அபிராமி அந்தாதி #2

நேற்று பதிந்தது கணபதி காப்பு.. எண்ணிக்கையில் சேராது. ஆகவே இன்று இரண்டு பாடல்கள் எழுதினால் கணக்கு நேராகிவிடும்.. போன பதிவை (Abiramianthathi #1) போல அல்லாமல், இணையத்தில் தமிழ் கற்று சொந்தமாக எழுதிய விளக்கங்கள். இதை செய்யுமாறு கூறிய கருப்பையாவுக்கு நன்றிகள். ( @ikaruppiah )

பாடல்: 1

உதிக்கின்ற செங்கதிர், உச்சித்திலகம், உணர்வுடையோர்
மதிக்கின்ற மாணிக்கம், மாதுளம் போது, மலர்க்கமலை
துதிக்கின்ற மின்கொடி, மென்கடிக்குங்கும தோயமென்ன
விதிக்கின்ற மேனி அபிராமி என்தன் விழித்துணையே.

 பொருள் விளக்கம்: 1

காலை சூரியனின் செங்கதிர் வண்ணம், நெற்றியில் இடப்படும் திலகம் போன்ற செம்மலர், போற்றபடுகின்ற மாணிக்கம், செம்மாதுளை மலர்கள், மெல்லிய மனம் கொண்ட குங்குமக் குழம்பும், இவை யாவையும் ஒத்து விளங்கும் என் தாய் அபிராமியானவள், மின்னல் கொடிபோன்றவள், தாமரை மலரில் தோன்றிய திருமகளும் துதிக்கும் அழகுடையவள், இனி அவளே எனக்கு சிறந்த துணையாவாள்.

பாடல்: 2

துணையும் தொழும் தெய்வமும், பெற்றதாயும் சுருதிகளின்
பணையும், கொழுந்தும் பதி கொண்டவேரும் பனிமலர்பூங்
கணையும், கருப்புச்சிலையும், மென்பாசாங்குசமும், கையில்
அணையும்திரிபுர சுந்தரி ஆவது அறிந்தனமே.

பொருள் விளக்கம்: 2

திரிபுர சுந்தரியாக விளங்கும் என் அன்னை அபிராமியானவள், எனக்கு துணையாகவும், நான் வணங்கும் தெய்வமாகவும், என்னை பெற்ற தாயாகவும் விளங்குகிறாள். உயர்ந்த வேதங்களின் தொழிலும், அவற்றின் வேர்களாகவும் நிலை பெற்று நிற்கிறாள். அவள் தன குளிர்கரங்களில் மென்மையான மலரம்புகளும், கரும்பு வில்லும், பாசாங்குசமும் கொண்டு விளங்குகிறாள். அவளை நாங்கள்உணர்ந்து கொண்டோம்.

அன்புடன்,
ரேணுகா

@RenugaRain

Advertisements

2 thoughts on “அபிராமி அந்தாதி #2

Leave a Reply

Fill in your details below or click an icon to log in:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out /  Change )

Google+ photo

You are commenting using your Google+ account. Log Out /  Change )

Twitter picture

You are commenting using your Twitter account. Log Out /  Change )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out /  Change )

w

Connecting to %s