என் முதல் பதிவு !! (May 15, 2012)

ஓடுங்க !! (பதிவு எழுத போகிறேன்)!!

அன்பான கீச்சுலக மக்களே!!

தலைப்பை பார்த்தால் எதோ எதிர்மறையாக உள்ளதே என என்ன வேண்டாம் கண்மணிகளே!! ஒரு சென்டிமென்டாக இருக்கட்டுமே என்று இந்தத் தலைப்பை வைத்துள்ளேன். உங்களை எல்லாம் பொறுத்தவரை இந்த தலைப்பானது மிகச் சாதாரமாகத் தோன்றக்கூடும். ஆனால் முதல் முறையாக எழுத முடிவெடுத்திருக்கும் எனக்கு இந்த தலைப்பானது மிக பிரம்மிப்பாக தோன்றுவது ஒன்றும் ஆச்சரியமான விடயமில்லை. இந்த பதிவை வாசிப்பவர்களுக்கு நன்றி கூறி தொடர்கிறேன்.

முதலில் என் வாசிப்பு அனுபவங்களைப் பற்றி சொல்லியாக வேண்டும். நான் சிறுவயது முதலே பாட புத்தகத்தை விட மற்ற எல்லா புத்தகங்களையும் (இலக்கிய புத்தகமா என்று கேட்காதீர்கள்) படிக்க ஆரம்பித்தேன். ஆனந்த விகடன் முதலான வார நாளிதழ்கள், உள்ளூர் நூலகத்தில் கிடைக்கும் சிறுவருக்கான புத்தகங்கள் படிப்பதில் ஆரம்பித்த என் வாசிப்பு ஒரு கட்டத்தில் விபூதி மடித்தத் துண்டு காகிதங்களில் (எப்பப் பார்த்தாலும் சுண்டல் மடித்த காகிதம்னா போரடிக்காதா?) கூட வாசிக்க தூண்டிக் கொண்டிருக்கும். படிக்க வேறு புத்தகம் கிடைக்காத போது என் தாத்தா வைத்திருந்த “சத்திய சோதனை” யைக் கூட விட்டு வைக்காமல் படித்துப் பார்த்தது.
ஆனால் எழுத வேண்டுமென்ற எண்ணம் துளிக்கூட துளிர்த்ததில்லை என் மனதில். நான் நிஜத்தில் வலைபாயுதே படித்து தான் கீச்சுலகிற்குள் நுழைந்தேன். ஆனால் இந்தளவு என்னைப் பதிவெல்லாம் எழுதத் தூண்டும் இந்த ட்விட்டர் என எதிர் பார்க்கவில்லை. சரி அது உங்கள் தலை விதி. நானென்ன செய்ய ??

இது நிச்சயமாக ஒரு பதிவின் முன்னோட்டம் மட்டுமே. அதனால் யாரும் பயப்படாமல் மேற்கொண்டு தொடரவும்.

எனது அடுத்த பதிவு நிச்சயம் வெற்றிபெற வேண்டும் என்றால் என்ன செய்ய வேண்டும் என்று என் மனம் யோசித்துக்கொண்டிருப்பதால், நாம் அதற்கான வழிகளைப் பட்டியலிட விரும்புகிறேன். படைப்புக்கள் வெற்றிபெற பெரும்பாலும் தத்துவம், கவிதை, நகைச்சுவை அல்லது சோகம் இழையூடியிருக்க வேண்டும் என்று உணர்கிறேன். ஆகையினால் அடுத்த பதிவு நிச்சயம் இவைகளின் கலவையாக இருக்கலாம்.

அடுத்த பதிவில் பின்பற்றக் கூடிய விதிகள் பின்வருமாறு:

1 . அனைத்து ஊர் மக்களின் ஆதரவு பெற விரும்புவதால், எல்லா ஊர்களின் பேச்சு வழக்கையும் கையாளத் திட்டமுள்ளது. ஒன்றும் பிரமாதமில்லை. “ஏனுங்க”, “ஏல” , “இன்னாபா” மற்றும் “ஏன்ன சொல்லு யா” என்றால் முறையே கோவை, திருநெல்வேலி, சென்னை மற்றும் மதுரை பேச்சு வழக்கு எனக் கொள்க (தயை கூர்ந்து).

2 . நான் மிகவும் ரசித்த கவிதை எனக் குறிப்பிட்டு ஒரு கவிதையை சுட்டு (ட்விட்டேர்ல இருந்துதான்) பக்கங்களை நிரப்பலாம்.

உதாரணம்:

“ஏய் பல்லக்குத் தூக்கி!!

கொஞ்சம் நிறுத்து…

உட்கார்ந்து உட்கார்ந்து

கால் வலிக்கிறது!! “

– கவிதாயினி தாமரை.

எத்தனை ஆழமான கவிதை இல்லையா?

3 . சமையல் துணுக்குகள் (துணுக்கு என்றால் சரியான விளக்கம் தெரியாது, மெய்யாகவே!)

4 . இளையராஜா இசையமைத்த பாடல் வரிகள்.

5 . நகைச்சுவைத் துணுக்குகள்

6 . வலை பாய்ந்த கீச்சுக்கள்

7. நான் பட்ட அவமானங்கள் (சோக ரசம்)

8 . கடவுள் துதி பாடல்கள் (ஆத்திகர்களை படிக்க வைக்க)

9 . புகைபிடிப்பதால், மது அருந்துவதால் ஏற்படக் கூடிய நோய்கள் ( மிரட்டல்)

10. பொது அறிவு சம்பந்தப்பட்டது (நமக்கு சம்பந்தமில்லாதது)

தலைப்புகளைச் சொல்லும்போதே தலை கிறுகிறுத்துப் போகிறதே?? நீங்க இதையெல்லாம் எப்படிப் படிக்கப் போகிறீர்களோ??

முடித்துக்கொள்கிறேன் !!!

நன்றி,
ரேணுகாரெய்ன் – @RenugaRain
டிஸ்கி:
கண்ணா இது வெறும் ட்ரைலர் தான்!! மெயின் பிக்சர சீக்கரம் ரிலீஸ் பன்றேன்.

எழுதிய நேரம் 7:24 PM Posted By ரேணிகுண்டா பாய்ஸ்
comments:

மன்மதகுஞ்சுMay 15, 2012 at 7:29 PM

வாழ்த்துக்களுடன் வரவேற்புகளும்.. ம்ம்ம் எழுதுங்க, ஒரு விடயம் விட்டு விட்டீர்கள்,நீங்க படித்த கல்லூரியில் உங்கள் நண்பிகளுக்குள் நடந்த ஏதாச்சும் சுவாரஸ்ய விடயம் பற்றியும் எழுதுங்க தெரிஞ்சு கொள்ள ஆர்வமா இருக்கோம்

SHAN ShyleshMay 15, 2012 at 8:22 PM

நீங்க படித்த கல்லூரியில் உங்கள் நண்பிகளுக்குள் நடந்த ஏதாச்சும் சுவாரஸ்ய விடயம் பற்றியும் எழுதுங்க தெரிஞ்சு கொள்ள ஆர்வமா இருக்கோம்///

ஆமாம் அதுவும் போட்டோக்களோட
கட்டதொரMay 15, 2012 at 8:23 PM

எழத ஆரம்பிக்கும் போது…அப்டியே ச்ச்சும்மா உட்காந்து எழுதியே பழக்க பட்ட நானே பதிவு எழுதும் போது…இம்புட்டு படிச்சு..இம்புட்டு யோசிக்கிற புள்ளை என்னாமா எழுதும்..வாழ்த்துக்கள் ..அடுத்த பதிவு ஆர்வத்துடன் கட்டதொர.!

thangsMay 15, 2012 at 8:48 PM

ரைட்டர் ரேணு’னு போட்டப அதுக்குள்ளே இவ்வளவு லட்சிய வெறி இருக்கும்’னு சத்தியமா நினைக்கல.ஒரு சின்னப் பொண்ணுக்குள்ள இவ்வளவு திறமையா.ஒரு சின்ன சந்து எத்தனை எத்தனை திறமையாளர்களை உருவாக்குகிறது.வாழ்க உன் திறமை வளர்க நின் பணி…அவ்வ்வ்

nagaMay 15, 2012 at 8:51 PM

விதி எப்படி என்னை துரத்தி துரத்தி சோதிக்கும் என்று என் கனவிலும் நினைக்கவில்லை . இப்போது உங்கள் எழுத்து ரூபத்தில் வந்து மிரட்டுகிறது .துணிந்த வனுக்கு கடல் முழங்கால் அளவு . நானும் துணிந்து விட்டேன் உங்கள் பொன்னான எழுத்துக்களை பொறுமையுடன் படித்து வாழ்க்கை வண்டியை ஓரம்போ ஓரம்போ என்று விரட்டி ஓட்டுவது என்று – வாழ்த்துகள்

ravan181

தல தளபதிMay 15, 2012 at 9:14 PM

அட….. நல்லா வருவிங்க மேடம்.. வாழ்தூஸ்.

kosaaksiMay 15, 2012 at 11:34 PM

ஹா ஹா .. அருமை ..சூப்பர், பேஷ் பேஷ், பக்கா , கெத்து, அமோகம்,கலக்கல்….#இப்படியெல்லாம் உன் அடுத்த பதிவில் கமெண்டு வாங்க வாழ்துக்கள்#

sonia arunkumarMay 16, 2012 at 12:35 AM

அட அட இந்த புள்ளைக்கு தான் எவ்ளோ அறிவு :)) கலக்கலோ கலக்கல் மச்சா .இப்படிலாம் கூட எழுதலாமான்னு தோன வைக்கிது.உன் வால்த்தனம் எல்லாம் இந்த போஸ்ட்லையே நல்லா தெரிது.வாலு வாழு 🙂

சின்ராசுMay 16, 2012 at 7:38 AM

எழுதுங்கள் எழுதுங்கள் தொடர்ந்து நல்ல ஆரம்பம்.. ஐ நீட் மோர் எமோஷனல் .. :-))) அவ்வ்வ்வ்வ்

பரிசல்காரன்May 16, 2012 at 8:52 AM

ஆரம்பத்துக்கு ஓகே.. ஆனா இன்னும் மெனக்கெட்டிருக்கலாம்.

எழுத்துப் பிழையையெல்லாம் சரிபண்ணி அப்பறமா பதிவேத்துங்க.

// படிக்க வேறு புத்தகம் கிடைக்காத போது என் தாத்தா வைத்திருந்த “சத்திய சோதனை” யைக் கூட விட்டு வைக்காமல் படித்துப் பார்த்தது.//

உவமை தப்பா வருது. சத்தியசோதனை வேற வழியில்லாம படிச்சேன்னு சொல்லக்கூடிய புத்தகமா?

நேர்ல பார்த்தா மண்டைலயே கொட்றேன்.

அடுத்த பதிவு இன்னும் கலக்கலா இருக்கணும்.. இல்லைன்னா என்னை அண்ணான்னு சொல்லாத!

ஆல் த பெஸ்டூ!

பரிசல்காரன்May 16, 2012 at 8:54 AM

அப்பறம்.. முக்கியமா (இது எல்லாருக்கும்) —

இந்த ரேணிகுண்டா பாய்ஸ் ரொம்ப நல்லவிங்க! ‘இன்றைக்கு புதன் கிழமை.. ஆகவே நாளைக்கு வியாழன்’ன்னு எழுதினாலும் சூப்பர் மச்சின்னு சொல்லுவாங்க. சூதுவாது தெரியாத பசங்க! அதுல மயங்கி, நம்ம ஸ்டஃப் இதுன்னு உட்கார்ந்துட்டீங்க.. கத காலி!

ஜாக்கிரத!

ரிஷிMay 16, 2012 at 9:23 AM

வாங்க சகோதரி.. கலக்குங்க..!!

shanthiMay 16, 2012 at 9:38 AM

வாழ்த்துகள் :))) @shanthhi

mohamed thariqMay 16, 2012 at 11:43 AM

வாழ்த்துகள் ரேணுகாரெய்ன் @sheepsap

சி.பி.செந்தில்குமார்May 16, 2012 at 4:59 PM

ஸ்பெல்லிங்க் மிஸ்டேக்ஸ் நிறைய இருக்கு.. உதா – சாதாரமாகத் – சாதாரணமாகத்

இலக்கணப்பிழைகள் இருக்கு – உதா

அடுத்த பதிவில் பின்பற்றக் கூடிய விதிகள் பின்வருமாறு:-

அடுத்த பதிவில் பின்பற்றக் இருக்கும் விதிகள் பின்வருமாறு:

மற்ற படி குட்.. வளர்க வாழ்க 🙂

avainaayaganJanuary 11, 2013 at 1:43 PM

ஓடுங்க !! (பதிவு எழுத போகிறேன்)ல தொடங்கி முடித்துக்கொள்கிறேன் வரை சுவையாகவே எழுதியிருக்கிறீர்கள். வாழ்த்துக்கள். அடுத்த பதிவை எதிர்பார்க்கிறேன்.

Thanks to : http://renigunda.blogspot.in/2012/05/blog-post_4760.html

Advertisements

Leave a Reply

Fill in your details below or click an icon to log in:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out /  Change )

Google+ photo

You are commenting using your Google+ account. Log Out /  Change )

Twitter picture

You are commenting using your Twitter account. Log Out /  Change )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out /  Change )

w

Connecting to %s