நல்லவனா? கெட்டவனா?!!

            காலை அவசரமாக அலுவலகம் கிளம்பிக் கொண்டிருந்தேன். பாலு, என் மகன் பள்ளிக்குக் கிளம்பி புத்தகப் பையை தோளில் மாட்டிக் கொண்டே “அப்பா என் கூட ஸ்கூலுக்கு வா, வாத்தியார் கூட்டிட்டு வரச் சொன்னார்” என்று விட்டு பதிலுக்குக் காத்திராமல் என் வண்டியில் ஏறி அமர்ந்தான். “ஏன்டா முதல்லையே சொல்லாம இப்போ கிளம்பறப்ப சொல்ற” என்ற கேள்வி மனதிலேயே கரைந்தது. இவனிடம் கேட்டு பதில் வாங்க முடியாது என்று தோன்றியது. எங்களுக்குள் நெருக்கம் குறைந்து கொண்டே வருவதை ஒரு கையாலாகாத் தனத்துடன் பார்க்கும் சராசரி அப்பனின் மனநிலையைப் பெற்றிருந்தேன்.

ஆசிரியர் அறைக்குச் சென்று அனுமதிக்காகக் காத்திருந்தோம். என்னை மட்டும் உள்ளே வரச் சொன்ன வகுப்பாசிரியர் ஏகப்பட்ட குற்றச் சாட்டுகளை அடுக்கினார். எப்போதும் ஏழெட்டுப் பயல்களுடன் சுற்றுகிறான். ஆசிரியர்களிடம் கேள்வி மேல் கேள்வி கேட்டு தொந்தரவு கொடுக்கிறான் (பாடத்தில் தான்), முதல் ரேங்க் வாங்கினாலும் கீழ்படிதல் என்பது சுத்தமாக இல்லை, இவன் நல்லவனா, கெட்டவனான்னே தெரியலைங்க என்றார். இத்தனை குற்றச் சாட்டுகளுக்கும் காரணம், முதல் நாள் வகுப்பில் வாத்தியாரை எதிர்த்துப் பேசியது தான் என்று அறிந்து கொண்டேன். சரிங்க சார் கண்டிச்சு அனுப்பறேன் என்று ஒரு கும்பிடு போட்டு விட்டு கிளம்பினேன்.

           வெளியே வந்து மகனைத் தேடினேன். சில மாணவர்களுடன் சேர்ந்து காற்றில் சாய்ந்து கிடந்த ஒரு வேப்ப மரத்தை அப்புறப்படுத்திக் கொண்டிருந்தான். என்னைப் பார்த்ததும் கிட்டே வந்து “சரிப்பா, ஒரு நூறு ருபாய் குடுத்திட்டுப் போ, இந்த பசங்களுக்கு ஐஸ் க்ரீம் வாங்கித் தரனும்” என்றான். எடுத்துக் கொடுத்துவிட்டு வண்டியை ஸ்டார்ட் செய்யும் போது தோன்றியது “இவனைக் கண்டிக்க வேண்டியதில்லை, தட்டிக்  கொடுக்க வேண்டும்” என்று.
Advertisements

4 thoughts on “நல்லவனா? கெட்டவனா?!!

  1. sorry. சின்ன பையன் கீழ்படியனும்னு நான் சொல்லல. நீங்க கீழ்படிதல் என்பதற்கு பதிலா கீழ்படியாமைனு எழுதிருக்கீங்களானு கேட்டேன். 🙂

Leave a Reply

Fill in your details below or click an icon to log in:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out /  Change )

Google+ photo

You are commenting using your Google+ account. Log Out /  Change )

Twitter picture

You are commenting using your Twitter account. Log Out /  Change )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out /  Change )

w

Connecting to %s