மழை!! (ட்விட்டர் ஹாண்டில் காரணக்கதை)

படம்

மழை!! நம் எல்லாருக்குமே பிடித்தமானது. மழைக்கும் நம்மை பிடித்தே இருக்கிறது. சில நேரங்களில் மழை வந்து இம்சிக்கும். பல நேரங்களில் வராமலே இம்சிக்கும். எல்லார் வாழ்விலும், பால்யம் முதல் முதுமை வரை ஞாபகம் வைத்துக் கொள்ள ஏதாவதொன்றை தந்து சென்றிருக்கும்.
சில மென்மையான தருணங்களில் பெய்த மழை அப்படியே உறைந்து நிற்கிறது ஒரு Bookmark போல.  நாம்,  நினைவுகளை அசைபோடும் போது மழையும் சேர்ந்து கொட்டித் தீர்க்கிறது, சில நேரம் கண்ணீரோடும், சில நேரம் வறட்டுப் புன்னகையோடும்.

படம்

மழை ரசித்தல் ஒரு வரம்,  தவம், தன்னையே ரசிக்கும் வைபவம், தன்னைக் கரைக்கும் பக்குவமும் அதே!   மழை சிலபொழுதுகளில் பெரியவர்களைக் கவர்வதில்லை. அவர்களுக்கெல்லாம்  அரசாங்கம் மழை ரசிக்க சிறப்பு விடுமுறை தந்தால் தான் உண்டு.

ஆனால் குழந்தைகளுக்கு மழை ஒரு அற்புத மாயஜாலம். பிரம்மாண்ட வித்தை.  மழை சுலபமாக சிறுவர்களின் பெறும்பான்மை வாக்குகள் பெறக் காரணம் பள்ளிவிடுமுறை வாய்ப்பு என்பதையும் தாண்டிய ஒரு உறவு இருக்கத்தான் செய்கிறது.

மழை தன் உணர்வுகளைப் பரிமாறிக்கொண்டே தான் இருக்கிறது. புரிந்தவன் ரசிக்கிறான்.

மழையின் சங்கேத மொழிகள் சில;
சாரல் – அறிமுகப்புன்னகை!
தூறல் – அசத்தல் புன்னகை!
அடைமழை – அட்டகாச சிரிப்பு!
ஆலங்கட்டி மழை – கலகல கலாட்டா சிரிப்பு!
புயல் மழை -கண்ணீர் சிரிப்பு!

ஆகா!! சொல்லிக்கொண்டிருக்கும் மழை புன்னகை புரியத் துவங்கி விட்டதே!!

இதனால் தான் மழை ஒரு யானையை விட, ரயிலைவிட, ஒரு மாயஜாலக்காரனைவிட அதிக முக்கியத்துவம் பெறுகிறது என்னைப்போன்ற மழைக் கிறுக்குகளிடம்!

உங்களுக்காக ஒரு மழை பாடல !!

விமர்சனங்கள் மற்றும் சாரல்கள் வரவேற்கப்படுகின்றன!!

@RenugaRain

படம்

Advertisements

16 thoughts on “மழை!! (ட்விட்டர் ஹாண்டில் காரணக்கதை)

 1. மழை பொழியும் இரவுகளும் பனி உதிரும் இரவுகளும் கல்லூரி விடுதிக்காலங்களில் மறக்க முடியாதவை..என் நெருங்கிய தோழிகளில் மழையும் ஒருத்தி..அவள் பேசுவது சில நேரம் கணவன் காதோரம் காதல் பேசுவது போலவும் சில நேரம் அதிகாரக்குரலில் அதட்டும் இனிய மொழி போலவும் தெரிகின்றன இப்போது…

 2. ரெண்டு கிழமைக்கு முந்திய வட்டியும் முதலும் மழையுடனான எனது நினைவுகளை சற்று கிளறியிருந்தது
  இப்பொழுது இது ……..
  நான் பிறக்கின்ற வேளையில் நல்ல மழையாம்,
  அதனாலோ என்னவோ தெரியவில்லை எனக்கு மழையையும்( சத்தியமா உங்களை இல்லை) மழைக்கு என்னையும் ரொம்ப பிடித்திருக்கிறது…
  நானும் மழையும் நிறைய… நிறைய விடயங்களைப் பற்றி பேசியிருக்கிறோம்….
  மழைக்கும் மனநிலை மாறிக்கொண்டேயிருக்கிறது என்னைப் போலவே …
  இப்பொழுதெல்லாம் மனிதர்களைப் போலவே மழையுடனும் மனம் விட்டு பேச நேரம் கிடைப்பதில்லை ….
  நிறையப் பேசக்கிடக்கிறது…..

 3. // பால்யம் முதல் முதுமை வரை ஞாபகம் வைத்துக் கொள்ள ஏதாவதொன்றை தந்து சென்றிருக்கும். //

  // மழை ரசித்தல் ஒரு வரம், தவம், தன்னையே ரசிக்கும் வைபவம், தன்னைக் கரைக்கும் பக்குவமும் அதே! //

  // சாரல் – அறிமுகப்புன்னகை!
  தூறல் – அசத்தல் புன்னகை!
  அடைமழை – அட்டகாச சிரிப்பு!
  ஆலங்கட்டி மழை – கலகல கலாட்டா சிரிப்பு!
  புயல் மழை -கண்ணீர் சிரிப்பு! //

  மேலே மேற்கோள் காட்டியிருப்பதைப்போன்று அழகழகான வார்த்தை பிரயோகங்கள். மழையைப்பற்றி “வட்டியும் முதலும்” கட்டுரைத்தொகுப்பில் ராஜூ முருகன் எழுதிய கட்டுரையும் என்னுடைய “என்னை தொலைத்த நான்” நீள் கவிதையும் நினைவுக்கு வருகின்றன. நல்லதொரு ஆரம்பம். அடுத்த பதிவில் எழுத்துப்பிழைகளை தவிர்க்கவும்.
  நன்றி.
  T.கருப்பையா

 4. உங்களை பற்றிய என் ஆரம்ப கால கருத்துக்கள் நீங்களும் ஒரு சராசரி தலையைபற்றியும் அணிலை பற்றியும் வாழ்க்கையின் தத்துவங்களாக நினைத்து கீச்சும் சாதாரண நபர என்று நினைத்து இருந்தேன் . ஆறுமாத கால ஓட்டத்தில் தீட்ட தீட்ட ஒளிரும் வைரம் போல் நீங்கள் தனிப்பட்டவர் என்று உங்கள் எழுத்துக்களின் மூலம் நிரூபித்து வருகின்றீர்கள்.வாழ்த்துகள்..I am forced to sharpen my brain (if it is there) to tweet with quality stuff so that i can reach at least half of your level if not on par wtih you

 5. >> மழை சிலபொழுதுகளில் பெரியவர்களைக் கவர்வதில்லை. அவர்களுக்கெல்லாம் அரசாங்கம் மழை ரசிக்க சிறப்பு விடுமுறை தந்தால் தான் உண்டு.

  குட் ஒன்

 6. பொதுவாய் மழை பிடிக்காது எனக்கு மழை பிடிக்காமல் போன தருணங்கள் பல உண்டு வீடு தாழ்வான பகுதியில் அமைந்துள்ளதால் மழை பெய்யும் போதெல்லாம் வாசல் குளமாகும்…முதல் முதல் நேர்முகதேர்வில் ஈரமான,அழுக்கு சட்டையுடன் செல்ல மழை காரணமாயிற்று,இப்படி பல ஆனாலும் சில சமயம் மழை பிடிக்கும் மழையை பிடிக்கும் பெண்களை பார்த்து……

 7. மழையை ரசித்து எழுத பட்ட வார்த்தைகள். பாத்ரூம் ஷவருக்கு கீழ் நின்று மழையில் நனையுமாறு கற்பனை செய்பவர்கள் வளைகுடா நாடுகளில் உண்டு. சின்ன மழை பெய்தாலே தினசரியின் முதல் பக்கத்தில் கொட்டை எழுத்தில் போடும் நாடுகளில் வாழும் நண்பர்கள், இந்த மழையை எவ்வளவு மிஸ் பண்ணுகிறார்கள் என வார்த்தைகளில் அடங்காது. சிறிய மழை தூறலுக்கே, பஸ்ஸின் ஜன்னலை டபார், டபார் என சாத்தும் ப்ரஹஸ்பதிகளும் இங்கு உண்டு. சிறிது ஈரமானாலும் நெருப்பு பட்டது போல் பதட்டமாகும் பலர் எனக்குள்ளும் ஆச்சர்யத்தை உண்டு பண்ணிருக்கிறார்கள். அருமை..இன்னும் கூட சில பக்கங்கள் எழுதிருக்கலாம்…என ஏக்கத்தை உண்டு பண்ணிய பதிவு..வாழ்த்துக்கள்.தொடர்ந்து எழுதுங்கள்

 8. நான் முதலில் சொன்னதையே திரும்ப சொல்றேன்.. “நீங்க ரொம்ப அழகா எழுதுறீங்க”… எனக்கும் மழை ரொம்ப பிடிக்கும்… சிறு வயதில் இருந்தே மழைக்கும், எனக்கு ஏதோ ஒரு உறவு இருப்பதாய் தோன்றும்… மழை பத்தி தனியாய் பதிவு எழுதியதில்லை… எழுதும் சில கதைகளில் மழைக்கும் பகுதி உண்டு..

 9. சூப்பர்.. எனக்கு அதிமாக எழுத தெரியாது..ஆன ரசிப்பேன் .. ரசித்ததில் சிறந்தது

 10. அருமையா எழுதியிருக்கீங்க, பொறாமையா இருக்கு இப்படி எழுதுறவங்களை பார்க்கும் போது. 50 டிகிரி வெயில் வாடும் எனக்கு மழையை கண் முன்னே காண்பித்தமைக்கு நன்றி

 11. சாரல் – அறிமுகப்புன்னகை!
  தூறல் – அசத்தல் புன்னகை!
  அடைமழை – அட்டகாச சிரிப்பு!
  ஆலங்கட்டி மழை – கலகல கலாட்டா சிரிப்பு!
  புயல் மழை -கண்ணீர் சிரிப்பு!– மழையின் சங்கேத மொழிகள் மிக மிக அருமை ரசித்துப்படித்தேன்

 12. வாழ்த்துக்க‌ள்!! அருமை!! ஒருமாதிரியாக‌ எழுத‌ தொட‌ங்கியாச்சு…

Leave a Reply

Fill in your details below or click an icon to log in:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out /  Change )

Google+ photo

You are commenting using your Google+ account. Log Out /  Change )

Twitter picture

You are commenting using your Twitter account. Log Out /  Change )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out /  Change )

w

Connecting to %s