ரெக்கை முளைத்தேன்!!!

      

Image

      

        இந்தப் பாடல் பற்றி ஏற்கனவே பல முறை ட்விட்டரில் சிலாகித்திருக்கிறேன். இருந்தாலும் கேட்டதில் பிடித்தது என்ற பகுதியில் இந்த பாடலை பகிர வேண்டும் போல் தோன்றியது. பொதுவாவே நான் பாட்டெல்லாம் அதிகமாகக் கேட்க மாட்டேன். இசையைப் பற்றியும் பெரிதாக ஒன்றும் தெரியாது. பாடல்கள் பற்றி நம் பிரபல கீச்சர்கள் சொக்கன் சார், ஜீரா, கானா அண்ணன், உமாக்ரிஷ் சொல்வதை எல்லாம்  பட்டிக் காட்டான் மிட்டாய்க் கடையைப் பார்ப்பது  போல் பார்த்துக் கொண்டிருப்பேன்.

       இந்தப் பாடலின் முதல் வரியே ரொம்பப் பிடித்திருந்தது. “முளைத்தேன்” என்ற வார்த்தை புதிது, இது மாதிரி புது வார்த்தைகளை சுஜாதா தன் கதைகளில் பயன்படுத்துவார். மதன் கார்க்கியின் இந்த வார்த்தைகள் இனிமையோ இனிமை. சில வரிகள் வரும்போது “ஆத்தங்கரை மரமே” சாயல் தோன்றுவது எனக்கு மட்டுமா என்று தெரியவில்லை. உதாரணமாக, “ஓரக் கண் பார்வை வேண்டாமே ஓரடி தூரம் வேண்டாமே” இந்த வரிகள் வரும் இடத்தில் “ஒத்தையில் ஓடக் கரையோரம் கத்தியே உன் பெயர் சொன்னேனே” வரிகள் நினைவுக்கு  வருகின்றன.

        இசையமைப்பாளர் ரகுநாதன் என்று தெரிகிறது. நல்ல இசை, பாடலை உறுத்தாமல் காதுகளுக்கு நன்மை செய்கிறது. ஜி.வி.பிரகாஷ் நல்ல தேர்வு, பாடல் ஆரம்பித்தில் வரும் வரிகள் ஓஹோ ரகம் . ஷ்ரேயா கோஷல் குரல்களில் தேன் வார்க்கிறார், அழகான ராட்சசி! பாடல் பதிவு செய்யப் பட்ட விதம் மிக இயல்பு.

பாடல் வரிகள்

படம் : சுந்தரபாண்டியன்
இசை : என்.ஆர். ரகுநந்தன்
பாடியவர்கள் : ஜி.வி. பிரகாஷ், ஷ்ரேயா கோஷல்
வரிகள் : மதன் கார்க்கி

ரெக்கை முளைத்தேன் ரெக்கை முளைத்தேன்
உனை உடன் வா என்று வானம் ஏற அழைத்தேன்
தப்பித் தொலைந்தே போகத் துடித்தாய்
உடன் யாரும் இல்லாத தேசம் தேடிப் பிடித்தேன்

எனக்கெனப் பதுக்கிய கனவுகள் முதன்முறை தரை விட்டுப் பறக்குது உன்னாலே
உனக்கென செதுக்கிய நினைவுகள் முதன்முறை உயிர் வந்து துடிக்குது உன்னாலே

எத்தனை வேகம் சென்றாலும் நிற்பதாய் தோன்றும் உன்னாலே
எத்தனை பக்கம் வந்தாலும் வெட்கமே இல்லை உன்னாலே

கண்களில் மின்னிடும் காதலை நான் அன்றே கண்டேன் ஒருமுறை
நெஞ்சினில் தேனைப் பாய்ச்சிட அதை நீயே சொன்னாய் மறுமுறை!!

ரெக்கை விரித்தேன்
எனை உடன் வா என்று வானம் ஏற அழைத்தாய்
தப்பி தொலைந்தேன் 

ரெக்கை விரித்தேன் போக துடித்தேன்
உடன் யாரும் இல்லாத தேசம் தேடிப் பிடித்தாய்

பகலிலே சுவரை வெறித்தேன்
தெருவிலே தனியே சிரித்தேன்
கழன்றதாய் பேரும் எடுத்தேன் எல்லாம் உன்னாலே

இரவிலே தூக்கம் தொலைத்தேன்
படுக்கையில் சுற்றி அலைந்தேன்
வகுப்பிலே தூங்கி வழிந்தேன் எல்லாம் உன்னாலே

கட்டம் போட்ட ஒன்றா இல்லை கோடு போட்ட ஒன்றா
எந்த சட்டை போட என முட்டிக் கொண்டேன் உன்னாலே

பச்சை வண்ணப் பொட்டா  இல்லை மஞ்சள் வண்ணப் பொட்டா
நெற்றி மேலே ரெண்டும் நான் ஒட்டிக் கொண்டேன் உன்னாலே

கண்களில் மின்னிடும் காதலை நான் அன்றே கண்டேன் ஒருமுறை
நெஞ்சினில் தேனைப் பாய்ச்சிட அதை நீயே சொன்னாய் மறுமுறை

கவிதைகள் கிறுக்கிட வேண்டாம்
கசக்கியும் எறிந்திட வேண்டாம்
எறிந்ததை மீண்டும் பிரித்து சிரித்திட வேண்டாமே

காற்றிலே முத்தம் வேண்டாம்
வார்த்தையில் அர்த்தம் வேண்டாம்
சுற்றிலும் சத்தம் போடும் ஏதும் வேண்டாமே

சாலை ஓரத் தேநீர் அது கோப்பை ரெண்டில் வேண்டாம்
பேருந்தெறும் போதும் இனி டிக்கெட் ரெண்டு வேண்டாமே

பாறை மேலே ஏறி நம் பேரைத் தீட்ட வேண்டாம்
எல்லை கொஞ்சம் மீற இனி அச்சம் ஏதும் வேண்டாமே

கண்களில் மின்னிடும் காதலை நீ அன்றே கண்டாய் ஒருமுறை
நெஞ்சினில் தேனை பாய்ச்சிட அதை நானே சொன்னேன் மறுமுறை

ரெக்கை முளைத்தேன் ரெக்கை முளைத்தேன்
உனை உடன் வா என்று வானம் ஏற அழைத்தேன்
தப்பி தொலைந்தேன் போக துடித்தேன்
உடன் யாரும் இல்லாத தேசம் தேடி பிடித்தாய்

இனி இனி தனித்தனி உலகினில் இருவரும் உலவிடும் நிலையே வேண்டாமே
இனி இனி மனதினில் தேக்கிட காதல் உண்டாக்கிடும் வலியே வேண்டாமே

ஓரக் கண் பார்வை வேண்டாமே ஓரடி தூரம் வேண்டாமே
மாறிடும் நேரம் வேண்டாமே ஊரிலே யாரும் வேண்டாமே

கண்களில் மின்னிடும் காதலை நான் அன்றே கண்டேன் ஒருமுறை
நெஞ்சினில் தேனை பாய்ச்சிட அதை நானே சொன்னேன் மறுமுறை

பாடல் தொடர்பான ஒலி -ஒளி பதிவுகள்:
 
 
 
 
அன்புடன்,
ரேணுகா
 

Reference:

1. http://madhankarky.blogspot.in/2012/08/lyric_20.html

2. https://www.youtube.com/?gl=IN&tab=w1

Image courtesy:

1. http://hhdwallpapes.com/wp-content/uploads/2012/08/flying-bird-hd-desktop.jpg

 

 

Advertisements

5 thoughts on “ரெக்கை முளைத்தேன்!!!

  1. ஹஹா.. உங்க போஸ்ட் படிச்சதும் எனக்கு ரேக்க முளச்சிடுச்சி.. :))) ஸ்ரேயா கோசல் வேற லைவ் பாட்டு ஆடுறாங்களா..செம. ஒன்னே ஒன்னு.. அடுத்த பதிவுல சுஜாதா அவர்களின் ஏதாவது சிறுகதை எழுதுங்களேன் ப்ளீஸ்….

  2. though i dont see films since last 20 years, let me listen to this song .
    But i have to record my opinion about tamil film songs just a bunch of
    sounds

Leave a Reply

Fill in your details below or click an icon to log in:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out /  Change )

Google+ photo

You are commenting using your Google+ account. Log Out /  Change )

Twitter picture

You are commenting using your Twitter account. Log Out /  Change )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out /  Change )

w

Connecting to %s