சாலையைக் கடக்கக் கால் மணி நேரம்

இன்று காலை ஒரு சின்ன சாலையை கடப்பதற்கு கால் மணிநேரம்..!

கால் மணிநேரம்/ பதினைந்து நிமிடங்கள்/ தொள்ளாயிரம் வினாடிகள்..!

காலை வெய்யிலில் மரங்கள் வெட்டப் பட்ட சாலையோரத்தில், அந்த பதினைந்து நிமிடங்கள் பல யுகங்களாக தெரிந்தது. என்னுடன் ஒரு பாட்டி, பள்ளி சிறுவர்களை அழைத்துச் செல்லும் இரு பெண்கள் மட்டும் சாலையை வெறித்துக் கொண்டு இருபுறமும் மாறி மாறிப் பார்த்தவாறு நிற்கிறோம். சில ஆண்கள் ஓடிச் சென்று சாலையைக் கடந்தவாறு இருக்கிறார்கள். நாங்கள் நின்றுகொண்டே இருக்கிறோம். (நாங்கள் சாலையைக் கடக்க முயற்சித்த இடம் ஒரு பேருந்து நிறுத்தம்).

கடைசியாக அந்த பாட்டி கையைப் பிடித்தவாறு எல்லாரும் சாலையைக் கடந்தே விட்டோம் ஒரு லாரியின் இடைவெளியில்(!!). இவ்வாறு நேர்வது முதன் முறை அல்ல. அச்சமயங்களில் என் மனதில் தோன்றும் ஏகப்பட்ட கேள்விகள், பின்வருமாறு;
1. இந்த சாலைகள், தார் ரோடுகள் வண்டி வாகனம் வைத்திருப்பவர்களுக்கு மட்டுமே உரியதா?
2. பாதசாரிகள் நடந்து செல்வதற்கு சில இடங்களில் அமைக்கப் பட்டுள்ள சிக்னல்கள் மட்டும் போதுமா?
3. நாங்கள் எல்லாம் தேவை இல்லாமல் நடந்து வந்து விட்டோமா? இல்லை சாலையைக் கடக்க வேண்டும் என்று நினைப்பதே பிழையா?
4. நடந்து செல்பவர்களை  எதோ தேவை இல்லாமல் பிறந்து விட்டவர்களைப் போல எரிச்சலுடன் பார்த்து விட்டு வழி  விடாமல் செல்வது இங்கே இந்தியாவில் மட்டும் தான் நடக்கிறதா?
5. சில வெளி நாடுகளில் மக்கள் பாதசாரிகளுக்கு வழி  விட்டு பின் வாகனத்தை எடுத்துச்  செல்வார்கள் என்று படித்திருக்கிறேன். அந்த அளவு நாம் நாகரிகவாதிகள் ஆக இன்னும் பல நூற்றாண்டுகள் ஆகும் போல் தெரிகிறதே?
6. நம் நாடு பெண்களையும் குழந்தைகளையும் போற்றிக காக்கும் நாடு என்பதெல்லாம் பொய் தானே?
7. இவ்வளவு அவசர கதியில் யாருக்கும் இடம் /வழி  விடாமல் முந்திச் செல்கிறார்களே, அவர்களுக்கேல்லாமே அத்தனை அவசர வேலைகள் இருக்குமா?
8. இத்தனை துடிப்புடன் வேலைக்குச் சென்று சுறுசுறுப்பாக வேலைகள் செய்வார்கள் என்றால் இந்தியா இன்னும் என் வல்லரசாக மாறவில்லை?

அன்புடன்
ரேணுகா @RenugaRain

 

Advertisements

2 thoughts on “சாலையைக் கடக்கக் கால் மணி நேரம்

  1. இது ஒரு தனிப்பட்ட ஒழுக்கம் சார்ந்த விஷயமில்லை. இது ஒரு சமூகம் சார்ந்த ஒழுங்கின பிரச்னையாக தான் நான் பார்க்கிறேன் ரேணு. பஸ்ஸுல் சீட்டுக்கு இடம் பிடிப்பதில் இருந்து, ரேஷன் கடையில் மண்ணென்னைய் வாங்கும் வரைக்கும் கூட்டத்தில் நாம் செய்யும் ஒழுங்கீனங்கள் , நம்மை மட்டுமில்லாது ஒரு சமூக பழக்க வழக்கமா மாறுகிறது. கண்டிப்பாக ரோட்டை கிராஸ் செய்வது நமக்கு சவால் தான். தேசிய நெடுஞ்சாலையை போடும் போது இது மாதிரி கிராஸிங்ஸ் நிறைய வேண்டும். குறிப்பாக திண்டிவனம் சென்னை ரோட்டில் 500மீட்டர் தூரத்துக்குள் சர்வ சாதரணமா ரோட்டில் குறுக்கே நடந்து போகும் மனிதரை பார்க்க பகீர் என்கிறது. சீக்கிரம் போக மாட்டாரா என்று மனம் பதைக்கிறது. கண்டிப்பாக இதை சரி செய்யாவிட்டால், ரோட்டோர விபத்துக்கள் தொடர்ந்து கொண்டுதான் இருக்கும்! பொறுப்பான சிந்தனை. தொடர்ந்து சிந்தியுங்கள். குறிப்பு # வீட்டிற்க்கு போய் சிந்தித்தால் போதுமானது, க்ராஸ் செய்யும் போது கவனம் ரோட்டில் இருக்கட்டும்!
    இப்படிக்கு , கவலையுடன் கட்டதொர!

Leave a Reply

Fill in your details below or click an icon to log in:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out /  Change )

Google+ photo

You are commenting using your Google+ account. Log Out /  Change )

Twitter picture

You are commenting using your Twitter account. Log Out /  Change )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out /  Change )

w

Connecting to %s