நான் யார்?

நான் யார்.. இந்தப் பிரசித்தி பெற்ற கேள்வியைத் தனக்குள் கேட்டுக் கொள்ளாதவர்கள் எண்ணிக்கை மிகச் சொற்பமே. இந்தக் கேள்வியும் இதற்கான பதில்களும் ஆளுக்கு ஆள் வேறுபடலாம். அல்லது பூமியில் உள்ள எல்லா உயிர்களுக்கும் பொதுவானதாகவும் இருக்கலாம்.

ஒவ்வொரு முறை இந்தக் கேள்வி எனக்குள் எழும்போதும் அப்போதைய வயதுக்கும் அறிவுக்குமான ஒரு பதில் தோன்றி வந்திருக்கிறது. தன்னை அறிவது என்பது பெரும்பாலும் மத, தத்துவ சித்தாந்தங்களுடன் சம்பந்தப்பட்டது. இதன் எந்த சாயலும் இல்லாமல் எனக்குள் நானே நான் யார் என யோசிக்க விரும்புகிறேன்.

நான் யார்? உடலா, உயிரா, மனமா, செயலா, மூச்சுக்காற்றா, நினைவா, அறிவா எது நான்?

உடலும், உயிரும் மட்டும் நான் என்றால் “நான்” எனபது என்தாய் தந்தை தான்.

மூச்சுகாற்று உடல் அவயங்கள் உதவி இல்லாவிட்டால் வெறும் காற்று தான், எனவே இங்கும் “நான்” என்றால் என்தாய் தந்தை தான்.

மூச்சு இதயத்தோடு சம்பந்தப்பட்டது போல, நினைவுகள் மூளையோடு சம்பந்தப்பட்டவை, எனவே நினைவுகளும் “நான்” அல்ல.

செயல்கள் தான் நான் என்றால், நான் செய்யும் செயல்கள் எதுவுமே தனித்தன்மை வாய்ந்தது என்று கூற முடியாது. காலை முதல் இரவு உறக்கம் வரை மற்றவர்கள் செய்வதையே நானும் செய்கிறேன். உதாரணமாக ராஜராஜ சோழன் பெரிய கோவிலை கட்டினான், அந்த செயலே ராஜராஜ சோழன் என்றால் அதை என்னால் ஒப்புக் கொள்ள முடியவில்லை. அப்போது மற்ற ஆயிரமாயிரம் “நான்”கள் எல்லாம் அடையாளம் அற்றவையா? எனவே என் செயல்கள் “நான்” அல்ல.

அறிவு, நான் படிக்கும் விஷயங்களால் வந்தாலும் அதை விட மரபாக தலைமுறை தலைமுறையாக வருவதே அதிகம். உதாரணமாக பிறந்த குழந்தை தாய் முலை தேடி பால் அருந்துவதும் அறிவுதான். மேலும் எந்த அறிவும் இல்லாவிட்டாலும் இந்த “நான்” மிஞ்சி நிற்கும்.

மனமானது உடல், உயிர், மூச்சு, அறிவு, செயல், நினைவு எதையும் சட்டை செய்யாது. “நான்”, “எனக்கு” என்று மட்டுமே அரற்றும், “தான் தான்” என்று மார்தட்டும். நன்றி கெட்டு பெற்றோரைக் கூட நோகடிக்கும், பின்பு தோற்று காலில் விழுந்து கெஞ்சும். நம் தனித்தன்மையை சாகவிடாது, கடைசி வரை நம்முடனே பயணித்து நம்முடனே மடியும் மனம் தான் “நான்”.

இந்த மனதைத் தவிர என் உடல், உயிர், அறிவு, மூச்சு, செயல், நினைவு, முகம், சாயல், கம்பீரம், படிப்பு, வாழ்க்கை, சிந்தனை என அனைத்தையும் தந்தது எங்கள் ஆருயிர்த் தாய் தந்தை தான்.

என் கால் தூசி கூட எனதில்லை என்று தோன்றுகிறது.

குழந்தைகள் தினத்தில் திருமணம் செய்து கொண்டதால் தானோ என்னவோ  தங்கள் முழு வாழ்வையும் எங்கள் மூவருக்கே தத்தம் செய்த அம்மா அப்பாவுக்கு எங்கள் “மனமார்ந்த” இனிய திருமண நாள் நல்வாழ்த்துக்கள்.

appa amma 1

என வாழ்த்தி மகிழும்,

நானும், என்னுடன் எல்லாவற்றையும் பகிர்ந்துகொள்ளும் என் அக்கா மற்றும் தம்பியும்.

Advertisements

5 thoughts on “நான் யார்?

 1. ஈதல் இசைபட வாழ்தல் அதுவல்ல(து)

  ஊதியம் இல்லை உயிர்க்கு

 2. “நான் யார்” என்பது எனக்கு இன்றளவும் ஒரு புரியாத புதிர். ஆழமா போனா எனக்கு சித்த பிரமை பிடித்துவிடும் என்பதால் அவ்வளவ்வா கண்டுகொள்வதில்லை. அதற்கான அறிவு எனக்கில்லை என்றுதான் சொல்லவேண்டும்.

  ஆனா நீங்க இந்த சின்ன வயதில் ஒரு தெளிவோடு இருக்கீங்க. ஆச்சர்யமா இருக்கு. இன்றைய வாழ்கையில், எல்லா இன்ப துன்பங்களை அனுபவித்து செல்வதுதான் நமது கடமை. அதைத்தான் நமது பெற்றோர்கள் செய்தார்கள். நம் வாழ்கையில் நாம் செய்ய வேண்டிய கடமைகளை செவ்வனே செய்த பின்தான் ஒரு பற்றற்ற நிலை வரும். அப்போது “நான் யார்” என்ற சிந்தனையை முயற்சிக்கலாம். இப்பொழுது பலர் நம்மை நம்பியுள்ளார்கள். அவர்களை விட்டுவிட்டு தூரம் போகலாகாது.

  மிக வித்தியாசமா ஆத்மார்த்தமா பெற்றோர்களின் திருமணநாள் வாழ்த்தை தெரிவித்ததில் தனித்து நிற்கிறீர்கள். வாழ்த்துகள். இதைவிட பெரும்பேறு அவர்களின் 60 ஆவது திருமணத்தை பிள்ளைகள் நீங்கள் நடத்தி வைப்பதுதான். வாழ்த்துகள்

  1. உங்க பின்னூட்டத்துக்காக காத்துகிட்டே இருந்தேன் 🙂 நன்றிகள் பல.
   உங்கள் ஆசிகளுக்கு நன்றி 🙂

Leave a Reply

Fill in your details below or click an icon to log in:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out /  Change )

Google+ photo

You are commenting using your Google+ account. Log Out /  Change )

Twitter picture

You are commenting using your Twitter account. Log Out /  Change )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out /  Change )

w

Connecting to %s