படித்தல் தொழில்!!

ஹாய் செல்லம்ஸ்,

இன்றைய சிந்தனை “படித்தல் தொழில் பழகு”

ஒரு மொழியை முழுமையாகக் கற்றுத் தேற அதன் இலக்கணம் மட்டும் படித்தால் போதாது, இலக்கியமும் படித்திருக்க வேண்டும்.  வள்ளுவனும், அவ்வையும் தெரியாமல் தமிழில் பாண்டித்தியம் பெறமுடியாது. அதே போலத் தான் ஆங்கிலமும். வெறும் பேச்சு வழக்கு ஆங்கிலம் கல்லாக் கட்ட உதவலாம், ஆனால் ஆங்கில இலக்கியங்கள் தெரியாதவன் ஆங்கிலம் அறிந்தவன் ஆக மாட்டான்.

மனிதன் தோன்றிய காலம் தொட்டே படித்துக் கொண்டே தான் இருக்கின்றான். மண், வானம், காட்டு விலங்குகள், மற்ற மனிதர்கள் என ஆரம்பித்து அவன் படித்தல் தொழில் சிறப்பாக நடந்தேறி வருகிறது. படித்தல் என்பது வெறும் ஓலைச் சுவடுகளோடும், புத்தகங்களோடும் மட்டும் நின்றுவிட்டால் அது முழுமையான படிப்பாகாது, சிந்தனையை தூண்டி நம்மை அதன் உலகிற்கு இட்டுச் செல்லவேண்டும்.

நமக்கு பாடம் படிப்பதை விட பொழுதுபோக்காகப் படிப்பதே விருப்பம். அதிலும் சக மனிதர்களைப் படித்தல் மிக விருப்பம். எத்தனை தேர்வுகள் வைத்தாலும் நாம் அதில் தேறப் போவதில்லை என்பது வேறு விஷயம். குடும்பத்தாரை, நண்பர்களை, உறவினரைச் சரியாகப் படித்தவன் எதிலும் தோற்றுப் போவதில்லை. அவனுக்குச் சென்றவிடமெல்லாம் சிறப்புத் தான்.

தற்கால பொழுது போக்குச் சாதனங்களால் புத்தகம் படித்தல் பாதிக்கப்பட்டுள்ளது உண்மைதான். புத்தக விற்பனை குறைந்துள்ளது என்று அறிஞர்களால் கவலை கொள்ளப் படும் நிலை ஏற்பட்டு விட்டது. ஆனால், அதே நேரம் படித்தல் தொழில் சீரோடும் சிறப்போடும் நடைபெற்றுக் கொண்டுதான் இருக்கிறது. புத்தகங்கள் pdf  வடிவில் கொத்துக் கொத்தாகத் தரவிறக்கப்படுகின்றன. அந்த விவரங்களுக்குத் தனிப் பதிவே போடலாம். அடுத்து குறுஞ்செய்திகள், எங்கோ எழுதப்பட்டு வார்த்தை வித்தைகள் சூழப் பெற்று கும்பல் கும்பலாக வலம் வருகின்ற குறுஞ்செய்திகள் அடுத்த சான்று. சமூக வலைத் தளமும், நம் உற்ற நண்பனுமான  ட்விட்டர் ஒரு மிகப் பெரும் சான்று.

இப்படியாக படித்தல் தொழில் எந்த குறையும் இல்லாமல் நடந்து வரக் காரணங்களும் இல்லாமல் இல்லை. மனிதன் பேச ஆரம்பிப்பதற்கு முன்னமே எழுதிப் பழக ஆரம்பித்து விட்டான். அது கூட நம் படிப்பார்வத்திற்குக் காரணமாக இருக்கலாம். மேலும் படித்தல் ஒரு அற்புதம். கேட்டலை விட, பார்த்தலை விட ஒரு படி மேலானது.

உதாரணமாக, “தேவதை போன்ற பேரழகான இளம்பெண் ஒருத்தி தேன் குரலில் கானமிசைத்தாள்”. இந்த வாக்கியம் படிக்கும் போதே நம் கற்பனைத் திறன் வெகு ஜோராக வேலை செய்ய ஆரம்பித்துவிடும். உண்மையில் அந்தப் பெண் நம் மனதில் உயிர் பெற்று, கானமிசைத்துக் கொண்டே இருப்பாள், நம் நினைவில் உள்ளவரை. இப்படி படித்தல் நமக்குத் தரும் கற்பனாசக்தியை, கருத்து சுதந்திரத்தை பார்த்தலும் கேட்டலும் தந்து விடாது என்று என் அபிப்ராயம்.

எழுத்தறிவின் முக்கியத்துவத்தை மக்களுக்கும் சமூகத்துக்கும் அமைப்புகளுக்கும் அறிய வைக்கும் நோக்குடன், 1966-ல் இருந்து ஒவ்வோர் ஆண்டும் செப்டம்பர் 8 ஆம் நாள், சர்வதேச எழுத்தறிவு தினம் கொண்டாடப்படுகிறது – courtesy – விகடன்

இன்று சர்வதேச எழுத்தறிவு தினம் என்று அறிகிறேன். எழுத்தறிவித்த இறைவனுக்கு நன்றிகள் பல!!

நன்றி,
ரேணுகா @RenugaRain

Advertisements

16 thoughts on “படித்தல் தொழில்!!

 1. எல்லாமே புரிஞ்சுதுங்க…இந்த `இலக்கியம் இலக்கியம்`அப்படீன்னு சொல்றாங்களே…அதானுங்க என்னன்னு புரியலை!…மத்தபடி நல்லா இருக்குங்கோவ்!

 2. Nice! Thanks for letting us know

  **செப்டம்பர் 8 ஆம் நாள், சர்வதேச எழுத்தறிவு தினம் கொண்டாடப்படுகிறது**

  Good luck!

 3. Mmm very nice.

  keep writing. one more suggestion why don’t you give or write bhavat geetha slogans Tamil verson.

  think it and do it for our people.

 4. தேவதை போல /// இங்கே நிறுத்தி விட்டு நான் தூங்கச் செல்கிறேன். கனவில் சந்திப்போம் 🙂

Leave a Reply

Fill in your details below or click an icon to log in:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out /  Change )

Google+ photo

You are commenting using your Google+ account. Log Out /  Change )

Twitter picture

You are commenting using your Twitter account. Log Out /  Change )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out /  Change )

w

Connecting to %s