கெத்து!!

 Image
 

             நேற்று வழக்கம் போல் தொலைக் காட்சிப் பெட்டியில் நேரத்தைத் தொலைத்துக் கொண்டிருந்தோம். எதேச்சையாக ஜெயா டிவியில் ஓடிக்கொண்டிருந்த “சுதந்திர தின விழா” காட்சிகளை பார்த்தோம். எனக்கு அரசியலில் அதிக ஈடுபாடு இல்லாததால், பெரிதாக எந்த கட்சியின் மீதும் அபிப்ராமோ, கருத்துக்களோ இல்லை. எந்த உணர்வுகளும் இல்லாமல் பார்க்க ஆரம்பித்தேன்.

             நம் தமிழக முதல்வர் தன் வாகனத்தில் பல பாதுகாப்பு வாகனங்கள் புடை சூழ வான் மழை வரவேற்க வருகை தரும் காட்சி என்னை வெகுவாக ஈர்த்தது. தலைமைச் செயலகர் திருமதி ஷீலா பாலக்கிருஷ்ணன் முதல்வருக்கு அதிகாரிகளை அறிமுகம் செய்வித்தார். பல்வேறு அணிவகுப்புகளை ஏற்றுக் கொண்ட முதல்வர் ஜெ.ஜெயலலிதா மூவர்ணக் கொடியை சிறப்பாக ஏற்றி வைத்தார். பல சம்பிரதாய நிகழ்வுகளுக்குப் பிறகு தன் “எனது தலைமை”யிலான அரசைப் பற்றி சுதந்திர தின உரையைத் துவக்கினார்.

             இந்தக் காட்சிகளை நான் பலவருடங்களாகக் கண்டு வந்திருந்தாலும் இம்முறை புதிதாக உணர்ந்தேன். ஒரு பெண் சகல மரியாதைகளுடன் நடத்தப் படுவது ஒரு பெருமையையும், நெகிழ்சியையும் தந்தது. ஒரு கட்டத்தில் முதல்வரை வெகுவாக ரசிக்கத் தொடங்கினேன். இன்று ஜார்ஜ் கோட்டையில் கொடியேற்றியவர்,  நாளை  செங்கோட்டையில் கொடியேற்றினால் எப்படி இருக்கும் என்று என்னையும் அறியாமல் எண்ணத் தொடங்கிவிட்டேன். மிகுந்த ஆவலையும், உத்வேகத்தையும் தந்த கணங்கள்.

              பல வருடங்களாகவே வாழ்வில் சிறந்த இடத்தை அடைய வேண்டும் என்று எல்லாரையும் போல நானும் எண்ணி வந்திருக்கிறேன். சில வருடங்களாக என் படிப்பையும், துறையும் முடிவு செய்து அதற்காக குறிப்பிட்ட நேரம் உழைத்து வருகிறேன். பெற்றவர்கள் மற்றும் பெரியோர்களின் ஆசி என்னை உயர்த்தும்.  சில வருடங்களில் என் துறையில், ஒரு பெரிய பதவியில் நான் அமர நேரும்போது இந்த பதிவை மீள் பதிவிடுவேன். தலைக்கணமோ, பதவி ஆசையோ காரணம் இல்லை. “சொல்லி அடிச்சேன்” என்று சொல்லிக் கொள்ள ஒரு ‘கெத்து’ மட்டும் தான். ஜெயலலிதா  கோட்டையில் கொடி ஏற்றியதற்கும் என் சின்ன ஆசைக்கும் ஏதாவது பட்டாம்பூச்சி விளைவுகள் இருக்கலாம்.

Image
 
நன்றிகள்,
ரேணுகா
 
Image courtesy:
Advertisements

4 thoughts on “கெத்து!!

  1. அருமை அருமை. மனதில் உள்ளதை அப்படியே வரிதுள்ளீர்கள். நம் தீவிரமான எண்ணங்கள்தான் நம்மை முன்னே இட்டு செல்கிறது. ஏதோ எங்கோ ஒரு சிறு பொறி தான் பல சாதனையாளர்களின் வாழ்க்கையில் திருப்பத்தை ஏற்படுத்தியுள்ளது என்பது கண்கூடு. அது உங்களுக்கும் கைக்கூடும். மிகுந்த மன உளைச்சலில் சோர்வுடன் இருந்த நிலையில்தான், ஜெவுக்கு எம்ஜிஆர் தான் கட்சியில் கொபசெ பதவி கொடுத்து உற்சாகபடுத்தினார். ஆனால் அதன் பின் அவர் கடந்து வந்த பாதை மிகுந்த சொதனையானது. அந்த மனோதைரியம் உங்களுக்கும் கிட்டட்டும். மற்றபடி நல்லமுறையில் வடிவமைத்து பிரசண்டேசன் செய்து இந்த பதிவை அளித்துள்ளீர்கள். Butterfly Effect சூப்பர். வாழ்க வளர்க உங்கள் கெத்து 🙂

Leave a Reply

Fill in your details below or click an icon to log in:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out /  Change )

Google+ photo

You are commenting using your Google+ account. Log Out /  Change )

Twitter picture

You are commenting using your Twitter account. Log Out /  Change )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out /  Change )

w

Connecting to %s