பிங்க் கலர் கடிகாரம்!!

Image
           நானும் என் நண்பர்களும் மிகுந்த கற்பனா வாதிகள், பேசுவதும் விவாதிப்பதும் எங்கள் பொழுதுபோக்கு. நாங்கள் ஒருமுறை தொலைத்து போவதைப் பற்றி பேசிக் கொண்டிருந்தோம். பேச்சு எங்கெங்கோ  சென்று பின் தன் மாய வலையை மெல்ல விரித்தது. நாம் சில நாட்கள் தொலைந்து போனால் என்ன என்று ஆரம்பித்து பிறகு தொலைந்து போவதற்காக மிக சிரத்தையுடன் திட்டமிடுவதில் முடிந்தது. ஒரு நல்லதொரு அமாவாசை தினத்தில் ஆளுக்கொரு தோல் பையுடன் ஒரு அடர்ந்த காட்டிற்குள்  கிளம்பிவிட்டோம்.
ஆளுக்கொரு பக்கம் செல்வதாக ஏற்பாடு. இதற்குப் பின் நான் மட்டும் தனியாகப் பயணிக்கவிருப்பதால் மற்றவர்களைப் பற்றிய வர்ணனை தேவை இல்லை. என் சிகப்பு நிறப் பையில் ஒரு தண்ணீர் குவளை, சில பல சாக்கலேட்டுகள், ஒரு கொசு விரட்டி தைலம், ஒரு சன்ஸ்க்ரீன் லோஷன், குறிப்பேடு, இரண்டு பேனாக்கள், ஒரு திசைகாட்டி, காட்டின் வரைபடம் மற்றும் சிகரட் லைட்டர் (நெருப்பு பற்ற வைக்க மட்டும்).  அட்டைப் பூச்சிகள் கடித்தால் என்ன செய்வதென்று கொஞ்சம் உப்பும், மஞ்சளும் எடுத்திருந்தேன். கருப்பு நிற ஷூ அணிந்திருந்தேன். தலையில் ஒரு மஞ்சள் வண்ணத் தொப்பி. அந்தக் காட்டில் புலி, சிறுத்தை, கரடி போன்ற கொன்று தின்பவை கிடையாது என்பதை அறிந்திருந்ததால் பயமில்லாமல் நடந்து கொண்டிருந்தேன்.
         கொஞ்ச தூரம் வரையில் எந்த கவலையுமே இருக்கவில்லை. சொல்லப் போனால் சுகமாகவே என் பயணம் தொடர்ந்தது. திசைகாட்டியைப் பார்த்துக் கொண்டு  நண்பர்கள்  செல்லும் எதிர்திசை பார்த்து நடக்கத் தொடங்கினேன். என் பிங்க் நிற பாஸ்ட் ட்ராக் கடிகாரத்தில் மணி பத்து என்றது. மாலை நான்கு மணிக்கு காட்டின் வெளியே சென்றுவிட வேண்டும் என்று தீர்மானித்திருந்தோம். அடர்ந்த காடானதால் மூன்று மணிக்கே இருட்டிவிடக் கூடும். நடையின் வேகத்தைக் கூட்டினேன். ஏதாவதொரு வித்தியாசமாக இருக்கிறதா என்று கண்களால் அலைந்து கொண்டே நடந்தேன். பழ அணில்கள் க்ரீச் க்ரீசென்று கத்திக் கொண்டு பயமூட்டியத்தை பொருட்படுத்தாமல் நடந்தேன். எதாவது அதிசயத்தை காணவேண்டும், அதை நண்பர்களிடம் பகிர்ந்து கொள்ள வேண்டும் என்ற ஆவல் என் பயத்தை போக்கிப் புத்துணர்வூட்டியது.
        சரியாக பனிரெண்டு முப்பதுக்கு, காலையில் தின்றிருந்த நான்கு ரொட்டித் துண்டுகளும்,  பழத்துண்டுகளும் தன சக்தியை வழங்கி முடித்திருந்தன.  வயிறு கிய்யாமுய்யாவென கத்தத் தொடங்கியது. ஒரு மெலிதான தூய நீரோடை கண்ணில் பட அருகமர்ந்தேன். நடக்கும் வழியில் பறித்துக் கொணர்ந்த சில நாவல் பழங்கள் மற்றும் அத்திபழங்களை  தின்று நீர் குடித்தேன். நீரோடை நீரின் ஜில்லிப்பில் களைப்பெல்லாம் பறந்துவிட என் மூளை எப்போதும் போல சற்று கிறுக்குத் தனமாக சிந்திக்கத் தொடங்கியது. நீரோடையைத் தொடர்ந்து செல்லும் பாறைகளின் மேல் தாவி ஏறலானேன். ஒரு முன்னூறு அடிகள் கடந்திருப்பேன். திடீரென பாறைகள் மறைந்து சமவெளி தோன்றியது. பல வகை பழ மரங்களும், நான் இதுவரை கண்டிராத மலர்ச்செடிகளும் சூழ நடந்து கொண்டிருந்தேன்.
         திடீரென, பல வருடங்கள் பழகிய என் வாழ்விடம் போல தோன்றியது. தேவலோகம் போன்ற அந்த அழகிய வனத்தின் நடுவில் ஒரு மேற்கூரை இல்லாத சிவன் கோவில். சுயம்பு லிங்கமாக இருக்க வேண்டும். மனித நடமாட்டம் இருப்பது போல் தெரியவில்லை. நான் அந்த சுற்றுப்புற அழகில் மயங்கி என்னை அறியாமல், அந்த இடத்தை சுத்தப் படுத்தத் தொடங்கினேன். சிவலிங்கத்தின்  முன் ஒரு இரண்டடி தள்ளி ஒரு சின்ன கல்லை அப்புறபடுத்த முயற்சித்தேன். அக்கல் பூமியில் புதைந்து இருந்ததால் மிகுந்த பிரயாசையோடு ஒரு வழியாகப்  பெயர்த்தெடுத்தேன். “படீர்” என்ற பெரும் சப்தத்துடன் வான் வெளியில் வீசிஎறியப்பட்டேன்.
         எதோ விபரீதம் என்று புரிவதற்குள் ஆகாயத்தோடு என் பயணம் ஆரம்பமாகியது. ஒரு பத்தடி உயரத்தில் செல்லும் போது, கீழே பார்த்துக் கொண்டே இருந்தேன். நான் பெயர்த்தெடுத்த கல்லை சுற்றிலும் ஒவ்வொரு சென்டி மீட்டராக புவி ஈர்ப்பு விசையை இழக்கத் தொடங்க ஆரம்பித்தது. எனக்கும் ஒருவாறாக புரியத் தொடங்கியது. நான் வேறு கொஞ்சம் புத்தி சாலியா? அந்தக்  கல்லில் தான் மொத்த புவிஈர்ப்பு சக்தியும் உள்ளது என்று உணர்ந்து கொண்டேன். ஒரே தாவலில் ஒரு மரக் கிளையைப் பற்றி முழு சக்தியையும் பயன் படுத்தி சிவலிங்கத்தின் அருகில் குதித்தேன். இந்த நேரத்தில் நான் ஒரு பலசாலி என்றும்  நீங்கள் அறிந்து கொள்ள வேண்டியுள்ளது. புவி ஈர்ப்பு விசைக்கும் எனக்கும் நடந்த மோதலில் கடும் பிரயாசைக்கிடையில் அந்த ஈர்ப்பு விசைக்கல்லை அதே இடத்தில் நட்டு அது நகராமல் இருக்க வேறொரு பெரிய கல்லை அதன் தலை மேல் வைத்ததும் தான் பூமி நிதானத்திற்கு வந்தது.!!
——————————————-***************——————————————
பல்லை விளக்கிக் கொண்டே பிங்க் கலர் கடிகாரம் எங்கே வாங்கலாம் என்று சிந்திக்க ஆரம்பித்தேன்.
 Image
அன்புடன்,
ரேணுகா
Advertisements

13 thoughts on “பிங்க் கலர் கடிகாரம்!!

 1. Hello Renuka!!!

  Your writing skills are day by day getting maturity. nice speed.

  but i dont know, what is the connection between the story and the title.

  congratulation. Keep writing..

 2. சிரித்து மாளலை 🙂 உங்கள் உள் இருந்த சுயம்பு வெளிப்பட்டுள்ளது, வாழ்த்துகள் :-))

  amas32

 3. நல்ல கனவு ..இப்படி ஒரு கனவு எல்லாருக்கும் வந்தால் நல்லா இருக்கும் ஏனெனில் கவலைகளை கஷ்டங்களை மறந்து புது உலகத்திற்கே கூட்டிபோகும் கனவு தேவையே ..
  எழுத்துக்களும் எளிமையும் இயல்புகளும் அருமை ..வாழ்த்துக்கள் ..அன்புடன் ( @Rjcrazygopal )கிரேசி கோபால் புதுச்சேரி .

 4. யாரோட பாதிப்புல இந்தக் கதை எழுத முயற்சி பண்ணிருக்கீங்க? அதாவது எந்த எழுத்தாளர்… ?

  நல்ல சுவாரஸ்யமான நடை மற்றும் விவரணைகள்… ஆனால் கனவு க்ளைமேக்ஸ் என்பது 1934ல் வந்த டெக்னிக் அல்லவா? 🙂

 5. நன்றி. ரெண்டு மூணு தடவ படிச்சிட்டேன். கதையில் என்ன சொல்லவர்ரீங்கனு புரியல. இதில் திகில் எங்கே இருக்குது. ஊஹும் ஒன்னும் புரிபடல 😦 கண்டது கனவு என்பதுதான் திகிலா?

 6. ஆரம்பமும், முடிவும் நன்றாக இருந்தது. இயல்பாக, வேகமாக படிக்கிறபடி வாக்கியங்கள் இருந்தன.
  நானும் சிறுகதைகள் எழுத முயற்சிக்கிறவன்.
  நன்றி.

 7. சூப்பர் சிஸ்… கலக்கிட்ட… சூப்பரா ஆர்வம் குறையாம கூட்டிட்டு போன… சிறுகதைக்கே உரிய பன்ச்சோட முடிச்சு இருக்க… தொடர்ந்து எழுது.. வாழ்த்துகள்.. :))

Leave a Reply

Fill in your details below or click an icon to log in:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out /  Change )

Google+ photo

You are commenting using your Google+ account. Log Out /  Change )

Twitter picture

You are commenting using your Twitter account. Log Out /  Change )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out /  Change )

w

Connecting to %s