ரஜினிகாந்தும் வில்ஸ்மித்தும்!!

Image

 

மனிதனின் நிறம் பற்றிய பதிவு எழுத வேண்டும் என்பது என் நீண்ட நாள் எண்ணம். இப்போதுதான் சிறிது நேரமும், மின்சாரமும் கிடைத்தது. நமது தோலில் உள்ள மெலனின் என்னும் நிறமி தான் நிறத்தைத் தீர்மானிப்பதில் முதன்மையான பங்கு வகிக்கிறது. அதன் அடர்த்திக்கேர்ப்ப நம்மை கருப்பாகவும், மாநிறமாகவும், சிவப்பாகவும் காட்டும் வல்லமை படைத்தது.

தோலின் நிறத்தால் ஏற்பட்ட பிரிவினைகள், வெறிச்செயல்கள், யுத்தங்கள் எனப் பலவற்றை இந்த உலகம் கண்டிருக்கிறது. நல்ல வேலையாக இந்த நிறமி ரத்தத்தின் நிறத்தை மாற்றவில்லை. அப்படி மட்டும் இருந்திருந்தால் கருப்பு ரத்தம் கொண்டவன் மனிதன் கிடையாது என்று வகை பிரித்திருப்பார்கள். அதற்கு மட்டும் கடவுளுக்கு நன்றி கூறித் தொடர்வோம்.

Image

நமது தமிழக மக்களின் சராசரி நிறம் மாநிறம் என்று வைத்துக் கொண்டாலும், ஏன் பெரும்பாலான மக்கள் சிவப்பு வெறி கொண்டு அலைகிறார்கள் என்பது புரியாத புதிர். “கருப்பு தான் எனக்கு பிடித்த கலர்” என்று சொல்பவர்கள் கூட திருமணச் சந்தையில் முதலில் தேடுவது சிவப்பான வரன்களைதான். சிகப்பழகுச் சாதனங்கள் இன்றில்லாவிட்டாலும் நாளை பலன் தரும் என்று நம்பி வாங்கி ஏமாறுவதும் நாம்தான்.

நிறம் பற்றி பேச ஆரம்பிக்கையில், என் மனதிற்குள்ளேயே பல எண்ண ஓட்டங்கள், குறுக்குக் கேள்விகள் அப்பப்பா. நிறம் பற்றிய அபிப்ராயங்கள், கருத்துகள் மிகச் சாதாரணமாகவே எல்லா வகுப்பினர் மத்தியிலும் நிலவுகிறது. “பணம் வந்துட்டா காக்கா கூட கலரா மாறிடும்” சிகப்பா இருக்கறவன் பொய் சொல்ல மாட்டான்” இதெல்லாம் மிக சகஜமாக பேசப்படுகிற வசனங்கள். சிகப்பாக இருப்பவரிடம் சென்று ஆங்கிலத்தில் தான் பேசவேண்டும் என்கிற மனநிலையும்.

Image

ஒரு குழந்தை பிறந்ததும் ஜாதகம் பார்ப்பது போலவே, காது மடல்களை வைத்து நிறம் கண்டுபிடிக்கும் ஆராய்ச்சியாளர்கள்(!!??) அதிகம் உள்ள நாடு நமது. “என் அம்மா ஒன்னும் கருப்பு இல்லை” என்று தன பாட்டியிடம் வாதாடி அழத்தொடங்கிய சிறுமியைப் பார்த்திருக்கிறேன். அந்தக் குழந்தை கருப்பு நல்ல நிறம் அல்ல என்று எப்படி உணர்ந்தது? இப்படிப் பட்ட பக்குவம் இல்லாத குழந்தை வளர்ப்பு அந்தக் குழந்தைக்கு நல்ல கல்வியைத் தரலாம். ஒரு மாநிலத்திற்க்கே முதலமைச்சர் ஆக்கலாம். ஆனாலும் அது எதிர்கட்சித் தலைவரை கருப்பு என்று ஏளனம் செய்யும் நிலைமைக்கு வந்தால் அதுதான் கொடுமை.

Image

திரு. இறையன்பு அவர்களின் புத்தகத்தில் படித்த ஒரு சுவையான, ஆனால் வருத்தம் தரக் கூடிய செய்தி உங்களுக்காக. ஒருமுறை நெல்சன் மண்டேலா அவர்கள் விமானத்தில் செல்லும் போது, தன விமானத்தின் ஓட்டுனர் கருப்பினத்தை சேர்ந்தவர் என்பதை அறிந்தார். அறிந்தவுடன் அவர் மனதில் தோன்றிய எண்ணம் என்னவாக இருக்கும் என்று நினைக்கிறீர்கள்? அவர் சிறிது தயங்கினார், ஆம். “கருப்பினத்தைச் சேர்ந்த விமானி சரியான பயிற்சி பெற்றிருப்பாரா, பாதுகாப்பாக தன்னைக் கொண்டு சேர்ப்பாரா” என்பது தான். அதை மனதில் எண்ணிய அடுத்த நிமிடமே தன தவறை உணர்ந்தாராம். ஒரு மாபெரும் மனிதனையே, அதிலும் கருப்பினராய்ப் பிறந்து, அந்த இனத்திற்காகப் பாடுபட்ட ஒருவரை இப்படி யோசிக்க வைக்கிறது என்றால் அதை என்னவென்று சொல்வது.

Image

சிகப்பு கருப்பு என்பது வெறும் தோலின் நிறம் தான் என்று இருசாரரும் உணர வேண்டும் என்பது என் ஆவல். கருப்பாய் இருப்பவர்கள் தங்கள் தாழ்வு மனப்பான்மையை விட்டுவிட வேண்டும். சிகப்பழகுக் கிரீம்கள் தோலை நிறம் மாற்றுகிறதோ இல்லையோ மனதை அழுக்குப் பிடிக்கச் செய்கின்றன.   நாம் ரசிக்கும் ரஜினிகாந்தும், வில் ஸ்மித்தும் கருப்பு தான். மைக்கேல் ஜாக்சன் ஒரு தவறான உதாரணம். கருப்பு என்று சொல்ல இதுவரை சங்கடப் பட்டவர்கள் கருப்பு என்று உரக்க சொல்லுங்கள். கோபிநாத்  நீயா நானாவின் இறுதியில் சொல்வது போல இந்த தலைப்பு முதலில் சாதாரணமாகத் தோன்றினாலும் இதன் அடிப்படையில் உள்ள வலிகளைப் புரிந்து கொள்வோம்.

நன்றி

அன்புடன்
ரேணுகா @RenugaRain

Image

Advertisements

8 thoughts on “ரஜினிகாந்தும் வில்ஸ்மித்தும்!!

  1. நல்லாருக்குங்க.. கருப்பு தான் எனக்கு புடிச்ச கலரு.. டோட்டோ டோய்ங்… @karthiktrends

Leave a Reply

Fill in your details below or click an icon to log in:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out /  Change )

Google+ photo

You are commenting using your Google+ account. Log Out /  Change )

Twitter picture

You are commenting using your Twitter account. Log Out /  Change )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out /  Change )

w

Connecting to %s