அம்மாவின் பொய்கள்

அண்ணன் நினைப்பாவே இருக்கும்மா என்று அழுகிறாள்டா

பாவம் ரெண்டு வார்த்தை தொலை பேசி விடு..

தங்கச்சிக்குத்தான்னு ஒரு கடிகாரம் வாங்கிட்டு வந்தான்

விடுமுறைக்கு வரும்போது எடுத்திட்டுப் போவியாம்..

உங்கள எதாச்சும் சொன்னா புள்ளங்களுக்கு

கோவம் பொத்துட்டு வருது, அப்படி மறுகறாங்க போங்க..

குழந்தைங்க சாப்பிட்டாச்சான்னு கேக்காம

ஒரு கவளம் சோறு கூட இறங்காது உங்கப்பாவுக்கு..

விதவிதமாக பொய்கள் பல சொல்லி

எங்களிடையே பிணைப்பை வளர்க்கும் அம்மா மேல்

ஆலமரமாய் பாசம் வேரூன்றி வளர்ந்திட

எந்தப் பொய்யும் தேவையிருக்கவில்லை

 

ரேணுகா

Advertisements

3 thoughts on “அம்மாவின் பொய்கள்

  1. முற்றிலும் உண்மை. இந்தப் பொய்கள் இல்லாத உறவில் வெறும் விரிசல்கள் தான். ரொம்ப அருமை!

    amas32

  2. அடாடா நெஞ்சை தொட்டுட்டீங்க ரேணு.

    “விதவிதமாக பொய்கள் பல சொல்லி

    எங்களிடையே பிணைப்பை வளர்க்கும் அம்மா மேல்

    ஆலமரமாய் பாசம் வேரூன்றி வளர்ந்திட

    எந்தப் பொய்யும் தேவையிருக்கவில்லை” – இங்க நிக்கிறீங்க ரேணு

    ஒவ்வொரு வரியிலும் உள்ள பொய்யும் மெய்தான். நாமெல்லோரும் அதை கடந்து வந்தவர்கள்தான்.

    தாய் வாய்மொழிந்த குற்றமில்லா பொய்களை
    மெய்யாக்கி (உணர்ந்து) நாமும் நம் வாழ்க்கையை
    பொம்மைபோல் இயந்திரதனமில்லாமல்
    செம்மையாக நடத்தி சந்ததியர்களுக்கு வழி காட்டுவோமாக

    வாழ்க நீடுழி !

Leave a Reply

Fill in your details below or click an icon to log in:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out / Change )

Twitter picture

You are commenting using your Twitter account. Log Out / Change )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out / Change )

Google+ photo

You are commenting using your Google+ account. Log Out / Change )

Connecting to %s