அபிராமி அந்தாதி #5

Image

பாடல் – 8

(பற்றுகள் நீங்கி பக்தி பெருகிட)

சுந்தரி! எந்தை துணைவி! என் பாசத் தொடரைஎல்லாம்
வந்தரி; சிந்துர வண்ணத்தினாள் மகிடன் தலைமேல்
அந்தரி; நீலி; அழியாத கன்னிகை; ஆரணத்தோன்
சுந்தரி; கைத்தலத்தாள் மலர்த்தாள் என் கருத்தனவே.

பொருள்:

என் தாய் அபிராமி பேரழகுடையவள். என் தந்தை சிவபெருமானின் துணைவியானவள்.   முப்பிறவியில் இருந்து தொடர்ந்து வரும் வினைகளையும், இப்பிறவியின் பந்தபாசங்களையும் அழிக்கக் கூடியவள். செந்நிறத் திருமேனியவள். மகிஷாசுரன் தலை மேல் நின்று வதம் செய்து நீலி (கோப உருவான காளி ) என்னும் பெயர் பெற்றவள். என்றும் இளம் கன்னியானவள்.  பிரம்மாவின் கபாலத்தைத் தன திருக் கரத்தால் தாங்கி நிற்கும் உமையவள். இத்தகைய சிறப்புக்கள் பெற்ற பெற்ற அன்னையின் மலர் போன்ற திருவடிகள் என் கருத்தில் தங்கி நிற்கின்றன.

பாடல் – 9

(அனைத்தும் வசமாக)

கருத்தன, எந்தை தன் கண்ணன், வண்ணக் கனகவெற்பில்
பெருத்தன, பால்அழும் பிள்ளைக்கு நல்கின, பேரருள்கூர்
திருத்தன பாரமும் ஆரமும், செங்கைச் சிலையும், அம்பும்
முருத்தனமூரலும், நீயும், அம்மே! வந்துஎன்முன் நிற்கவே.

பொருள்:

அன்னை அபிராமியின் தாய்மை சொரியும் முலைகள் தங்க நிறமான மேரு மலைகளைப் போன்றவை, அவைகள் தான் பசிக்கு அழுத திருஞானசம்பந்தருக்கு ஞானத்தை நல்கின. இத்தகைய பெரும்பாரமான மார்பகங்களும், அவற்றின் மேல் புரளும் அழகிய திருவாபரணகளும், கரும்பு வில்லும் மலர் அம்புகளும், எல்லாவற்றுக்கும் மேலான அழகான புன்னகையும் கொண்டு, எப்போதும் எந்தன் தந்தை சிவ பெருமானின், கருத்திலும் கண்களிலும் நீங்காது நிற்பவள். இத்தகைய சிறப்புக்கள் வாய்ந்த தாயே நீ என் முன் காட்சியருள வேண்டுகிறேன்.

பாடல் – 10

 (மோட்ச சாதனம் பெற)

நின்றும், இருந்தும், கிடந்தும், நடந்தும் நினைப்பது உன்னை;
என்றும் வணங்குவது உன்மலர்த்தாள்; எழுதாமறையின்
ஒன்றும் அரும் பொருளே! அருளே! உமையே இமயத்து
அன்றும் பிறந்தவளே! அழியா முத்தி ஆனந்தமே!

பொருள்:

என் அன்னை அபிராமியே, உணர்வதர்க்கறிய வேதங்களின் பொருளான அறிய பொருளே, உமையவளே, இமயமலையில் பிறந்தவளே, என்றும் அழியாத முக்தி ஆனந்தமாக விளங்குபவளே, நான் நின்றாலும், இருந்தாலும், கிடந்தாலும், நடந்தாலும் எப்போதும் தியானிப்பது உன்னைத் தான், என்றும் வணங்குவது உன் மலர்த் திருவடிகளை மட்டும் தான்.

அன்புடன்,

ரேணுகா @RenugaRain

Advertisements

3 thoughts on “அபிராமி அந்தாதி #5

  1. புதுசா ஆரம்பித்து உள்ளீர்களா? அருமை! நீங்கள் எழுதிய விளக்கம் எளிதாக புரிகிறது. தொடர்ந்து படிக்கிறேன் 🙂

    amas32

    1. மிக்க நன்றி அம்மா.. ஆம். பத்து பாடல்களுக்கு விளக்கம் எழுதியாகி விட்டது. இன்னும் தொண்ணூறு பாடல்கள் உள்ளன..

Leave a Reply

Fill in your details below or click an icon to log in:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out /  Change )

Google+ photo

You are commenting using your Google+ account. Log Out /  Change )

Twitter picture

You are commenting using your Twitter account. Log Out /  Change )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out /  Change )

w

Connecting to %s