வலிகளைத் தாங்கு!!

எனக்கு வந்த ஒரு சிறந்த மின்னஞ்சலைப் பகிர்கிறேன்..

528253dd-c3aa-485d-885f-0d1f61876b83OtherImage

 

வலிகளைத் தாங்கு – திரு வெ.இறையன்பு

நன்றி: புதிய தலைமுறை // 6.12.12 (பக்கம் 37)

  • சின்ன வயதிலிருந்தே வலிகளைத் தாங்கும் பக்குவத்தை சிறிய பயிற்சிகளின் மூலம் நாம் ஏற்படுத்திக் கொள்ள வேண்டும்.
  • பல நேரம் தண்ணீர் குடிக்காமல் தாகத்துடன் இருக்கப் பழக வேண்டும்.
  • தேவையானவை உடனே கிடைத்து விட்டால் வாழ்க்கையின் அருமை நமக்கு புரியாமலே போய் விடுகிறது.
  • சில வேளைகள் பட்டினி இருக்க வேண்டும்,பசியை நாம் உணர வேண்டும், அது ஒரு விதமான மனப்பயிற்சி.
  • நிறைய தூரம் நடந்து போக வேண்டும்.எடிசன் ஒரு முறை வயிறு வலித்ததால் காரை நிறுத்தி விட்டு அலுவலகத்திற்கு நடந்தே சென்றாராம். ஆனால் வயிற்றுவலி சரியாகவில்லை. நண்பர்களிடம் சொன்னாராம், ‘நடந்தால் வயிற்றுவலி குணமாகாது என்று கற்றுக் கொண்டேன்’.
  • குளிர்காலத்தில் அதிக கதகதப்பான உடைகள் அணியாமல் தூங்குவது, வெயில் காலத்தில் மின்விசிறி கூட இல்லாமல் வியர்க்கப் பழகிக் கொள்வது போன்றவற்றின் மூலம் உடலைப் பக்குவப் படுத்த வேண்டும்.
  • ‘எவ்வளவு நேரம் விழித்திருந்தாலும் பரவாயில்லை, பணியை முடிப்பேன்’ என்று வைராக்கியத்துடன் காத்திருப்பது,ஒவ்வொரு நாளும் பயிற்சி செய்கிற நேரத்தை அதிகப்படுத்துவது, குறைபாடுகளை உரிய முயற்சியின் மூலம் வென்றெடுப்பது என்று மனரீதியாகவும், உடல் ரீதியாகவும் நம்மை பலப்படுத்திக் கொள்ள வலிகள் தேவை.
  • பெண், வலியைப் பொறுத்துக் கொள்ள மறுத்திருந்தால் மனித இனமே உருவாகியிருக்காது என்பதை உணர வேண்டும்.
  • சொகுசான வாழ்க்கையும், பாதுகாப்பான ஏற்பாடுகளும் நம்மை நன்றாக வளர்ப்பதாக எண்ணச் செய்யுமே தவிர அவை உண்மையல்ல. போராட்டங்களைச் சந்தித்து நிச்சயமற்ற தன்மைகளை எதிர்கொள்ள மனமும், உடலும் பயிற்சி பெற்றால் தான் சரியான வளர்ப்பு முறை உருவாகும்.
  • யாருடைய சுண்டு விரலையோ பிடித்துக் கொண்டு எப்போதும் பயணித்து விடலாம் என்று நினைப்பவன் திடீரென இருட்டறையில் கண்ணைக் கட்டி விட்டதைப் போல அவதிக்குள்ளாவான்.
  • காயப்பட்டால் இயற்கையாகக் குணமாவதற்கு அனுமதிக்க வேண்டும். சின்னக் காய்ச்சலுக்கும் உடனடியாக மாத்திரைகளை உண்டு சரிப்படுத்திக் கொண்டு எதிர்ப்பு சக்தியை நீர்த்துப் போகச் செய்யக் கூடாது.
  • உடலில் பெறுகிற அடிகளையும், மனத்தில் விழுகிற அடிகளையும் சலனப்படாமல் தாங்கிக் கொள்வது தான் உணர்ச்சி மேலாண்மை. அவர்களே சின்னச் சின்னப் போர்களில் தோற்றாலும் மகத்தான போரில் மாபெரும் வெற்றிகளை ஈட்டுகிறார்கள்.
அன்புடன்,
ரேணுகா
Image courtesy:
Advertisements

3 thoughts on “வலிகளைத் தாங்கு!!

  1. சாதம் வேகவில்லை என்றால் அரைவேக்காட்டு சோற்றை உண்ண பழகவேண்டும் நம்மால் அதிகம் சாதிக்கமுடியும் என்றாலும் இவ்வளவு தான் முடியும் என்று திருப்தி பட்டுகொள்ளவேண்டும்

Leave a Reply

Fill in your details below or click an icon to log in:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out / Change )

Twitter picture

You are commenting using your Twitter account. Log Out / Change )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out / Change )

Google+ photo

You are commenting using your Google+ account. Log Out / Change )

Connecting to %s