பாட்டி – என் சாய்குட்டி

வலைப்பதிவு ஆரம்பிச்சு இரண்டு வருடம் ஆனதைக் கொண்டாடும் விதமாக என் செல்லப் பாட்டிக்காக ஒரு பதிவு. பாட்டி பேரு திருமதி. சாயம்மா ராமசாமி.   இது கவிதையா, உரைநடையான்னு குழம்பாம படிக்கவும் (ஏன்னா, எனக்கே தெரியல:) ). கீழ இருக்க ஒவ்வொரு எழுத்தும் நிஜம், இன்னும் எழுதாம விட்டது எத்தனையோ இன்னும் இருக்கு. 

 
paati
 
சாய்குட்டி சாய்குட்டி 
என் செல்ல சாய்குட்டி
அழகு பெத்த பாட்டிக்கு 
என்னோட முத்தங்கள்
 
எத்தனையோ பேரிருந்தும் 
நான் மட்டும்  உனக்குத் தனி 
சித்திகளும் அத்தைகளும் 
முனுமுனுக்கும் கதை தெரியும் 
 
ஆத்து மணல எண்ணிடலாம் 
அர்ச்சுனன் மனைவிகளையும் எண்ணிடலாம் 
என் மேல நீ வச்ச பாசத்தை 
எண்ணுவது சுளுவு அல்ல 
 
பேத்தி வந்துருக்கான்னு பக்கத்து 
ஊட்டு பொடிசுல இருந்து 
ஊர்க் கோவில் சாமி வர 
தம்பட்டம் அடிச்சு வப்ப 
 
எனக்குன்னு செஞ்சு தரும் 
பலகாரம் பல தினுசு 
லீவுக்கு லீவு உன்னப் 
பாக்க என்னை இழுப்ப 
 
அம்பத்தாறு தேச ராஜான்னு 
கணீர்னு நீ ஆரம்பிக்க 
கதை சொல்றது உன் நாக்கு
மட்டுமல்ல காதுக் கம்மலுந்தான் 
 
பாட்டோட நீ சொல்லும் 
கதைகள் ஓராயிரம் 
சாமியுண்டு சக்தியுண்டு 
சொல்லாம நெஞ்சுல விதைச்ச 
 
தாயக்கட்டை, பல்லாங்குழி விளையாட்டில் 
நா சிரிக்க நீ தோத்துடுவ 
சிக்கனமும் சேமிப்பும் 
சலிக்காம சொல்லித் தந்த 
 
வாய்க்கு பிடிச்சதெல்லாம் 
வகை வகையா செஞ்சிடுவ 
பக்கத்துல  யாரும் அண்டாம 
படிக்க வச்சு பாத்திருப்ப 
 
நா படிச்ச புத்தகத்தை 
ஆசையோட அடுக்கி வப்ப 
மூக்குப் பொடியோட என் 
சலிப்பையெல்லாம் உறிஞ்சுடுவ 
 
நீ இருக்கும் தைரியத்தில் 
விடிய விடியப் படிச்சுருக்கேன் 
தலை வலி, கண்ணெறிச்சலுக்கு 
வித விதமா பத்திடுவ 
 
சுக்கும் மிளகும் வச்சு 
பல வைத்தியம் நீ செய்வ 
சுக்குல ஒன்னும் இல்ல 
உன் கைச் சூட்டுல தான் மருந்திருக்கு 
 
அலை ஓஞ்சு பாத்திருக்கேன் 
நீ ஓஞ்சு பாத்ததில்ல 
நூறாண்டு நீ வாழ 
சாமிக் கிட்ட சொல்லி வச்சேன் 
 
இன்னும் கொஞ்ச காலம் கூடவே இரு 
என் மகளையும் என்னப் போல வளர்த்திவிடு 
இப்பத்திக்கு மூக்கும் தாடையும் 
முட்ட ஒரு முத்தம் குடு
 
அன்புடன் 
ரேணுகா 
Advertisements

14 thoughts on “பாட்டி – என் சாய்குட்டி

 1. ஆஹா ஒவ்வொரு வரியும் உணர்ந்து அனுபவித்து ரசித்து தொடுத்த முத்துக்கள். இதைவிட அழகாக இனி சமர்ப்பிக்க முடியாது. வாழ்க பல்லாண்டு சாய் பாட்டி வாழ்ந்து கொள்ளு பேத்தியையும் மடியில் கிடத்தி கொஞ்சி வாழ்த்த வேண்டுமென எல்லாம்வல்ல இறைவனை வேண்டிக்கொள்கிறேன்.
  நன்றி. வாழ்க வளமுடன் ஒரு குறையுமல்லாமல் 🙂

 2. அழகா இருக்கு ரேணு..அல்மோஸ்ட் இனிமையான சந்தமும் இருக்கு கவிதை முழுக்க..பாட்டி நல்லாருக்கட்டும் 🙂

 3. A beautiful ode to your grandmother 🙂 இந்தக் காலக் குழந்தைகள் இதை படிக்க வேண்டும். பாடலும் ரொம்ப எளிமையா இருக்கு 🙂

  நிறைய பேர் பாட்டியின் அருமை பெருமைகள் தெரியாமலேயே இன்று வளருகின்றனர். அதில் இரு பக்கமும் fault உள்ளது. ஆசையாய் கதை சொல்லி அமுது படைக்கும் பாட்டிகளும் அரிதாகிவிட்டனர், ஆசையாய் பாட்டியை போய் கட்டியணைத்துக் கதைக் கேட்கும் குழந்தைகளும் குறைந்துவிட்டனர்.

  amas32

 4. சுக்கும் மிளகும் வச்சு
  பல வைத்தியம் நீ செய்வ
  சுக்குல ஒன்னும் இல்ல
  உன் கைச் சூட்டுல தான் மருந்திருக்கு ..இத வரி டச்சிங்..எனக்கும் ஒரு பாட்டியில்லையேன்னு ஏக்கமா இருக்கு.. வாழ்க பாட்டி, வளர்க உன் நாட்டி..!

 5. வெறும் வாய் வார்த்தையாகச் சொல்லல..உள்ளிருந்து சொல்றேன் எனக்கும் இப்படி ஒரு அம்மாச்சி இருந்தாங்க..இதைப் பார்க்கவும் அவங்க நினைவு வந்துடுச்சு…அவங்க இறந்த பிறகும் அவங்க நூல் சேலையில் அவங்க வாசம் நுகர்ந்து படுத்திருக்கேன்..அந்த அளவுக்கு மென்மையா இதமா இனி ஒரு சேலை எவரும் நெய்ய முடியாது.. பாட்டிகளின் பாசமே தனி..என் அண்ணன்கள் அனைவர்க்கும் எவருக்கு என்ன பிடிக்கும் எனத் தனித் தனியாக வைத்துக் கொடுத்து கெடுத்து விட்டதாக என் அம்மா புலம்புவதுண்டு 🙂 எனக்கு ஒரு கனவிருக்கு..அவங்களே வந்து எங்க வீட்டில் திரும்ப வந்து பிறக்க வேண்டும் என்று..
  ஒவ்வொரு சொற்களிலும் உள்ள யதார்த்தம் உணர முடிகிறது..அருமை ரேணு.. 🙂

Leave a Reply

Fill in your details below or click an icon to log in:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out /  Change )

Google+ photo

You are commenting using your Google+ account. Log Out /  Change )

Twitter picture

You are commenting using your Twitter account. Log Out /  Change )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out /  Change )

w

Connecting to %s