அபிராமி அந்தாதி #1

நான் கற்கத் தொடங்கியுள்ள அபிராமி அந்தாதி, இனி தினமும் இந்த வலைபதிவில்…

அந்தாதி – பொருள் விளக்கம்:

(அந்தம்-முடிவு, ஆதி-துவக்கம்) அபிராமி பட்டரால் இயற்றப்பட்டது. மயிலாடுதுறைக்கு அருகிலுள்ள திருக்கடையூரில் அபிராமி அம்மன் அமிர்தகண்டேசுவரர் கோயில் உள்ளது. மார்க்கண்டேயருக்கு சிவபெருமான் காட்சியளித்த தலம் திருக்கடையூராகும். அந்தாதி என்பது யாப்பியலில் ஒரு தொடை வகையையும், ஒரு பிரபந்த வகையையும் குறிக்கும். அந்தாதி என்னும் சொல் முடிவு என்னும் பொருள்படும் அந்தம், தொடக்கம் என்னும் பொருள்படும் ஆதி ஆகிய இரு சமசுக்கிருதச் சொற்களின் சேர்க்கையால் உருவானது. இதற்கேற்ப, ஒரு பாடல் முடிவில் உள்ள எழுத்து, அசை, சீர், சொல்சொல் அல்லது அடி அடுத்து வரும் பாடலின் தொடக்கமாக அமையும் பாடல்களால் ஆனது அந்தாதிச் செய்யுள் ஆகும். அடுத்தடுத்து வரும் அடிகள் அந்தாதியாக அமையும் போது அது அந்தாதித் தொடை எனப்படும். அந்தாதி அமைப்பு பாடல்களை வரிசையாக மனப்பாடம் செய்வதற்கு வசதியாக உள்ளது.  (thanks to tamil Wikipedia)

படம்

பிள்ளையார் சுழி

ஓம்

கணபதி காப்பு

தாரமர் கொன்றையும் சண்பகமாலையும் சாத்தும் தில்லை
ஊரார் தம் பாகத்து உமைமைந்தனே! உலகு ஏழும் பெற்ற
சீர் அபிராமி அந்தாதி எப்போதும் என் சிந்தையுள்ளே
காரமர் மேனிக் கணபதியே! நிற்க கட்டுரையே.

பொருள்:

கொன்றைப்பூ மாலை அணியும் தில்லை வாழ் கூத்தபிரானுக்கும் சண்பகப்பூ மாலையணிந்து அவரின் இடப்பாகத்தில் அமைந்த உமையவளுக்கும் தோன்றிய மைந்தனே! கருநிறம் பொருந்திய கணபதியே! ஏழு உலகங்களையும் பெற்ற சிறப்புமிக்க அன்னையின் பேரில் நான் தொடுக்கும் அபிராமி அந்தாதி என் நெஞ்சில் நிலைத்திருக்க அருளுவாயாக!

Advertisements

4 thoughts on “அபிராமி அந்தாதி #1

  1. நல்ல பதிவு, நல்ல விளக்கம். நீங்கள் எழுதிய தெளிவுரை இதுவா… இல்லை வேறு யார் எழுதியது… How can I subscribe to this blog by mail?

    1. இல்லீங்க பாஸ்.. புக்குல படிச்சேன்.. நானும் புதுசுங்க.. எப்படி follow பண்ணனும் தெரியலையே.
      நன்றிங்க :)))

Leave a Reply

Fill in your details below or click an icon to log in:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out /  Change )

Google+ photo

You are commenting using your Google+ account. Log Out /  Change )

Twitter picture

You are commenting using your Twitter account. Log Out /  Change )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out /  Change )

w

Connecting to %s