அபிராமி அந்தாதி # 4

Image

பாடல் – 5

(மனக்கவலை தீர)

பொருந்திய முப்புரை! செப்புரை செய்யும் புணர்முலையால்
வருந்திய வஞ்சி மருங்குல் மனோன்மணி! வார்சடையோன்
அருந்திய நஞ்சு அமுதாக்கிய அம்பிகை! அம்புயமேல்
திருந்திய சுந்தரி அந்தரி பாதம்என் சென்னியதே.

பொருள் – 5

உன்னதமான தொழில்களான, படைத்தல், காத்தல் மற்றும் அழித்தல் ஆகிய மூன்று தொழில்களில் பொருந்தி நிற்கும் அன்னையே, அணிகலன்கள் அணிந்து, தாய்மையின் சின்னமான தனங்களின் சுமையால் வருந்தும் வஞ்சிக் கொடியைப் போன்று மெல்லிடை கொண்ட மனோன்மணி என்ற நாமகரணம் பெற்ற பார்வதியே! நீண்ட சடை கொண்ட சிவபெருமான் ஒருமுறை தேவ அசுரர்களை காப்பதற்காக அருந்திய ஆலகால விஷத்தை, தன் மென்கரத்தால் அமுதாக்கிய அம்பிகைத் தாயே! நீ வீற்றிருக்கும் தாமரை மலர் போன்றதாகிய நின் திருவடிகளில் என் தலை பொருத்தி வணங்குகிறேன்.

பாடல் – 6

(மந்திர சித்தி பெற)

சென்னியது உன்பொன் திருவடித்தாமரை; சிந்தையுள்ளே
மன்னியது உன் திருமந்திரம்; சிந்துர வண்ணப்பெண்ணே!
முன்னிய நின் அடி யாருடன் கூடி முறை முறையே
பன்னியது என்றும் உன் தன் பரமாகம பத்ததியே.

பொருள் – 6

செந்தூர வண்ணம் கொண்ட பெண் தெய்வமே அபிராமி, நான் எப்போதும் தொழுது நிற்பது உன் பொன் போன்ற ஜொலிப்பும் தாமரை போன்ற மென்மையும் உடைய உமது திருப்பாதங்களே! எப்போதும் என் சிந்தனையில் நிறைந்து நிற்பது உன் திருநாமங்களே! இனி நான் எப்போதும் கலந்திருப்பது உன் அடியவர்களாகிய உன் பக்தர்களுடன் தான்! இனி தினம்தோறும் நான் பாராயணம் செய்யப் போவது உன் பெருமை பாடும் வேதங்களைத் தான்!!

பாடல் – 7

(மலையென வரும் துன்பம் பனியென நீங்க)

ததியுறு மத்திற் சுழலும் என்ஆவி தளர்விலதோர்
கதியுறும் வண்ணம் கருது கண்டாய்; கமலாலயனும்,
மதியுறு வேணி மகிழ்நனும், மாலும் வணங்கிஎன்றும்
துதியுறு சேவடியாய்! சிந்துரானன சுந்தரியே.

பொருள் – 7

தாமரை மலரில் குடிகொண்டு படைத்தல் தொழில் செய்யும் பிரம்மதேவனும், தன் முடியில் பிறை நிலா தரித்து, உன்னில் பாதியாக விளங்கும் சிவபெருமானும், பாற்கடலில் பள்ளி கொண்டிருக்கும் திருமாலும், ஆகிய மும்மூர்த்திகளும் மகிழ்ந்து வணங்கக் கூடிய செம்மையான திருவடிகளை உடைய, செந்தூரத் திலகமணிந்த பேரழகான அன்னையே! தயிரைக் கடையும் மத்து ஓயாமல் சுழன்று அவதியுறுவதைப் போன்று நான் இவ்வுலகில் பிறப்பு, இறப்பு என்று பிறவிக்கடலில் சுழன்று வருந்தாமல் என் உயிர் பிறப்பற்ற முக்தி நிலையை அடைய அருள் புரிவாய் தேவி.

 

Advertisements

One thought on “அபிராமி அந்தாதி # 4

Leave a Reply

Fill in your details below or click an icon to log in:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out /  Change )

Google+ photo

You are commenting using your Google+ account. Log Out /  Change )

Twitter picture

You are commenting using your Twitter account. Log Out /  Change )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out /  Change )

w

Connecting to %s