அபிராமி அந்தாதி #11

Image

          இந்த அபிராமி அந்தாதி – 11, பகுதியில் 31, 32 மற்றும் 33ஆம் பாடல்கள் இடம் பெறுகின்றன. மூன்று பாடல்களும் மரணம் சம்பத்தப்பட்ட பாடல். சாவைக் கண்டு பயப் படாதவர் யாரும் இல்லை. ஆனால், இறப்பிற்குப் பின் முக்தி அல்லது பிறவாநிலை கிடைக்க வேண்டும் என்பதே முக்கிய அபிலாஷையாக இருந்து வருகிறது. மரண பயத்தை வெல்ல வேண்டுமென்றால் நமக்கு அன்னையின் அருள் துணை புரியும். பட்டர் சாகும் தருவாயில் உன்னை அழைப்பேன், நீ ஓடோடி வரவேண்டும் என்று அபிராமியை கேட்டுக் கொள்கிறார். இவ்வாறு சொல்கையில் அபிராமி பட்டரின் எல்லை இல்லா பக்தி துல்லியமாக விளங்குகிறது. ஈசனின் மார்கண்டேய விளையாட்டுக்கு சற்றும் குறைந்ததில்லை நம் அபிராமியின் அருள்.

பாடல் – 31:

(மறுமையில் இன்பம் உண்டாக)

உமையும், உமையொரு பாகனும் ஏக உருவில் வந்திங்கு
எமையும் தமக்கு அன்பு செய்ய வைத்தார்; இனி எண்ணுதற்குச்
சமையங்களும் இல்லை; ஈன்றெடுப்பாள் ஒரு தாயும் இல்லை;
அமையும் அமையுறு தோளியர் மேல் வைத்த ஆசையுமே.

பொருள்:

உமையவளும், உமையவளை ஒரு பாகமாகக் கொண்ட சிவனும் இணைந்து ஒன்றாக அர்த்தநாரீஸ்வர கோலத்தில் என் முன் வந்திங்கு எளியவனான என்னையும் உங்களுக்கு அன்பு செய்ய வைத்தீர்கள். இனி நான் வேறு சமயங்களை தேடும் அவசியம் இல்லை. பிறவிப் பிணியறுக்கும் அன்னையை வழிபடுவதால் இனி என்னை ஈன்றெடுக்க ஒரு தாயும் இல்லை. மூங்கில் போன்ற தோள்களை உடைய பெண்களின் மேல் வைத்த ஆசையும் அற்றுப் போனது.

பாடல் – 32

(துர்மரணம் வராமலிருக்க)

ஆசைக்கடலில் அகப்பட்டு அருளற்ற அந்தகன் கைப்
பாசத்தில் அல்லல்பட இருந்தேனை, நின் பாதம் என்னும்
வாசக்கமலம் தலைமேல் வலியவைத்து ஆண்டு கொண்ட
நேசத்தை என் சொல்லுவேன்? ஈசர்பாகத்து நேரிழையே!

பொருள்:

ஈசனின் இட பாகத்தில் அமைந்த அன்னையே!! நான் ஆசைகள் சூழ்ந்த கடலில் அகப்பட்டுக் கொண்டு, அருளற்ற எமதர்மனின் கைகளின் பாசக் கயிற்றில் சிக்கி அல்லல்பட இருந்த என்னை, உன்னுடைய வாசனை நிரந்த தாமரைப் பாதங்களை எந்தன் தலை மேல் வைத்தருளி வலிய வந்தென்னை ஆண்டு கொண்ட கருணையை என்னவென்று சொல்வேன் அம்மா!!

 

பாடல் – 33

(இறக்கும் நிலையிலும் அம்பிகை நினைவோடு இருக்க)

இழைக்கும் வினைவழியே ஆடும் காலன் எனைநடுங்க
அழைக்கும் பொழுதுவந்து அஞ்சல் என்பாய்; அத்தர் சித்தமெல்லாம்
குழைக்கும் களபக் குவிமுலை யாமலைக் கோமளையே!
உழைக்கும் பொழுது உன்னையே அன்னையே என்பன் ஓடிவந்தே.

பொருள்:

ஈசனின்  சித்தத்தையெல்லாம் குழையச் செய்கின்ற சந்தனம் பூசிய அழகிய தன பாரங்களை உடைய இளமையான கோமளச் செல்வியே!! நான் இந்த பிறவியில் செய்த வினைகளின் விளைவாய் காலன் என்னை அழைக்க வருவான், அப்போது நான் நடுநடுங்கி மரண வேதனையிலும் பயத்திலும் உன்னை அன்னையே என்றழைப்பேன், அப்போது நீ உன் பிள்ளைக்காக உருகி ஓடோடி வந்து அஞ்சேல் என்று அபயமளிப்பாய் அன்னையே.

அன்புடன்,

ரேணுகா

Reference:

1. http://temple.dinamalar.com/Slogandetails.php?id=542

2. http://www.comsys.com.sg/media/pdf/Abirami_Anthathi_Kannadasan.pdf

3. Image courtesy: http://en.wikipedia.org/wiki/File:Raja_Ravi_Varma,_Markandeya.jpg

Advertisements

2 thoughts on “அபிராமி அந்தாதி #11

  1. வாழ்வின் கடைசி அங்கம் மரணம். ஆனால் நாம் மிகவும் பயப்படுவது அதற்குத் தான். அதனால் சிவன் பார்வதியின் துணையோடு பயமின்றி வாழ்க்கையின் முடிவை எதிர்கொள்ளுவோமனால் எல்லாம் இன்பமே!

    அற்புதம்!

    amas32

    1. ரொம்ப நன்றிம்மா. உங்க கமெண்ட எதிர் பாத்திட்டே இருந்தேன். :)) happy

Leave a Reply

Fill in your details below or click an icon to log in:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out /  Change )

Google+ photo

You are commenting using your Google+ account. Log Out /  Change )

Twitter picture

You are commenting using your Twitter account. Log Out /  Change )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out /  Change )

w

Connecting to %s