அபிராமி அந்தாதி #8

Image

என் அன்னை அபிராமி எனக்கு நீண்ட இடைவேளை கொடுத்துவிட்டாள். இனி என்னுடனே இருந்து இந்தத் தொகுப்பை முடிக்க உதவி செய்யுமாறு அன்னையை இறைஞ்சி விட்டு ஆரம்பிக்கிறேன்.

பாடல் – 17

(கன்னிப் பெண்களுக்கு நல்ல வரன் அமைய துதிக்க வேண்டிய பாடல்)

எத்தனை அழகான பாடல்! இந்த பாடலின் இனிமையிலிருந்து மீள்வது கடினம்..!

அதிசயமான வடிவுடையாள், அரவிந்தமெல்லாம்
துதிசய ஆனன சுந்தரவல்லி, துணைஇரதி
பதிசயமானது அபசயம் ஆக முன் பார்த்தவர் தம்
மதிசயமாக அன்றோ வாமபாகத்தை வவ்வியதே.

பொருள்:

அபிராமி அன்னையானவள் எல்லாரும் வியக்கும் வண்ணம் அழகான வடிவுடையவள். அருமையான தாமரை மலர்கள் எல்லாம் துதிக்கப் பெறுகின்ற அழகு முகம் கொண்டவள். ரதி தேவியின் கணவனான மன்மதன் முன்னால்  பெற்ற வெற்றிகளை எல்லாம் தோல்வியாக்கி அவனை நெற்றிக் கண்ணால் சுட்டெரித்தவர் சிவபெருமான். அப்படிப்பட்டவரின் மனதையும் கவர்ந்து அவரின் இட  பாகத்தை சொந்தமாக்கிக் கொண்டாள்.

 Image

பாடல் – 18

 (மரண பயம் நீங்க படிக்க வேண்டிய பாடல்)

காலா!  என் முன்னே வாடா, வகை பாடல்.. 🙂

வவ்விய பாகத்து இறைவரும், நீயும் மகிழ்ந்திருக்கும்
செவ்வியும், உங்கள் திருமணக்கோலமும் சிந்தையுள்ளே
அவ்வியம் தீர்த்தென்னை ஆண்டபொற்பாதமும் ஆகிவந்து
வெவ்விய காலன் என்மேல்வரும் போது வெளிநிற்கவே.

பொருள்:

கொடிய காலன் என் மேல் ஆட்சி செய்ய வரும் நேரத்தில், என் அகத்திலும், வெளியிலும் எனக்குண்டான பந்தபாசங்களையும், ஆணவத்தையும் அகற்றி என்னை ஆட்கொண்ட பொற்பாதங்களுடன், ஈசனுடன் இரண்டறக் கலந்த அர்த்தநாரீஸ்வரர் கோலத்திலும், தனித் தனியே திருமணக் கோலத்திலும் எனக்கு தரிசனம் தந்தருள்வாய் தாயே.

 Image

பாடல் -19

(பேரின்ப நிலையடையச்  செய்யும் பாடல்)

அன்னையை உணர்ந்ததால் கொண்ட மகிழ்ச்சியின் வெளிப்பாடு, பட்டரின் பாடலை உணர்ந்து படிக்கையில் நமக்கும் தோன்றுகிறது.

வெளிநின்ற நின் திருமேனியைப்பார்த்தேன் விழியும் நெஞ்சும்,
களிநின்ற வெள்ளம் கரை கண்டதில்லை; கருத்தினுள்ளே
தெளிநின்ற ஞானம் திகழ்கின்றது என்ன திருவுளமோ?
ஒளிநின்ற கோணங்கள் ஒன்பதும் மேவி உறைபவளே.

ஒளி  பொருந்திய நவசக்தியாகிய ஒன்பது கோணங்களில் உறைகின்ற அன்னை அபிராமியே, இந்த அகன்ற அண்டசராசர வெளியில் நிறைந்து நிற்கிற நினது திருமேனியை தரிசித்த பயனாக என் விழிகளிலும், மனதிலும் மகிழ்ச்சியின் வெள்ளம் கரை காணாமல் துள்ளுகிறது. ஆயினும் என் உள்ளமானது தெளிவான ஞானம் கொண்டு விளங்குவது உன் திருவருளால் அன்றி வேறென்ன?!

Image

பாடல் – 20

(வீடு வாசல் முதலிய செல்வங்கள் உண்டாக படிக்க வேண்டிய பாடல்)

நெகிழச் செய்யும் பக்தனின் பாடல்..!

உறைகின்ற நின் திருக்கோயிலில் நின்கேள்வர் ஒருபக்கமோ?
அறைகின்ற நான்மறையின் அடியோ? முடியோ? அமுதம்
நிறைகின்ற வெண்திங்களோ? கஞ்சமோ? எந்தன் நெஞ்சமோ?
மறைகின்ற வாரிதியோ? பூரணாசல மங்கலையே.

என்றென்றும் பூரணமாக விளங்கும் என் அன்னையே, நீ மகிழ்ந்து உறையும் திருக்கோவில், உன்  பதியாகிய பரமேஸ்வரனின் ஒரு பாகமோ? ஓதப்படும் நான்கு வேதங்களின் ஆரம்பமா? அல்லது முடிவா? அமுதம் நிறைந்த வெண்ணிலவோ? வெண் தாமரையோ? உன்னைத் துதிக்கும் என் நெஞ்சமே தானோ ? செல்வங்களை தன்னுள்ளே மறைத்து வைத்துள்ள பாற்கடலோ? தாயே, நீ எல்லா இடங்களிலும் வியாபித்து இருப்பதால் எதில் என்று தோன்றவில்லையே!

அன்புடன்,

ரேணுகா @RenugaRain

Advertisements

3 thoughts on “அபிராமி அந்தாதி #8

  1. Good sayings are like pearls strung together.

    Nice Rain….Nice going. Day by day your writing skills are superb..

    after that pls try to wrote about Stress Management as usual your style. Now a days Peoples are getting Stress in little, small, Micro, Nano issues.. Think about that.

    Keep writing…

Leave a Reply

Fill in your details below or click an icon to log in:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out /  Change )

Google+ photo

You are commenting using your Google+ account. Log Out /  Change )

Twitter picture

You are commenting using your Twitter account. Log Out /  Change )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out /  Change )

w

Connecting to %s