தேவதை

00026790

ன்னிசை பாடி வரும் இளங்காற்றுக்கு உருவம் இல்லை” காதோடு கேட்ட பாடலில் மனமுருகிக் கொண்டிருந்தது.

கோவையிலிருந்து மதுரைக்கு  ஒரு தோழியின் திருமணத்திற்கு சென்று கொண்டிருந்தேன். ஜன்னலோரக் காற்றும் வழியில் வேகமாகப் பின் நகரும் வயல் வெளிகளும் பேருந்தின் தாள லயமும் இது தான் சொர்க்கலோகம் என்றது.

கண்கள் மூடி ஒரு மோன நிலையில் சித்ராவின் குரலில் என்னைத் தந்திருந்தேன்.

திடீர் என்று இனம் காண முடியாத அடர்த்தியான வாசனையறிந்து வேகமாகப் பக்கத்து இருக்கையைப் பார்த்தேன்.

“மதுரைக்குங்களா?” என்று கரகரப்பான குரலில் கேட்டது அப்பெண் தான்.

“ஆமாங்க” என்று விட்டு கண்கள் மூடிக்கொண்டேன்.

இவர் வேறெங்காவது அமர்ந்திருக்கலாம் என்று விதியை நொந்துகொண்டிருக்கையில் “காதல் சுகமானது” பாடல் முடிந்திருந்தது.

அம்மணி ஒரு தடித்த ஆங்கிலப் புத்தகத்தை பாதியிலிருந்து தொடங்கி படிக்கத் தொடங்கும்போது காரணமற்ற ஒரு பதட்டம் தொற்றியிருந்தது எனக்குள்.

ஓரக்கண்ணால் பார்த்ததில் முகம் முழுக்க அப்பியிருந்த பவுடரும், அடர்த்தியான கண் மையும், அழுத்தமான உதட்டுச்சாயமும் தெரிந்தன.

எதுக்கு இத்தன மேக்கப்போ என்ற எரிச்சலுடன் கடந்தது “குழலூதும் கண்ணனுக்கு குயில் பாடும் பாட்டு கேக்குதா”!

டக்கென்ற குலுக்களுடன் பேருந்து நின்றது. எல்லாத் தலைகளும் ஒரே புறமாகத் திரும்பி சாலையின் முன்னே நடந்து விட்டிருந்த விபத்தைப் பற்றி அறிந்துகொள்ளத் துடித்தன.

ஒரு இளைஞன் இரு சக்கர வாகனத்தலிருந்து தூக்கி எறியப்பட்டு கீழே கிடந்தான். தலை கவசம் அணிந்திருந்ததால் உயிர்க்கு சேதாரம் இல்லை என்பது தெரிந்தது.

ஒரு பெருமூச்சுடன் “ம்ச், பாவம்” என்றவாறு ஹெட் செட்டை ஒரு காதில் இருந்து தளர்த்தியவள், திடீரென அருகில் அந்த அடர்ந்த வாசனை இன்மை உணர்ந்தேன்.

ம்புலன்ஸ் இப்ப வந்துரும்”, அதுக்குள்ளே இவருக்கு முதலுதவி செய்கிறேன் என்று சொல்லியவாறு அங்கிருந்த ஒரு போலிசை உதவிக்கு வைத்து எதோ செய்து கொண்டிருந்தாள் அவள்.

சொன்னது போல சில நிமிடங்களில் ஆம்புலன்ஸ் வந்து சேர “என் ரத்தம் ஒ பாசிடிவ், உபயோகமா இருக்கும்” என்று அவளும் ஆம்புலன்சில் ஏற, கண்டக்டரிடம் சொல்லிவிட்டு, அவசரமாகக் கீழே இறங்கினேன்.

அவளின் புத்தகத்தையும் கைப்பையையும் தந்துவிட்டு திரும்பியபோது அந்த வாசனை அவ்வளவு மோசமாகத் தோன்றவில்லை.

வழக்கமாக இவள் போன்ற திருநங்கைகளை வேடிக்கை பார்க்கும் மக்கள் கூட்டம் கூட இன்னும் கொஞ்சம் மரியாதையாகப் பார்த்து.

பேருந்து மீண்டும் மதுரையின் பாதையில், அதே தாள லயத்தில். அவளின் பெயர் கூடக் கேட்டு வைத்துக் கொள்ளவில்லை என்ற குறையோடு ஹெட் செட்டை காதில் பொருத்தினேன்.

“உளி தாங்கும் கற்கள் தானே மண் மீது சிலையாகும்,

வலி தாங்கும் உள்ளம் தானே நிலையான சுகம் காணும்”

தேவதைகளுக்கு பெயர் தேவையா என்ன?!

அன்புடன்,

ரேணுகா

Advertisements

6 thoughts on “தேவதை

 1. அருமையான கதை சொல்லும் திறன் உங்களுக்கு உள்ளது, மேலும் அதை வளர்த்துக்கொள்ள வாழ்த்துக்கள்!

 2. அருமை. நல்லதொரு கருத்து. எழுத்து நடை சீராக இருந்த தால், மேற்கொண்டு படித்துக்கொண்டு போக இதமாக இருந்த து.
  எனக்கு ஏற்பட்ட சிறு நெருடல்.
  பாரா 13.
  1. அவளின் பரிதாப உணர்ச்சியை இன்னும் கொஞ்சம் கூட்டியிருக்கலாம்.
  2. தளர்த்தியவள் , என்பதற்கு பதிலாக, தளர்த்தினாள் என்றிருக்க வேண்டும். அல்லது அடுத்து வரும் வரி அவளைப்பற்றியதாக இருக்க வேண்டும். மாறாக கதாசிரியரான உங்களை பற்றி முடிகிறது.
  3. நீங்கள் பாட்டு கேட்டுக்கொண்டு இருப்பதை சொல்லி விட்டீர்கள். ஆனால் அவளுமா ? தடித்த ஆங்கில புத்தகம், பவுடர், கண்மை, உதட்டு சாயம் பற்றி சொன்ன நீங்கள், அவள் காதில் ஹெட்போன் இருந்த து என்று அந்த பாராவிலே சொல்லியிருந்தால் நலமாக இருந்திருக்கும். திடீரென்று, இந்த பாராவில் அவள் காதிலிருந்து ஹெட் செட்டை தளர்த்தினாள் என்று வாசிக்கும்போது, சிறு நெருடல். கதை போக்கில் இதை பெரிதாக வாசகர் எடுத்துக்கொள்ள மாட்டார்கள். இதையெல்லாம் டீட்டெய்லா சொல்லாமலே புரிந்து கொள்வார்கள் என்பதில் ஐய்யமொன்றுமில்லை.
  என்னடா குறை சொல்றானே ன்னு தவறா எண்ணாமல், இன்னும் கொஞ்சம் மெருகூட்டி இருக்கலாம்தானே என்ற ஆர்வத்தால்…..
  நன்றி. கதை கருத்து அருமை. வாழ்த்துகள்.
  “தேவதைகளுக்கு பெயர் தேவையா என்ன” – சூப்பர் :))

  1. நன்றி பாஸ்..

   தளர்த்தியவள் என்று என்னைப் பற்றித் தான் சொன்னேன், தளர்தியவள் (தளர்த்திவிட்டு) பக்கத்தில் அவளைக் காணாமல் தேடினேன். அவள் ஹெட் செட் அணிந்திருக்கவில்லை.
   உங்களைக் குழப்பத்தில் ஆழ்த்தியதற்கு சாரி 🙂

 3. முகம் சுளித்து பின் சிலாகிக்கும் தருணம் எல்லோருக்கும் வாய்ப்பதுண்டு😱 சூப்பர்பா👏👍👌

Leave a Reply

Fill in your details below or click an icon to log in:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out /  Change )

Google+ photo

You are commenting using your Google+ account. Log Out /  Change )

Twitter picture

You are commenting using your Twitter account. Log Out /  Change )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out /  Change )

w

Connecting to %s