மானஸ சஞ்சரரே!!

Image

இந்த பாடலை எதேச்சையாக கேட்க நேர்ந்து, பின்னர் பாம்பே ஜெயஸ்ரீ பாடியதை தரவிறக்கி மீண்டும் மீண்டும் கேட்கத் தூண்டியது எதுவெனெத் தெரியவில்லை. ஆனால் ஒவ்வொரு வரியும் மனதை அமைதி கொள்ளச் செய்கிறது, மனபாரம் வெகுவாகக் குறைகிறது. சரி அதன் விளக்கம் தேடிப் பார்க்கலாம் என்றால், மிக சில விளக்கங்களே, அதுவும் ஆங்கிலத்தில் கிடைத்தன. அதனால் தமிழில் எழுதிவிடலாம் என்று முயற்சியைத் தொடங்கி விட்டேன்.

முன் குறிப்பு: எனக்கு சங்கீத ஞானமோ, சமஸ்க்ரித அறிவோ சுத்தமாகக் கிடையாது.

பாடல் பற்றி:
இந்த அற்புதமான கீர்த்தனை பதினெட்டாம் நூற்றாண்டில் வாழ்ந்த ஸ்வாமி சதாசிவ ப்ரஹ்மேந்திரர்என்பவரால் எழுதப்பட்டது.
ராகம் சாமா

தாளம் ஆதி

பல்லவி:

மானஸ சஞ்சரரே ப்ரஹ்மணி மானஸ சஞ்சரரே

சரணம் 1:

மதசிகி பிஞ்சா அலங்க்ருத சிகுரே மஹனீய கபோல விஜிடமுகுரே

சரணம் 2:

ஸ்ரீ ரமணி குச துர்க விஹாரே சேவக ஜன மந்திர மந்தாரே

சரணம் 3:

பரம ஹம்சமுக சந்த்ர சகோரே பரிபூரிட முரளீரவதாரே

விளக்கம்:

என் மனமே, விவரிக்கவியலாத, எல்லைகளைக் கடந்த பிரமம்என்னும் பரந்தவெளியில் உன் தியானம் என்னும் பயணத்தைத் தொடங்கு.

நீ  தியானிக்க இருக்கும் பிரம்மத்தில் பகவான் மஹா விஷ்ணுவின்  திரு முடியானது மகிழ்ந்து நடனமிடும் மயிலின் தொகையினால் அலங்கரிக்கப்பட்டிருக்கும். அனைவருக்கும் மேலானவரின் கன்னங்கள் கண்ணாடியை விட அதிகமாக பிரகாசித்துக் கொண்டிருக்கும் .

அங்கே தன் சகதர்மினியான மகா லக்ஷ்மியின் ஆன்மாவில் வாசம் செய்யும் இறைவன், அவர்தம் பக்தர்களுக்கு கேட்பது அனைத்தையும் தரும் கற்பக விருட்ஷமாக விளங்குகிறார்.

பரமஹம்சர்களாகிய ஞானிகள் இத்தகைய அற்புதமான இறைவனின் நிலவு போன்ற முகத்திலிருந்து சிந்தும் ஒளியைப் தம் கண்களாலும், இந்த அகில உலகங்களையும் பூரணமாக்கும் இறைவனின் புல்லாங்குழலின் இனிய இசையை தம் காதுளாலும் பருகிக் களிகின்றனர்.

என் மனமே, நீயும் இந்த பிரமத்தினுள் உன் பயணத்தைத் தொடங்குவாயாக.

(பரமஹம்சர்கள்: ஹம்சம் என்றால் அன்னபறவை, புராணங்களில் அன்னப்பட்சியானது தெய்வீகம், தூய்மை மற்றும் விடுதலையைக் குறிக்கிறது. எனவே பரமஹம்சர்கள் என்பவர்களை ஆய கலைகளை கற்ற முற்றும் துறந்த ஞானிகள் என்று கொள்ளலாம்)

பாம்பே ஜெயஸ்ரீ பாடிய பாடலின் சுட்டி:

நன்றி,

ரேணுகா

Reference:
1. http://lyrical-thyagaraja.blogspot.in/2009/09/maanasa-sancharare.html
2. http://www.shivkumar.org/music/manasasancharare.htm
3. http://jaghamani.blogspot.com/2012/08/blog-post_23.html

Image Courtesy:

4. http://divyadarisanams.blogspot.in/2011/08/janmashtami-festival-birth-of-lord.html

Advertisements

4 thoughts on “மானஸ சஞ்சரரே!!

  1. நல்ல முயற்சி. குருவருள் இன்றி கேள்வி ஞானத்திலேயே இவ்வளவு முயற்சித்திருக்கும் இக்குழந்தைக்குக்கு மகா விஷ்ணுவின் அருளாள், மனம் போல மாங்கல்யமும், மஞ்சள் கலரில் பட்டுப்புடவையும் கிடைக்கட்டும்! வாழ்க வளமுடன்! # இப்படிக்கு கட்டுக்குலையா கட்டதொர!

Leave a Reply

Fill in your details below or click an icon to log in:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out /  Change )

Google+ photo

You are commenting using your Google+ account. Log Out /  Change )

Twitter picture

You are commenting using your Twitter account. Log Out /  Change )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out /  Change )

w

Connecting to %s