கடலோரக் குருவிகள்!!

Image

வணக்கம் நண்பர்களே..

சமீபத்தில் படித்த “கடலோரக் குருவிகள்” என்ற பாலகுமாரன் நாவல் என்னை மிகவும் பாதித்தது. எப்போதும் இப்படி நல்ல புத்தகங்கள் படித்துவிட்டு சொல்வதுதான். சில நாட்கள் அது நம் மனதில் இருந்து விட்டு பின் நீர்த்துவிடும். இம்முறை அதைப் பதிவில் எழுதி அதன் மூலம் என் நினைவாற்றலைக் கொஞ்சம் நீட்டிக்கலாம் என்று நினைத்தேன். உங்களுடன் பகிர்வதன் மூலமும் என் மகிழ்ச்சி இரட்டிப்பாகும்.

முதலில் திரு பாலகுமாரன்  ஐயாவுக்கு என் மனமார்ந்த நன்றிகள். அவர் கதையில் வரும் பெண்கள் சாதாரணப் பெண்களே இல்லை. இப்படி மிக நேர்த்தியாக தன் கதையின் நாயகியை சித்தரிப்பதன் மூலம், அவர் சமுதாயத்தில் பெண்கள் எவ்வாறு இருக்க வேண்டும் என்று கூறுவதாகவே நினைக்கிறேன்.

நான் முழுக் கதையை எல்லாம் சொல்லப் போவதில்லை. நாவலாசிரியர் ஒரு அப்பா கதாபாத்திரம் மூலமாக நாயகிக்கு வாழ்கையை சொல்லித் தரும் பகுதிகள் அனைத்துமே மிக முக்கியமானவையே. ஆனால் கடலோரக்  குருவிகள் என்ற கதை என்னைப் போன்ற குறை மதியுடயவரும் புரிந்து கொள்ளும் படியும், மிக மிக அர்த்தம் கொண்டதாகவும் இருப்பதால் அந்த கதையை மட்டும் பதிகிறேன்.

கதை:

ஒரு கடலோர கிராமத்தில், அழகான மரத்தில் இரண்டு குருவிகள் கூடு கட்டிக் கொண்டு மகிழ்ச்சியாகவும் அன்போடும் வாழ்ந்து வந்தன. பெண் குருவி முட்டைகளிட்டு பாதுகாத்து வந்தது. ஒரு நாள் இரண்டு குருவிகளும் இரை தேடச் சென்ற நேரத்தில் கொடிய புயல் வந்து மரத்தை சாய்த்துச் சென்றது. குருவிகளின் முட்டைகள் கடலில் சேர்ந்து விட்டன. கூடு திரும்பிய குருவிகள் நடந்ததை அறிந்து அழுது புலம்பின. பின் அந்த ஆண்  குருவி, தன் இணையைப் பார்த்து “கவலைப் பட வேண்டாம். நம் குழந்தைகளை  கடல் மூடிவிட்டது. நம் அலகுகளால் கடல் நீரை கொஞ்சம் கொஞ்சமாக எடுத்துக் கரையில் ஊற்றி விட்டால் கடல் நீர் வற்றி விடும், பிறகு நாம் நம் குழந்தைகளாகிய முட்டைகளைத் தேடி எடுத்துக் கொள்வோம்” என்று ஆறுதல் கூறியது. இரண்டும் சேர்ந்து பசி, தூக்கம், இரவு, பகல் பார்க்காமல் கடல் நீரைத் தங்கள் சின்ன சின்ன அலகுகளால் அகற்ற முற்பட்டன.
கடவுள் ஆசியால் ஒரு மெய்ஞானி ஒருவர் அந்தக்  காட்சியைக் காண நேர்ந்தது. அவர் தன் ஞான திருஷ்டியால் நடந்ததை உணர்த்து கொண்டார். அந்தக் குருவிகளின் மேல் பரிதாபம் கொண்டு முட்டைகளைக் கரையில் எடுத்து வைத்து விட்டு தன் வழியே நடந்தார். அதைப் பார்த்த குருவிகள் தங்கள் முயற்சி வெற்றி அடைந்ததை எண்ணி சந்தோஷக் கூச்சல் போட்டன.

நீதி:

இந்தக் கதையை யோசிக்க யோசிக்க பல வகையான நீதிகள் நமக்குக் கிடைக்கிறது. இந்தக் கதையின் பரிமாணங்கள் என்னை வியக்க வைக்கின்றன.

  1. அந்த குருவிகள் முயற்சி செய்யாமல் அதற்கு முட்டைகள் கிடைத்திருக்காது. எனவே முயற்சி செய்வது மிக மிக தேவையான ஒன்று.
  2. ஆனால் முயற்சி மட்டுமே காரணம் அல்ல. நாம் நம் முயற்சியால் தான் எல்லாம் கிடைக்கிறது என்று நினைக்க ஆரம்பித்தால் நமக்குள் நாத்திக எண்ணங்கள் வந்து விடுகின்றன. கடவுள் பக்தி குறைந்து விடுகிறது

இந்த இரண்டு கருத்துகளைப் பற்றிக் கொண்டு யோசித்தால் பல உண்மைகள் தெரிய வருகின்றன. யோசியுங்கள் நண்பர்களே..

அந்த நாவலின் முடிவில், கதாநாயகன் “நாம் நம் அலகுகளால் அள்ளி அள்ளி கடல் நீரை வற்றச் செய்ய முயற்சிப்போம்” என்று கூறுவான். அழகான அருமையான, தன்னம்பிக்கையான, தலைக்கனமில்லாத வரிகள். 

அன்புடன்,
ரேணுகா

Image

Image courtesy:
1. http://www.mylot.com/w/image/1628287.aspx
2. http://terrymarotta.wordpress.com/tag/nesting-sparrows/

Advertisements

8 thoughts on “கடலோரக் குருவிகள்!!

  1. நாம் கர்வப்படாதது மட்டுமல்லாமல் கர்விகளின் தொடர்பும் இல்லாமல் இருப்பது உத்தமம். -கடலோரக்குருவிகள்.

  2. Very nice post. புண்டரீக முனிவரும் தன் கைகளால் கடல் நீரை இறைத்துத் திருமாலை தரிசிக்க எண்ணினார். அதனால் இறைவன் பாம்பணை மேல் கூட பள்ளிகொள்ளாமல் பக்தனுக்குக் காட்சி தர அவசரமாக வந்து தரையில் படுத்திருப்பார். தல சயனப் பெருமாள். மாமாலபுரத்தில் உள்ளது.

    amas32

Leave a Reply

Fill in your details below or click an icon to log in:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out /  Change )

Google+ photo

You are commenting using your Google+ account. Log Out /  Change )

Twitter picture

You are commenting using your Twitter account. Log Out /  Change )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out /  Change )

w

Connecting to %s