இறைவி

467402-iraivi

 

முகநூலில் பகிர்ந்த நாள் 11 June at 17:11

எனக்குத் தெரிஞ்சு என்னைத் தவிர எல்லாரும் இறைவி விமர்சனம் எழுதிட்டீங்க.. நான் மட்டும் எதாச்சும் சொல்லாம விடலாமா என்ற ஆதங்கத்தில் நானும் எழுதிக்கிறேன்.🙂

படம் நல்லா இருக்கு.. எடுத்திருக்க காட்சிகள், பின்னணி இசை எல்லாம் நல்லா இருக்கு.

ஒரு எல்லா ஆண்களும் ஒரு வகையில் சுயநலவாதிகள்ன்னு தோனற மாதிரி எடுத்திருக்காங்க. ஆனா உண்மையில் பெண்களுக்கு சமமா ஆண்களிலும் நல்லவர்கள் இருக்கிறார்கள்.

அஞ்சலி நல்ல தேர்வு, பின்னிட்டாங்க.. கமாலினி வேட்டையாடு விளையாடு படத்துல வரமாதிரியே இருக்காங்க. good.

தயாரிப்பாளர் சம்பந்தப்பட்ட சீன்லாம் படு மட்டம்.

காலேஜ் பசங்க சண்டை, சிலைத்திருட்டு, iraiviசிலைன்னுசம்பந்தா சம்பந்தம் இல்லாம படம் அது பாட்டுக்கு போகுது. கொஞ்சம் முன்னாடியே முடிச்சிருக்கலாம். கொஞ்சம் போர் தான்

அப்படி நல்லபடம் நல்ல படம்ன்னு சூர்யா என்ன படத்த எடுத்திருப்பார்ன்னு ஐ தின்க் பண்ணிட்டிருக்கேன். ஒன்னும் புலப்படல.
ஆனா ஒன்னு, படம் ரிலீஸ் ஆகி ஓடாம இருந்தாலும் அவர் குடிச்சு குடிச்சு யாழுவ டார்ச்சர் பண்ணிருப்பார். அந்தமட்டும் யாழினி முடிவு சரியானதே.

விஜய் சேதுபதிய கொல்லாம விட்டிருக்கலாம்ன்னு தோனுச்சு. ஆனா அந்தக் கேரக்டர் சாக வேண்டிய கேரக்டர் தான். கல்யாணம் பண்ணிக்கிட்ட காரணத்துக்காக அஞ்சலி காலம் பூரா கஷ்டப்பட வேண்டியதில்லை.
பாபி சிம்ஹா வேற திட்டம் போட்டு காமெடி பண்ணிகிட்டு.. பெருசா ஈர்க்கல

இப்படித் தலைல அடிச்சு கொலை பண்ணிக் காமிக்கறதத் தவிர்க்கலாம் இயக்குனர்கள். ப்ச்

ஒரே சீன்ல ரெண்டு பேரக் கொலை செஞ்சு ஒருத்தன ஜெயிலுக்கு அனுப்பிச்சு மக்களை திகைக்க வச்சு படம் ஹிட்டாக்கலாம்ன்னு இயக்குனர் நினச்சுருப்பார் போல.

சீனு சூர்யாவ ரயில்வே ஸ்டேசனுக்கு கூட்டிட்டு வர சீன் சுத்தமான நாடக பாணி.

அஞ்சலி மழைல நனையற மாதிரியும், கமாலினி வேண்டாம் நனைஞ்சுருவோம்ன்னு சொல்லற மாதிரியும் முடிச்சிருக்கார்.

விசே சாகாம இருந்திருந்தா அஞ்சலி அவன்கூட தான் குப்பை கொட்டிட்டு இருந்திருக்கும். அருள்-யாழ் ஜோடிக்கும் அதேகதைதான்.
இறைவிங்க என்ன சாதிச்சாங்க, அவங்க தனித்தன்மை என்ன எதுவுமே சரியா காட்டல. இந்த விஷயத்துல பாலச்சந்தர் பரவாயில்ல.

பெண்கள் சகிச்சுக்கிட்டு இருந்தா சந்தோசமா இருக்கலாம்ன்னு சொல்ற சாதாரண படம் தான் இது, எனக்கு இதுல பெண்ணியம் எல்லாம் தெரியல 🙂

முற்றும்

ரேணுகா

Advertisements

One thought on “இறைவி

  1. படம் நல்ல இருக்குன்னு சொல்லறீங்களா? நல்ல இல்லன்னு சொல்லவாரீங்களா?

Leave a Reply

Fill in your details below or click an icon to log in:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out /  Change )

Google+ photo

You are commenting using your Google+ account. Log Out /  Change )

Twitter picture

You are commenting using your Twitter account. Log Out /  Change )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out /  Change )

w

Connecting to %s