கிராமத்துப் பேருந்து..

 

கிராமங்களை பக்கத்து ஊர்களோடும், சிறு நகரங்களோடும் இணைப்பதில் வெகு நாட்களாகவே முக்கியப் பங்கு வகிப்பவை பேருந்துகள் தாம்.  கிராமத்துப் பேருந்துப் பயணங்கள் பற்றியும், மக்களின் குணாதிசியங்களை எனக்குத் தெரிந்ததைத் தருகிறேன்.

முதலில் பேருந்தின் ஓட்டுனரையும், நடத்துனரையும் பற்றிச் சொல்லியே ஆக வேண்டும். நம் மக்கள் ஓட்டுனரை “டைவர்” என்றும் நடத்துனரை “கண்ட்ரைடர்” என்றும் செல்லமாக அழைப்பது வழக்கம். நடத்துனரை விட  ஓட்டுனர் வேலை சிறிது சுலபம் தான். என்ன, ரோடே இல்லாத ரோட்டில் வண்டி ஓட்டுவதைத் தவிர.. நம் டைவர் ஜாலியாக பஸ்சைக் கிளப்பிக்கொண்டு பக்கத்தில் தெரிந்தவர்களுக்கு டாட்டா சொல்லிக் கொண்டிருப்பார். கண்டக்டர் பாடு திண்டாட்டமாக இருக்கும், புலம்பிக் கொண்டே மக்களை உள்ளே போகச் சொல்லிக் கத்திக் கொண்டிருப்பார்.

நம்மூருப் பசங்க, (பசங்களா அதுங்க?) ரெண்டு படியிலும் தொங்கிகிட்டு சத்தம் போட்டு, பாட்டுப் பாடி சாகசங்கள் செய்து கொண்டிருப்பார்கள்… சிறிது பொறாமையாக இருக்கும். நம்ம பெண்கள் சத்தமில்லாம பாடத்தை பத்தி டிஸ்கஸ் பண்ணிட்டு இருப்பாபார்கள் (!!??). சில பள்ளிச் சிறுமிகள் சாமி படங்களை பேருந்து முகப்பில் ஒட்டி வைத்து, தினமும் பூக் கொண்டு வந்து வைப்பார்கள். கல்லூரி பெண்கள், தனித்தனித் தீவாக ரகசியம் பேசிக் கொண்டும், சிலர் புதிதாக வரவழைக்கப்பட்ட தைரியத்துடன் நம் டைவரை கண்களில் அசுவாராஸ்யத்துடன் பார்த்துக் கொள்வர் (அட சைட்டுங்க)..  முன்னிருக்கையில் அமர்ந்திருக்கும் இச்சிறு பெண், அதோ அந்த கடைசிப் படியில் ஒற்றைக் காலில் தொங்கிக் கொண்டு வருகிறானே அந்த மடப் பயலுடன் ஓயாமல் பேசிக் கொண்டே வருகிறாள், கண்களால். இந்த ரகசியம் யாருக்கும் தெரியாதென்று இருவரும் எண்ணிக் கொள்வது தான் மிகப் பெரிய ட்விஸ்ட்.

நம் கிராமங்களைப் போலவே நம் கிராமத்து மக்களும் மாசு மருவில்லாதவர்கள், வெள்ளந்தியானவர்கள். மிகச் சில கருப்பு ஆடுகளும் உலவினாலும் சுவாரஸ்யத்திற்குப் பஞ்சமிருக்காது.  இவர்களோடு சேர்ந்து பயணிக்கையில் சிரிப்பிற்கும் பஞ்சமிருக்காது. இதோ ஒருவர், தான் உழவர் சந்தைக்குக் கொண்டு செல்லும் காய்கறி மூட்டையைத் தூக்க முடியாமல், “யோவ், கண்ட்ரைடரு, இத வண்டியில ஏத்துய்யா” என்று மிரட்டிக் கொண்டிருக்கிறார். நம்ம வராம வண்டிய எடுத்திருவானா, என்று ஆடி அசைந்து வருகிறாள் ஒரு பாட்டி. இவர்கள் எல்லாருக்கும் ஈடு கொடுத்து வண்டி தடக் தடக் என்று செல்வதும் ஒரு தனி அழகு தான்..

இந்த வண்டி தான் பக்கத்து டவுனுக்கும், இந்தக் கிராமத்திற்கும் தினசரிகள், பால் பொருட்கள், காய் கனிகள், எல்லாவற்றையும் பரிமாறிக் கொள்ள உதவும் ஒரே சாதனம். ஓட்டுனர் தான் இவர்களின் தபால்காரன். காலை பத்து மணிக்கு மேல் நம் பஸ், காலியாகத் தான் செல்லும் சாயங்காலம் வரை. பின் நாலு மணிக்குத் தொடங்கி இரவு கடைசி நடை வரை, ஒரே கூட்டமும், குதூகலம் நிரம்பி வழியும் நம் பேருந்து,  பக்கத்துப் பெரு நகரங்களில் கல்லூரி முடித்துத் திரும்பும் மாணவர்களை பொறுப்பாய் நின்று அழைத்துத் திரும்பும்.

ஏழு மணிக்கு மேல்தான் நம் ஆட்கள் ஏழரையைக் கூட்டுவார்கள். வேலை முடிந்து கூலி வாங்கித் திரும்பும் ஆண்கள் அரசாங்கத்திற்கு வரி செலுத்திவிட்டு நிற்கமாட்டாமல் வருவார்கள். அப்போ அவங்க அடிக்கற கூத்திருக்கே நடத்துனர் ரத்தக் கண்ணீர் வடித்துக் கொண்டிருப்பார்.  ஆனா நம்ம பெருசுங்க பஞ்சாயத்துப் செய்து அமைதிப் படுத்தி விடுவார்கள்.. எது நடந்தாலும் நமக்கென்னவென்று ஒதுங்கிப் போகும் மக்களின் விகிதாச்சாரம் அங்கு குறைவுதானே.. கடைசி நடை வரும் வண்டியில் தினமும் வரும் மக்கள் வந்து விட்டார்களா என்று கவனித்து, நிதானமாக அனைவரையும் ஊர் கொண்டு சேர்த்து விட்டுத் தானும் உறங்கத் தொடங்கும் இந்த பெரும் “பேருந்து”..

அன்புடன்,
ரேணுகா @RenugaRain

Advertisements

14 thoughts on “கிராமத்துப் பேருந்து..

 1. Really very nice rain.

  keep writing. after reading the blog, my mind wentback few years to remembering my old village days.

  I miss my village.

  thanks for your good blog… keep writing Mam.

 2. ரேணு உன்ன மக்கு புள்ளனு நெனைச்சேன் பரவால்லா இப்டில்லாம் கூட கெத்தா எழுதுற, தொடறட்டும் உமது எழுத்துப்பணி.

 3. 1. டிரைவர் கண்டக்டர் அந்த ஊரில் உள்ள அனைவரையுமே தெரிந்து வைத்திருப்பார்கள்.

  2.பஸ் வரும் போது ஆடுகளை ஒட்டிவருவது, குடித்துவிட்டு நடுரோட்டில் படுத்துகிடப்பது என நடத்துரைவிட டிரைவர் பாடு படு தின்டாட்டம்.

  3. டிரைவர் கண்டக்டர் அவர்களுக்குள்ள பிரச்சினை போண்றவற்றை சொல்லிருந்தால் ஒரு முழு பதிவு கிடைத்திருக்கும்.

  4. கடைசி பஸ் எடுக்கும் முன் வழக்கமானவர்கள் வந்துவிட்டார்களா’ என்று உண்மையை கூறி முடித்தவிதம் மிக அருமை!

  * * ரசித்த வரிகள்

  கடைசி நடை வரும் வண்டியில் தினமும் வரும் மக்கள் வந்து விட்டார்களா என்று கவனித்து, நிதானமாக அனைவரையும் ஊர் கொண்டு சேர்த்து விட்டுத் தானும் உறங்கத் தொடங்கும் இந்த பெரும் “பேருந்து”..

  மென்மேலும் வளர வாழ்த்துக்கள் தோழியரே..:-)

 4. எது நடந்தாலும் நமக்கென்னவென்று ஒதுங்கிப் போகும் மக்களின் விகிதாச்சாரம் அங்கு குறைவுதானே #உண்மை. ஒரு தடவ இப்டி ஒரு பஸ்ல போகனும்னு ஆசை வருது.. தொடர்ந்து எழுதுங்க..

 5. ரசித்த வரிகள் >>  //வேலை முடிந்து கூலி வாங்கித் திரும்பும் ஆண்கள் அரசாங்கத்திற்கு வரி செலுத்திவிட்டு நிற்கமாட்டாமல் வருவார்கள். அதாங்க தண்ணி..//

  ஆனா கிராமத்துப் பேருந்து ஏதோ பாதில நின்ன மாதிரி ஒரு பீல்…

  வாழ்த்துக்கள்!! தொடர்ந்து எழுதவும்…

 6. சூப்பரு அக்கா ..இப்புடியே எழுதிட்டு இருந்தீங்கன கதாசிரியை ஆகிடலாம்! எல்லாரையும் பத்தி சொன்ன மாதிரி அந்த பேருந்திற்கும் உயிர் கொடுத்திருந்தா , மக்கள் நண்பனா உருவகம் செய்தால் இந்த சிறுகதை தனது மூச்சு காற்றை அடைந்திருக்கும் ..யோசிச்சு பாருங்க – தங்கள் அன்பு தம்பி :))

 7. யம்மா மழை நீ இன்னும் govt பஸ்ல போகல போல இருக்கே 1st போய் பாரும அப்பரம் டிரைவர் and கண்டக்டர் அடிக்கற கூத்து தெரியும் அனா சைடு gapla பசங்கள மட்டும் வாறது கொஞ்சம் அதிகம்
  ஆனா இத படிக்கும் பொது என்னக்கு தோணியது விக்கிபீடியா read பண்றமாதிரி இருந்துச்சு இல்லன இன்னும் நல்லா இருந்து இருக்கும்
  நல்லா முயற்சி ஆத்துக்க அடிகடில இப்படில எழுத்படது :))

 8. என்ன மாதிரி புட்போர்டு அடிக்கறவங்கள பத்தி ஒரு தனி பதிவே போடலாம்.. அருமையான பதிவு ;))))

 9. நல்லா ரசிச்சு எழுதி இருக்கீங்க :)பஸ் டிரைவர் கண்டக்டர் களை குடும்ப நண்பர்களை போல் கிராமத்தில் நடத்துவார்கள் 🙂
  shaan_64

 10. இதெல்லாம் எங்க ஊர்ல கிடையாது….நெடுஞ்சாலையின் ஊர் என்பதால் 99% சதவீதம் ரூட் பஸ் தான் டவுன் பஸ்லாம் கிடையாது இந்த காட்சியலாம் படிச்சிருக்கேன் படத்துல பார்த்திருக்கேன் அவ்ளோ தான்……#ஒரு விஷயத்த மறந்துட்டிங்க :மொத்த டவுன் பஸ்ஸுக்கும் சேர்த்து ஒரே ஒரு தாவணி போட்ட ஃபிகர் தான் வரும் அத பசங்க மொத்த பேரும் கரெக்ட் பண்ண பார்ப்பானுங்க…..

Leave a Reply

Fill in your details below or click an icon to log in:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out /  Change )

Google+ photo

You are commenting using your Google+ account. Log Out /  Change )

Twitter picture

You are commenting using your Twitter account. Log Out /  Change )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out /  Change )

w

Connecting to %s