நமது பாரதம்

india-culture-map

சுதந்திர தின நிகழ்சிகளைத் தொலைக் காட்சியில் பார்த்துக் கொண்டிருந்தோம். வண்ண வண்ண ஊர்திகள் இந்தியாவின் பல மாநிலங்களில் இருந்து வந்த காட்சிகள் மனதை விட்டு என்றும் அகலாது. எத்தனை வகை மக்கள், ஆடைகள், மொழிகள், கலாச்சாரம், வேறுபட்ட இனக் குழுக்கள் என்று இருந்தாலும் அனைத்தையும் ஒரு குடைக்குக் கீழ் அமைக்கும் இந்திய அரசின் வலிமை வியக்க வைக்கிறது.

இப்படிப் பட்ட வேற்றுமையில் ஒற்றுமை கொண்ட நமது பாரதம் பற்றி நினைக்கும் போது நெஞ்சம் விம்முகிறது. நாம் செய்ய வேண்டிய கடமைகள் நிறைய இருக்கின்றது. நம் மாநிலத்தின் பாரம்பரியத்தைக் காப்பாற்றிக் கொண்டு அதே சமயத்தில் இந்தியப் பிரஜையாகவும் இருப்பதில் தான் நமது பெருமையும் அழகும் உள்ளது.

என்னால் முடிந்தது என்று நான் நினைத்ததைக் கூறுகிறேன்,

 1. முடிந்த வரை தமிழக உடைகளான (வேட்டி, சேலை) கட்டுவது, தினமும் இல்லாவிட்டாலும் முக்கிய தினங்கள் மற்றும் சுப நிகழ்சிகளில்
 2. பொங்கல் போன்ற நமது விழாக்களை முடிந்த அளவு பாரம்பரியமாகக் கொண்டாடுவது
 3. வீட்டு வாசலில் கோலமிடுவது
 4. பாரம்பரிய அரிசி மற்றும் தானியங்களில் செய்த உணவுகளை உண்பது
 5. பாரம்பரிய சமையல் குறிப்புகள் சேகரிப்பது
 6. பல்லாங்குழி, தாயம், தட்டாங்கல் போன்ற விளையாட்டுக்களை மறக்காமல் அவ்வப்போது விளையாடுவது
 7. பெரியவர்களுக்கு மரியாதை கொடுப்பது பற்றி சிறுவர்களுக்குக் கற்றுத் தருவது
 8. திருக்குறள் கற்பது
 9. பழந்தமிழ் இலக்கியங்களைக் கற்பது
 10. முடிந்தவரை பிறமொழிக்கலப்பிலாத தமிழிலேயே உரையாடுவது
 11. இந்திய அரசியல் அமைப்பு சட்டத்தைப் பற்றி தெரிந்து கொள்ள முயல்வது
 12. தமிழக விளையாட்டுக்களை ஊக்கிவிப்பது
 13. நாட்டு மாடுகள், நாட்டு நாய்கள் ஆகியவற்றைப் பராமரிப்பது, அல்லது பராமரிப்பவருக்கு உதவுவது
 14. நல்மரங்கள் நடுவது
 15. பொது இடத் தூய்மையைப் பேணுவது
 16. பிளாஸ்டிக் பயன்பாட்டைக் குறைப்பது/தவிர்ப்பது

 

இதைத் தவிர கமெண்டில் கூறப்படும் நல்ல கருத்துக்களும் சேர்த்துக் கொள்ளப் படும்.

 

ஜெயஹிந்த்

ரேணுகா

Advertisements

2 thoughts on “நமது பாரதம்

 1. அருமை அருமை நன்றாக உணர்ந்து எழுதியிருக்கிறீர்கள். இராணுவத்தினரின் அணிவகுப்பையும், மாநிலங்களின் கலாச்சாரத்தை பதிவுபண்ணும் ஊர்திகளை பார்க்கும் ஒவ்வொரு இந்தியனுக்கும் ஏற்படக்கூடியதே. அந்த உணர்வை நம் இந்தியர் எல்லாருக்கும் உள்ளே நீடித்து நிலைத்திருக்க வேண்டும். அப்படியிருந்தால் தானாகவே இது என் நாடு என்ற தேச பக்தி உருவாகும்.

  மக்கள் ஒற்றுமையுடன் இருந்தால் நம் கதி அதோ கதிதான் பிழைப்பு நடத்த முடியாது என்ற எண்ணத்தில் சுயநலமிக்க அரசியல்வாதிகளும் , பன்னாட்டு நிறுவனங்களும், ஊடகங்களும் பொய் பிரச்சாரம் செய்து மக்களை ஜாதி மதம் கட்சி என்று பிரித்து எங்கேனும் ஒற்றுமை ஏற்பட்டு விடக்கூடாதே என்று கங்கணம் கட்டிக்கொண்டு செயல்பட்டு கொண்டிருக்கின்றன.. நம் மக்களும் அறிந்தும் அறியாமலும் அதற்கு அடிமைப்பட்டு ஒருவருக்கொருவர் இகழ்ந்தும் அடித்துக்கொண்டும் எதிலும் போட்டி மனப்பான்மையுடன், கொஞ்சமும் சகிப்பு தன்மை இல்லாமலும் பல வருடங்கள் வாழ்ந்து வந்து கொண்டிருக்கிறோம்.

  இதற்கு தீர்வு , ஒவ்வொரு வீட்டிலிருந்துதான் ஆரம்பிக்க வேண்டும். இளம்பிரயத்திலிருந்தே கொண்டு வரவேண்டும்.எவ்வளவு கடுமையாக இருந்தாலும், கொஞ்சமும் செல்லம கொடுக்காமல், கண்டிப்பது நம் பிள்ளைகளை, அவர்களின் எதிர்காலத்திற்க்காகத்தான் என்றெண்ணி பெற்றோர்கள் வளர்க்கவேண்டும். ஜாதி மதம் பாராட்டாமல் நல்லவிதமாக வளர்க்கவேண்டும். முக்கியமா பெரியோர்களை மதிக்க வேண்டும் சொற்படி நடக்க வேண்டும்.

  சிறுவயதில் பெரியோர் கால்களில் விழுந்து நமஸ்காரம் பண்ண வேண்டும் என்று எனது தகப்பனார் சொல்லும்போதெல்லாம் சிறிது கூச்சத்துடனேதான் செய்வோம். அதை கண்ணுற்ற தகப்பனார், நீ பெரியவர்களின் காலில் விழுந்து வணங்கும்போது, நீ அவர்களின் சக்தியை, செல்வாக்கை வாங்கிகொள்கிறாய். அவைகள் உனக்கு மறைமுகமாக வந்து சேரும். ஜென்மத்திலும் உனக்கு சாபமிடமாட்டார்கள். அப்படியே இருந்தாலும் உனக்கு அது பலிக்காது என்று சொன்னார். அதிலிருந்து நானும் என் சகோதரர்களும் பெரியவர்களின் காலில் இன்றுவரை விழுந்து வணங்கி வருகிறோம் . சிறு வயதில் சொல்லிக்கொடுப்பது பசுமரத்தாணிபோல் மனதில் பதிந்துவிடும். ஒவ்வொரு கண்டிஷனுக்கு பின்னால் நல்ல சுவையான கதை, கற்பனைகளை தூவி அவர்களை நம் வழிக்கு கொண்டு வரலாம்.

  உங்களுக்கு என் வாழ்த்துகள். உங்கள் மனம்போல எல்லாம் அமையும். தெய்வமே துணை.

  தெய்வம் வேறு யாருமில்லை. நம் முன்னோர்களின் ஆவிதான் அங்கே இஷ்ட தெய்வத்திடம் தஞ்சமடைந்து நம்மை அனுதினமும் ஆசிர்வத்தித்துக்கொண்டிருக்கின்றன.
  நன்றி :)))

  1. எங்க அம்மாவும் பெரியவர்களிடம் ஆசி வாங்க சொல்வதில் மிகுந்த கண்டிப்பு. உங்கள் வாழ்த்துக்களுக்கு மிக்க நன்றி சார் :))

Leave a Reply

Fill in your details below or click an icon to log in:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out /  Change )

Google+ photo

You are commenting using your Google+ account. Log Out /  Change )

Twitter picture

You are commenting using your Twitter account. Log Out /  Change )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out /  Change )

w

Connecting to %s