அம்மா வீடு..

Image
                          திருமணம் முடிந்து முதன் முறையாக அம்மா வீடு சென்று வந்தேன். இதற்கு முன்பும் விடுதியில் இருந்து வாரம் ஒருமுறை செல்வேன் தான். ஆனால் அதற்கும், இம்முறை சென்றதற்கும் நிறைய வேறுபாடுகள். அபிரிதமான பாசம், அதிக வகை உணவுகள், தம்பி, அக்கா குடும்ப வருகை என அமர்க்களமாகக் கழிந்தது. நேரம் புல்லெட் ட்ரைன் போல அல்லவா பறந்தது!!
                           உங்க ஊர்ல வெய்யில் ஜாஸ்த்தி, உங்க ஊர்லதான் கரண்ட்டே இல்லையே, என்ற செல்ல வாய் ஜாலங்கள்.. சீரியசான விவாதங்கள். கணவரின் ஒன்று விட்ட உறவுக்காரரைத் திட்டிய அம்மாவைக் கோவித்துக் கொண்டதற்கு “முன்னைப் போல இல்லை நீ ரொம்ப மாறிட்ட” என்ற அம்மாவின் குத்தல். “இன்னும் ரெண்டு நாள் இரும்மா” என்ற அப்பாவின் வாஞ்சை. “உங்களுக்கு வேலை தான நா செய்யறேன், அவள தொந்தரவு பண்ணாதீங்க” என்ற தம்பியின் கனிவு. “புள்ளைய சந்தோசமா வச்சுருந்து அனுப்பு” என்ற பாட்டி. இவர்களை விட்டு மறுபடி ஊருக்குப் போகவேண்டுமே என்று அச்சத்தை ஏற்படுத்தியது சில நேரம்.
                            ஊருக்குத் திரும்பும் அன்று காலையிலிருந்து பலகாரங்கள், இனிப்புகள், விட்டுச் சென்ற ஆடைகள், சான்றிதல்கள் எடுத்து அடுக்கும் பணி தொடங்கியது. வீட்டுக்குத் தேவையானவை, வடகம், நெய் முதலான பொருட்கள், பெயருக்குக் காசு கொடுத்துவிட்டு மைகோதி (மயிர் கோதி), அருவாள் போன்ற ஆயுதங்களும் எடுத்துக் கொண்டேன். அம்மா வீட்டில் இருந்து எடுத்து வரும் பைகளும் சுகமான சுமைகள் தான்..
                         எதேச்சையாக காலண்டரைப் பார்த்து “அம்மா தேதி கிழிக்கலையா?” என்றேன். அம்மா வேலை செய்து கொண்டே சாதரணமாக “அது நீ கடைசி நாள் கிழிச்ச தேதி, நீ வந்து தான் மறுபடி கிழிக்கனும்ன்னு விட்டுட்டோம்” என்றார். இதயம் ஒரு முறை நின்று துடித்தது. தேதி பார்த்தேன், பிப்ரவரி எட்டுடன் உறைந்து கிடந்தது நாட்காட்டி. ஒண்பதாம் தேதியை ஒரு நிமிடம் உற்றுப் பார்த்துவிட்டு மார்ச் 28 வரை கிழித்தேன். என் வாழ்வில் ஒரு அழகான தருணம், அழகான தருணங்கள் யாவும் கண்ணீரையும் வரவைத்து விடுகின்றன!
                       அடுத்த முறை அம்மா வீடு செல்லும் போது, மார்ச் 28 என்று காலண்டர் காட்டாமல் போகலாம். ஆனால்  இந்த முறை ஏற்படுத்திய “செண்டிமெண்டல் டச்” ஆயுசுக்கும் மறக்காது அல்லவா!! சில நேரங்களில் “செண்டிமெண்டல் இடியட்”டாக இருப்பது எத்தனை சுகமாக இருக்கிறது.
                       வாழ்க்கை அழகானது!!
குறிப்பு : எனக்குத் திருமணமானது பிப்ரவரி 9.
அன்புடன்,
ரேணுகா

Advertisements

6 thoughts on “அம்மா வீடு..

 1. அருமையான பதிவு. எல்லோர் வாழ்க்கையிலும் நடப்பதுதான். இருந்தாலும் அதை சுவைபட ரொம்ப கச்சிதமா, எந்தவிதத்திலும் மிகைபடாமல், சரளமான நடையுடன் படிப்பவர்களை ஈர்க்கும் வண்ணம் சொல்லியுள்ளீர்கள். வரிக்கு வரி சொன்னது நிஜமான வார்த்தைகள். வாழ்க்கையை ஒவ்வொரு கணமும் ரசிப்பவருக்குத்தான் இத்தனை திறமை வரும் என்பது நிதர்சனம்.

  மைகோதி/சிளுக்குவளி/ஈர்க்கொளி/அருவாள்/தன்னோட சர்டிபிகேட், கணவரிடம் காட்ட பழைய புகைப்படங்கள் etc etc..அடேங்கப்பா ! ஒரு புதுப்பெண் செய்யக்கூடிய அத்தனை அம்சங்களையும் மறவாமல் சுவைபட சொல்லி இருக்கிறீர்கள்.

  எதை சொல்லி பாராட்டுவது ? ஒவ்வொரு பாராவும் அருமை. பதிவு முழுவதும் மகிழ்ச்சி தாண்டவமாடினாலும், அந்த காலண்டர் தேதி விசயத்தில் மனத்தை என்னவோ பிசைந்த மாதிரி ஆகிவிட்டது. மனம் நெக்குருகி போய்விட்டது நிஜம்.அதில்தான் எவ்வளவு விஷயங்கள் அடங்கியுள்ளன. சுருக்கமா சொல்லி படிப்பவர்களின் கற்பனையை கிளரிவிட்டீர்கள். பிறந்த வீட்டுக்கு வரும்போது இருந்த மகிழ்ச்சி, புறப்படும்போது ஏற்படும் துயரம் போல் உங்கள் பதிவு மகிழ்ச்சியுடன் ஆரம்பித்து முடிவில் நெகிழ்ச்சியுடன்… வாவ் !

  வாழ்க்கை வாழ்வதற்கே என்றாலும் அதை ரசித்து வாழ்வது இறைவன் கொடுத்த வரம். எல்லாம் வல்ல இறைவன் உங்களுக்கு ஒரு குறையுமில்லாமல் வைத்திருக்க வேண்டிக்கொள்கிறேன்.

  உங்களின் எழுத்து நடை மிக வசீகரமாக, சுருக்கமாக,எளிமையாக இருக்கும் காரணத்தால், நீங்கள் எந்த தலைப்பிலும் இனி தயங்காமல் எழுதலாம் . படிப்போரை நிச்சயம் வசியபடுத்தி விடுவீர்கள் என்பது திண்ணம்.

  வாழ்க நலமுடன். நன்றி

Leave a Reply

Fill in your details below or click an icon to log in:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out /  Change )

Google+ photo

You are commenting using your Google+ account. Log Out /  Change )

Twitter picture

You are commenting using your Twitter account. Log Out /  Change )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out /  Change )

w

Connecting to %s