நானும் மாறிப் போனேனே!!

read-bookshelf

 

திருமணமாகி நேற்றோடு ஒன்பது மாதங்கள் கடந்துவிட்டன. நான் என்னைப் பற்றி யோசிக்க ஒரு நாள் கிடைத்தது. முன்பு இருந்த என் உலகம் வேறு, இப்போதைய என் உலகம் முற்றிலும் வேறு.

உணவு, தூங்கும் நேரம், இடம், செய்யும் வேலைகள், நண்பர்கள், அம்மாவின் அருகாமைகள் எல்லாமே தாறுமாறாக மாறிவிட்டது.

வீட்டு வேலைகள் ஒன்றும் பெரிய பிரதானம் இல்லை, காலை இரண்டு மணி நேரம் வேலை முடிந்தால் மாலை வரை தொலைகாட்சி, இணையம், தூக்கம் மட்டுமே. முனைவர் பட்டம் வாங்கிவிட்டு வேலைக்கு செல்லவில்லையா என்று பலர் கேட்பது எனக்கும் கேட்கிறது. அது தனியாக இன்னொரு நாள் சொல்கிறேன்.

இடையில் ஏற்பட்ட சில சிறிய உடல்நலக் கோளாறுகளால், மீண்டும் ஒரு மாற்றம். ஒரு நாளைக்கு 16 மணி நேரத்துக்கு மேல் தூங்க ஆரம்பித்தேன், முன்னெப்போதும் இல்லாத வகையில்.

எனக்குத் தெரிந்து என் எல்லா பழக்கங்களும் சற்றேனும் மாறியிருக்கின்றன என்பதை உணர்கிறேன். எனக்கு தேவையானது மட்டும் செய்வது, சுயநலம், ஆதிக்க குணம், கர்வம் எல்லாம் சிறிது குறைந்து மென்மையாகி இருக்கிறேன் (நினைக்கிறேன்).

எப்போதும் பெரிய தோழிகள் வட்டம் எல்லாம் கிடையாது என்றாலும், குறிப்பிட்ட இடைவெளிகளில் ஒரு முறை தொலைபெசிவிடுவேன். இப்போது “whataspp”பில் உள்ள தோழிகள் மட்டுமே தொடர்பில் (Self thoo J).

ஆறு, ஏழு வயதிலேயே, நானாகவே முயன்று சிறுவர் மலர், ஆனந்த விகடன், கல்கண்டு படிக்க ஆரம்பித்து விட்டேன். அந்த வாசிக்கும் பழக்கமாவது மாறாமல் இருக்கிறதா என்றறிய இந்த ஒன்பது மாதங்கள் படித்த புத்தகங்கள் என்னவென்று ஒரு கணக்கெடுத்தேன்.

மாத, வார இதழ்கள் தவிர்த்து,

கிட்டத்தட்ட முப்பது நாவல்கள் – ரமணிச்சந்திரன்

உடையார் – பாலகுமாரன்

நாகதேவி – சாண்டில்யன்

இனிப்பு – செந்தமிழன்

முதல் முறை மழை பெய்த போது பூமியில் மரங்கள் இல்லை – செந்தமிழன்

தெய்வம் உணாவே – செந்தமிழன்

அடுத்த வினாடி – நாகூர் ரூமி

துணிந்தவனுக்கே வெற்றி – ஜாக் கேன்ஃபீல்ட்

Five point someone – சேத்தன் பகத்

கர்ணன் – பாலகுமாரன்

One night at the call center – சேத்தன் பகத்

Three mistakes of my life – சேத்தன் பகத்

நரிப்பல் – இறையன்பு

Revolution 2020 – சேத்தன் பகத்

நல்ல சோறு – ராஜ முருகன்

மரபுச்சுவை – காந்திமதி

எல்லாப் பெண்கள் இதழ்களின் 30 வகை சமையல்கள்

பாதி படித்து மீதி உள்ளவை

பகவத் கீதை ஒரு தரிசனம் – ஓஷோ

கலீல் ஜிப்ரான் உருவகக்கதைகள் – ஆ.மா. சகதீசன்

லாவோத்ஸுவின் சீன ஞான கதைகள் – குருஜி வாசுதேவ்

இவை போக முகநூலை நான் சொல்லவே இல்லை பார்த்தீர்களா? 😉

இந்த வரிசையை வைத்துப் பார்க்கையில் வாசிப்புப் பழக்கம் மிகவும் மோசமாக போய் விடவில்லை என்றே தோன்றுகிறது. ஆனாலும், இதில் என்ன  வேடிக்கை என்றால், ரமணிச்சந்திரன் தவிர்த்து பிற நூல்கள் எல்லாமே கணவரின் சிபாரிசு அல்லது அவரது புத்தக அலமாரியிலிருந்து  எடுக்கப் பட்டவை.

ஹ்ம்ம்.. பார்க்கலாம்..

மாற்றம் ஒன்று தான் மாறாதது.. J

Advertisements

8 thoughts on “நானும் மாறிப் போனேனே!!

  1. கேட்பதற்கு பரம சுகமாக உள்ளது. என் வாழ்த்து என்றும் பொய்பதில்லை. மனம்போல வாழ்வு என்றென்றும் நிலைக்கட்டும். குடும்பம் பெரிதாக பெரிதாக பொறுப்புகள் கூடும். படிப்பதற்கு நேரம் கிடைக்காமல் போகலாம். ஆனால் உங்கள் கணவர் இருக்கிறாரே. படித்து ருசித்து நிச்சயம் உங்களிடம் பகிர்வார் 🙂 வாழ்க வளர்க 🙂

    1. நீங்க சொல்றது எனக்கு ரொம்ப ரொம்ப சந்தோசமா இருக்கு :-))))))) நன்றிங்க அய்யா :-)))))

Leave a Reply

Fill in your details below or click an icon to log in:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out /  Change )

Google+ photo

You are commenting using your Google+ account. Log Out /  Change )

Twitter picture

You are commenting using your Twitter account. Log Out /  Change )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out /  Change )

w

Connecting to %s