மழை!!!

Image

வெளியே பெய்து கொண்டிருக்கிறது மழை..

உள்ளே கரைந்து கொண்டிருக்கிறது மனது…

நம் தாடித் தாத்தா திருவள்ளுவர் முதல் சினிமாக் கவிஞர்கள் வரை ஏற்கனவே கையாண்ட மழை தான். ஆனால் சற்றும் புதுக்கருக்கு குறையாமல் ஒவ்வொரு துளியிலும் ஈர்த்துக் கொண்டே உள்ளது. ஆகவே மீண்டும் மழை பற்றி கிறுக்க ஆசை…

தென்னை மரத்தின் கிளை நுனியில் சொட்டிக் கொண்டிருக்கும் மழைத் துளியைப் பார்த்துக் கொண்டே இருந்தால் பொழுது போவதே தெரியாது. மழை மென்மையானது மட்டுமல்ல, பெண்மையானதும் கூட, உலகையே வாழவைக்கிறதே. சடசடவென துளிர்க்கும் திடீர் மழை நம்மை பெரிதாக நனைத்து விடாது. நனைத்தாலும் விரைவில் காற்றால் விசிறி ஆற்றிவிடும். கடகடவென பெண்களையும் சிறுவர்களையும் தன இடிமின்னலால் பயம் கொள்ளச் செய்து வாசல் மட்டும் தெளித்துப் போகும். சத்தமே இல்லாமல் ஜோவென இரைஞ்சி தெப்பமாக்கிச் செல்லும் மழையும் உண்டு..

Image

மழை பெய்யும் போது வரும் வாசனைகள் அதி அற்புதமானவை. அதற்கான அறிவியல் காரணம் சுவாரஸ்யமானது. மண்ணை வசிப்பிடமாகக் கொண்ட சில பிரத்யேகமான நுண்ணியிரிகள், தான் பல்கிப் பெருக சாதகமான சூழலை எதிர்நோக்கிக் காத்திருக்கும் ஒரு விதை போல. மழைத் துளி விழுந்ததும், அவை எதிர்பார்த்த சாதகமான சூழல் சாத்தியமாகிறது. அவை தங்களின் பல்கிபெருக ஆரம்பிக்கின்றன. அச்சமயத்தில் ‘ஜியோஸ்மின்’ என்னும் வாசனைத் திரவத்தைச் சுரக்கிறது, அதுவே நம்மை ஈர்க்கும் மண் வாசனை. இது அறிவியல். ஆனால் இது அந்த நுண்ணியிரி மழையிடம் காட்டும் நன்றியாகவே எனக்குப் படுகிறது. மழை மலர்ச் செடிகளிலிருந்தும், பழ மரங்களிலிருந்து கூட வாசனையைக் கடன் வாங்கி நம் நாசியை மகிழ்விக்கின்றது.

Image

மழை பெய்து தீர்த்த நொடி தனித்துவமானது. அந்த நேரத்தில் மாமரக் குயில் ஒலிக்கும் பாக்கியம் பெற்றவன் அதிர்ஷ்டசாலிதான். தேங்கி நிற்கும் நீரில் பெய்யும் மழைச் சாரல் ஏற்படுத்திச் செல்லும் வட்டங்கள் நம் மனதிற்குள்ளே தங்கி நிற்கும் மழை நின்றபின்னும் கூட. இடி மழைக்குப் பின் பெய்யும் செடிமழை, பழமரக் கிளிகளின் கூட்டத்தைவிடக் கவர்ச்சியானது. அந்த நொடியில் நம் மனம் ஆளாய்ப் பறக்கத் தொடங்கியிருக்கும் மிளகாய் பஜ்ஜிக்கும் தேநீருக்கும். அது என்னமோ தேநீருக்கும் மழைக்கும் அப்படி ஒரு நெருக்கம். மழையைப் பார்த்துக் கொண்டே அதன் சடசட சத்தத்தை கேட்டுக் கொண்டே தேநீர் அருந்துவது ஒரு நல்ல ரசனைச் சேர்க்கை.

 

 

மழை பெய்த மறுநாள் பார்த்தால் இந்த பூமியே புதிதாய் தெரியும். பூமியெங்கும் பச்சைக்கம்பளமாய் பசும்புற்கள் முளைத்திருக்கும். மரங்களில் படிந்திருக்கும் தூசியெல்லாம் மழைநீரால் சுத்தமாக்கப்பட்டு தனி அழகில் மிளிரும். மேகங்கள் எல்லாம் கழுவப்பெற்று நீல வண்ணம் துலங்கித்தெரியும். இலை தழைகள் பச்சையும் மஞ்சளும் மாந்தளிர் வண்ணமும் பெற்று மனதைக்கவரும்.

மேற்சொன்ன எல்லாவற்றையும் என் ஞாபக அடுக்குகளில் இருந்து தூசி தட்டிப் பதிவிடுகிறேன். உண்மையில் மனமிருந்தாலும் இந்த நகரத்து ஓட்டத்தில் என்னையும்  இணைத்துக் கொண்டு ஓடிக் கொண்டிருக்கும் சாதாரண அற்பப் பிறவிதான் நானும்..

இந்தப் பதிவை வளைகுடா நாடுகளில் வசிக்கும் என் தமிழ் நண்பர்களுக்கு சமர்ப்பிக்கிறேன். நன்றி!!!

அன்புடன்,
ரேணுகா @RenugaRain

Image

Advertisements

4 thoughts on “மழை!!!

  1. மழை பெய்து தீர்த்த நொடி தனித்துவமானது. அந்த நேரத்தில் மாமரக் குயில் ஒலிக்கும் பாக்கியம் பெற்றவன் அதிர்ஷ்டசாலிதான்

    ரசித்த வரிகள்.

    ஒளிப்படங்கள் அனைத்தும் தத்ரூபம்., காபி கப் மிளகாய் பஜ்ஜி படத்தில் சூடு பறக்க ஆவி வந்தால் இன்னும் சூப்பரா இருந்திருக்கும்

Leave a Reply

Fill in your details below or click an icon to log in:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out /  Change )

Google+ photo

You are commenting using your Google+ account. Log Out /  Change )

Twitter picture

You are commenting using your Twitter account. Log Out /  Change )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out /  Change )

w

Connecting to %s