அபிராமி அந்தாதி #6

Image

 

பாடல் – 11

(இல்வாழ்க்கையில் இன்பம் பெற)

ஆனந்தமாய் என் அறிவாய், நிறைந்த அமுதமுமாய்,
வான் அந்தமான வடிவுடையாள், மறை நான்கினுக்கும்
தான் அந்தமான சரணார விந்தம் தவளநிறக்
கானம் தம் ஆடரங்கம் எம்பிரான் முடிக்கண்ணியதே.

பொருள்:

ஆனந்த உருவே, என் அறிவே, நிறைந்திருக்கக் கூடிய அமிழ்தமே, ஆகாயத்தை எல்லையாகக் கொண்ட பஞ்ச பூதங்களான, நிலம், நீர், காற்று, நெருப்பு ஆகியவற்றின் வடிவங்கொண்டவளே,  நான்கு வேதங்களின் எல்லையாக இருக்கும் அன்னை அபிராமியே, உந்தன் தாமரை போன்ற பாதங்கள், வெண்ணிறச் சாம்பல் காட்டில் திருநடனம் புரியும் எம் ஆண்டவனின் திருமுடியில் சூடியிருக்கும் மாலையாகத் திகழ்கிறது.

 

 

பாடல் – 12

(தியானத்தில் நிலைபெற)

கண்ணியது உன்புகழ் கற்பது உன் நாமம், கசிந்து பத்தி
பண்ணியது உன் இருபாதாம் புயத்தில், பகல் இரவா
நண்ணியது உன்னை நயந்தோர் அவையத்து; நான் முன்செய்த
புண்ணியம் ஏது? என் அம்மே, புவி ஏழையும் பூத்தவளே.

பொருள்:

என் தாயே! உலகேழும் பெற்றவளே! நான் எப்போதும் உன் புகழையே நினைக்கிறேன், உன் திருநாமங்களையே கற்கிறேன், உனதிருத் தாமரைப் பாதங்களைத் தான் உள்ளம் கசிந்து பிரார்த்திக்கிறேன். நான் இரவென்றும் பகலென்றும் பாராது சேர்ந்திருப்பது உன்னை விரும்பித் தொழும் உன் அடியவர்களுடன் தான். இவற்றையெல்லாம் செய்து உன்னை சேர்ந்திருக்க முற்பிறவியில் என்ன புண்ணியம் செய்தேனோ, அறியேன்.

 

பாடல் – 13

(வைராக்கிய நிலை எய்த)

பூத்தவளே புவனம் பதினான்கையும்; பூத்தவண்ணம்
காத்தவளே பின்கரந்தவளே! கறைக் கண்டனுக்கு
மூத்தவளே! என்றும் மூவா முகுந்தற்கு இளையவளே!
மாத்தவளே உன்னை அன்றிமற்றோர் தெய்வம் வந்திப்பதே!

பொருள்:

ஈரேழு பதினான்கு உலகங்களையும் பெற்றவளே, பெற்றதோடல்லாமல், போற்றிப் பாதுகாத்தவளே, பின் அழித்தவளே, ஆலகால விஷத்தைத் தன் கண்டத்தில் கொண்ட ஈசனுக்கு மூத்தவளே, என்றென்றும் இளமையான திருமாலின் தங்கையே, பெருந்தவம் புரிபவளே, உன்னையன்றி வேறு தெய்வத்தைத் தொழுவேனோ!!

 

அன்புடன்,
ரேணுகா @RenugaRain

Advertisements

4 thoughts on “அபிராமி அந்தாதி #6

 1. `அபிராமி அந்தாதி`,அதற்கான பொழிப்புரை என்பதாக பதிவு இருக்கிறது…அபிராமி அந்தாதி உங்கள் மனதில் ஏற்படுத்திய தாக்கத்தை..உங்கள் கோணத்தில் எழுதினால் இன்னும் சிறப்பாக இருக்கும்!

  1. நன்றி பாஸ். முயற்சி செய்கிறேன். ஒரு ஐம்பது பாடல்களுக்குப் பிறகு அதற்கு தைரியம் வந்தால் கண்டிப்பாக எழுதுகிறேன். நன்றி ;)))

 2. //ஆலகால விஷத்தைத் தன் கண்டத்தில் கொண்ட ஈசனுக்கு மூத்தவளே, என்றென்றும் இளமையான திருமாலின் தங்கையே, பெருந்தவம் புரிபவளே, உன்னையன்றி வேறு தெய்வத்தைத் தொழுவேனோ!!//

  இந்த வரிகள் அருமை, பெரும் பொருள் நிறைந்தவை! ஈசனுக்கு மூத்தவளே, என்றென்றும் இளமையான திருமாலின் தங்கையே, – ஒரே வரியில் எப்படி இரு வேறுபட்ட கருத்துக்களை சொல்கிறார் பாருங்கள்!

  ரொம்ப நல்ல சேவை செய்கிறீர்கள், எப்படி இதை ஆரம்பிக்க வேண்டும் என்று தோன்றியது? தொடரட்டும் உங்கள் பணி :-))

  amas32

  1. எப்படி என்று எனக்கும் தெரியவில்லை அம்மா. இந்த பாடல்களை மனப்பாடம் செய்யும் முயற்சியில் உள்ளேன். பொருள் தெரிந்து கொள்ள இந்த சிறு முயற்சியும் சேர்ந்து கொண்டது. உங்கள் அன்புக்கு நன்றிகள். ;))

Leave a Reply

Fill in your details below or click an icon to log in:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out /  Change )

Google+ photo

You are commenting using your Google+ account. Log Out /  Change )

Twitter picture

You are commenting using your Twitter account. Log Out /  Change )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out /  Change )

w

Connecting to %s