தெனாலிராமன்

Image

               ட்ரைலர் பார்த்ததில இருந்தே இந்தப் படத்தை பாத்தே ஆகனும்ன்னு சொல்லிட்டே இருந்தேன். ஆனா முதல் நாளே பாப்பேன்னு நெனக்கல. என் அவருக்கு நன்றிகள். இத்தன வருசத்துல முதல் நாள் பாத்த படம் தெனாலிராமன்  தான். பட விமர்சனம் எழுதிப் பழக்கம்  இல்லை. இருந்தாலும் எழுதுவேன், நீங்க  படிக்கணும். படிச்சே ஆகணும், ஆங்க்..
               தெனாலிராமன் கதைகள் எனக்கு அறிமுகமானது எங்க தாத்தாகிட்ட இருந்து தான், திருவாத்தான் கதைகள்ன்னு பல கதைகள் எனக்கு சொல்லிருக்கார். அப்பறம் அப்பா ஒரு புத்தகம் வாங்கிக் குடுத்தார். அது இன்னும் என்னோட புத்தக அலமாரில இருக்கு.
               திரு. இறையன்பு என்ன சொல்றாருன்னா,  தெனாலி ராமன் கதைகள் குழந்தைகளுக்கு உகந்தவை அல்ல அப்டிங்கறார். அதாவது, கூனன் கதை, அரண்மனை ஜோதிடர் கொல்லப் படும் கதை, பூனையைப்  கதை போன்ற பல கதைகளை உதாரணம் காட்டி, தெனாலிராமன் கதைகள் குயுக்தியானவை  என்கிறார்.
               நம்ம வடிவேலு நடித்த தெனாலிராமன் படத்தில் அத்தகைய குயுக்தியான கதைகள் இல்லாதது தற்செயலானதா என்று தெரியவில்லை.. வடிவேலுவின் தோற்றம், விகடகவிக்கே உரிய சிறு தொப்பை, தலைப்பாகை, கை கட்டி நிற்கும் பாங்கு, அமர்த்தலான பார்வை, நல்ல குரல் வளம் கண கச்சிதம். நீண்ட இடைவெளிக்குப் பிறகு நடித்த இரு கதாபாத்திரங்களும் அட்டகாசம். மன்னர் வடிவேலு காட்சிக்கேற்ப நகைச்சுவை புரிகிறார், கோபித்து கர்ஜிக்கிறார், குழந்தைகளிடம் பாசத்தில் குழைகிறார், குடிமக்கள் படும்பாட்டைப் பார்த்து சோகத்தைப் பிழிகிறார். வடிவேலுவைப் பொறுத்தவரை தெனாலிராமனில் அவரின் நடிப்பு மென்மேலும் மெருகேறியுள்ளது.
              படம் எனக்கு பிடித்திருந்தது. கிராபிக்ஸ் மற்றும் கேமரா கோணங்கள் கொள்ளை அழகு. அரண்மனைகள், கிராமம் மற்றும் ஐய்யனார் கோவில் வடிவமைப்புகள்  அருமை. கதாநாயகியின் ஆடைகள்  குறைவாக இருந்தாலும் நல்லாத் தான் இருக்கு. கோவில் கிணற்றை திருடர்களைக் கொண்டு தூர் வாருவது, பானைக்குள் யானை, எல்லாம் நன்மைக்கே கதை என்று கதைத் தேர்வுகள் அருமை. மன்னரை ரொம்ப நல்லவராகவும் அமைச்சர்களை இக்கால அமைச்சர்கள் போலவும் (நுட்பம்) சித்தரித்திருக்கிறார்கள். சீன வணிகம் தேவையற்ற துருத்தலாகவே தெரிகிறது. அது இல்லாமல் இன்னும் பல தெனாலி ராமன் கதைகளை சேர்த்திருக்கலாம்.
              படத்தில் நடித்த எல்லாருமே, நவரத்தின மந்திரிகளில் ஆரம்பித்து கிராம மக்கள் வரை நமக்குத் தெரிந்தவர்களாகவே இருப்பது ஒரு குதூகலத்தைத் தருகிறது. மற்றவற்றை நீங்கள் திரை அரங்கில் கண்டு களியுங்கள்..
குழந்தைகளுக்கு மிகவும் பிடிக்கும் இந்தத் தெனாலிராமனை, அதற்கு நான் கேரண்டி..
               இப்பத்திக்கு நான் திரும்பத் திரும்ப சொல்லிக் கொண்டு திரியும் வசனம் : “என்ன கெட்டுவிடப் போகிறது, எவன் கேட்கப் போகிறான்”.
டிஸ்கி: தெனாலிராமன் பார்ட் டூ எடுக்கலாம், நல்லா போகும்.. சரியா இந்த கோடை விடுமுறை சமயமா இருப்பதால் படம் நல்லா கல்லா கட்டும், “டும்”…
அன்புடன்,
ரேணுகா
Advertisements

3 thoughts on “தெனாலிராமன்

  1. முதல் விமர்சனம், மிக நன்றாகவே எழுதியுள்ளீர்கள். வாழ்த்துக்கள்!!

  2. நல்ல திரை விமர்சனம். தெனாலிராமனோடு திரை விமர்சனத்துக்குப் பிள்ளையார் சுழி போட்டிருக்கீங்க 🙂

    எனக்கும் இந்தப் படம் குழந்தைகள் கண்டு களிக்கும் விதத்தில் இருக்கும் என்று தான் நினைத்தேன். கோடை விடுமுறை நேரத்தில் வெளியிட்டிருப்பது நல்லது.

    amas32

Leave a Reply

Fill in your details below or click an icon to log in:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out /  Change )

Google+ photo

You are commenting using your Google+ account. Log Out /  Change )

Twitter picture

You are commenting using your Twitter account. Log Out /  Change )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out /  Change )

w

Connecting to %s