றி நினைக்கும் போது நெஞ்சம் விம்முகிறது. நாம் செய்ய … More நமது பாரதம்

காலப்பெயர்வு

இந்த உணவு விடுதியில் தான் கொஞ்சம் கூட்டம் குறைவாக இருக்கும் என்று யோசித்து, போக்குவரத்து நெரிசலில் சிக்கி வந்து சேரும் போது மணி இரண்டைத் தொட்டது. டோக்கன் நம்பர் 975K என்றது, அப்பாடா என்று எனக்கான இருக்கையில் அமர்ந்தேன். இன்று விரைவில் உணவு கிடைக்கும் என்று ஒரு ஆசுவாசம் கிடைத்தது. அரை மணி நேர காத்திருப்புக்குப் பின் தானியங்கிக் கைகள் லொட்டு லொட்டென்று ஒரு லட்சம் தட்டுக்களை எங்கள் சாப்பாட்டு மேசைகளில் வரிசையாக அடுக்கியது. தலைக்கு மேலிருந்து … More காலப்பெயர்வு

தேவதை

“இன்னிசை பாடி வரும் இளங்காற்றுக்கு உருவம் இல்லை” காதோடு கேட்ட பாடலில் மனமுருகிக் கொண்டிருந்தது. கோவையிலிருந்து மதுரைக்கு  ஒரு தோழியின் திருமணத்திற்கு சென்று கொண்டிருந்தேன். ஜன்னலோரக் காற்றும் வழியில் வேகமாகப் பின் நகரும் வயல் வெளிகளும் பேருந்தின் தாள லயமும் இது தான் சொர்க்கலோகம் என்றது. கண்கள் மூடி ஒரு மோன நிலையில் சித்ராவின் குரலில் என்னைத் தந்திருந்தேன். திடீர் என்று இனம் காண முடியாத அடர்த்தியான வாசனையறிந்து வேகமாகப் பக்கத்து இருக்கையைப் பார்த்தேன். “மதுரைக்குங்களா?” என்று … More தேவதை

அபிராமி அந்தாதி #15

பாடல் -51 மோகம் நீங்க அரணம் பொருள் என்றருள் ஒன்றிலாத அசுரர் தங்கள் முரண்அன்றழிய முனிந்த பெம்மானும், முகுந்தனுமே சரணம் சரணம் எனநின்ற நாயகி தன் அடியார் மரணம், பிறவி இரண்டும் எய்தார் இந்த வையகத்தே. பொருள்: திரிபுரத்தை நிலையென்று எண்ணி அசுரர்கள் செய்த தீவினைகள் அற்றுப் போகுமாறு செய்த சிவபிரானும், திருமாலும் வணங்கக் கூடிய நாயகியே, உன்னை வணங்குகின்ற அடியவர்களின் பிறப்பறுத்து முக்தி தருவாய் நீயே! #140விளக்கம் #அபிராமிஅந்தாதி51 திரிபுரம் அழித்த சிவனும், திருமாலும் வணங்கக்கூடிய … More அபிராமி அந்தாதி #15

தைப் பொங்கலும் வந்தது..

சின்ன வயதில் வந்த தைப் பொங்கலுக்கும் இப்போதைய தைப் பொங்கலுக்கும் நிறைய வித்தியாசங்கள் உணர முடிகிறது. எல்லாருக்குமே அப்படித் தோன்றுகிறதா இல்லை எனக்கு மட்டுமேயா என்று தெரியவில்லை. என் நினைவடுக்குகளில் உள்ள தைப் பொங்கல் பற்றி யோசிக்கிறேன். தீபாவளி அளவுக்கு பெரிய கொண்டாட்டம் இல்லாவிட்டாலும், சற்றும் மகிழ்ச்சிக்குக் குறைவில்லாதது பொங்கல். பெரிதாக புத்தாடைகள் அணிந்து கொண்டாடியதாக நினைவில்லை. பள்ளிக்கு சீருடை என்பதோடு தீபாவளித் துணியின் புதுக்கறுக்கே குறைந்திருக்காது என்பதால் தேவையும் இருந்திருக்கவில்லை. அப்போதைய காலத்தில் தேவை என்பது … More தைப் பொங்கலும் வந்தது..

2 0 1 4 – 2 0 1 5

கடந்தது கிபி இரண்டாயிரத்திப் பதினான்கு. இந்த வருடம் ஆரம்பம் முதல் இறுதி வரை சற்றும் தடுமாறாமல் மின்னலாய் சென்று விட்டது. ஒரு வருஷம் ஆயிடுச்சா என்று ஆச்சரியம் தந்த ஆண்டு. இந்த ஆண்டு என் மனதைத்  தொட்ட / பாதித்த சம்பவங்கள்:- சில நாள் முதல்வர் அரவிந்த் கெஜ்ரிவால் திமுகவில் இருந்து அழகிரி நீக்கம் இரண்டான ஆந்திரா ராஜீவ்காந்தி கொலை கைதிகள் விடுதலை அறிவிப்பு நரேந்திர மோடி இந்தியாவின் பதினைந்தாவது பிரதமராக பதவியேற்றார். திருநங்கைகளை மூன்றாம் பாலினத்தவர் என்று … More 2 0 1 4 – 2 0 1 5

நான் யார்?

நான் யார்.. இந்தப் பிரசித்தி பெற்ற கேள்வியைத் தனக்குள் கேட்டுக் கொள்ளாதவர்கள் எண்ணிக்கை மிகச் சொற்பமே. இந்தக் கேள்வியும் இதற்கான பதில்களும் ஆளுக்கு ஆள் வேறுபடலாம். அல்லது பூமியில் உள்ள எல்லா உயிர்களுக்கும் பொதுவானதாகவும் இருக்கலாம். ஒவ்வொரு முறை இந்தக் கேள்வி எனக்குள் எழும்போதும் அப்போதைய வயதுக்கும் அறிவுக்குமான ஒரு பதில் தோன்றி வந்திருக்கிறது. தன்னை அறிவது என்பது பெரும்பாலும் மத, தத்துவ சித்தாந்தங்களுடன் சம்பந்தப்பட்டது. இதன் எந்த சாயலும் இல்லாமல் எனக்குள் நானே நான் யார் … More நான் யார்?