திருக்குறள் : தமிழரின் தன்மானம்

c1vkn-yukaarsmg

அகரம், ஆதி பகவன், உலகு இதெல்லாம் சமஸ்கிருதம்ன்னு ஒரு ட்வீட் நானும் பாத்தேன், சும்மா கேலி பண்ணிட்டு, அது அவங்க கருத்து, அது நமக்கெதுக்குன்னு சுலபமா கடந்து வந்துட்டேன்.

முருகர் அது பத்தி பெரிசா கோவப்பட்டு twitlonger, தொடர் ட்வீட்ஸ் எழுதினப்போக் கூட எதுக்கு இவ்ளோ கோவம், அவங்க யாரோ, நம்ம அவங்கள follow கூட பண்ணலன்னு தான் நெனச்சேன். ஆனா அவர் குடுத்த தரவுகள், விளக்கங்கள் கேட்டப்போ இப்படி தமிழுணர்வு மழுங்கிப் போய் இத்துப் போய் இருக்கோமேன்னு என் மேலே கோவம் வந்துச்சு.

அப்பக் கூட அமாஸ் மேல எனக்கு வருத்தம் இல்ல, அவங்க தெரியாம தான் இது மாதிரி share பண்ணிருக்காங்க, உண்மை தெரிந்தால் ஏதாவது வருத்தம் தெரிவிப்பாங்கன்னு நினச்சேன், அவங்க அந்த ட்வீட் டெலீட் பண்ணுவாங்கன்னு கூட. ஆனா அப்படி எதுவும் இது வரை நடக்கல. அந்த போட்டோ ட்வீட் கீழ இருக்கற கமெண்ட்ஸ் அவங்க பதில்கள் பாத்தா அவங்க வருத்தப் படர மாதிரி தெரியல. அவங்க வருத்தமெனக்குத் தேவையும் இல்லை.

ஆனா உலகத்துல வேற எங்காவது தன்னோட சொந்த மொழியிலயே வேறு ஒரு மொழி தான் உசத்தின்னு எழுத்தப்படுமா, அதுவும் உலகப் பொது மறைன்னு சொல்ற திருக்குறள் போன்ற உலகம் முழுக்கக் கொண்டாடப் படுகிற ஒரு நூல் வேறு மொழியில் இருந்து சொற்களைக் கடன் வாங்கி இருக்குன்னு சொன்னா எப்படிக் கண்டுக்காம போறது. இது எல்லாம் கண்டுக்காம கேட்டுட்டு இருக்கோம்னா நாம எவ்வளோ கேனத்தனமா இருக்கோம்.

கொஞ்சம் கோவமாக இருந்ததால பேச்சு வழக்கிலேயே எழுதி விட்டேன்.

ஒகேஸ்..

தெரியாதவங்களுக்காக, இந்த ட்வீட் தான் கண்ணபிரான் ரவி ஷங்கர் (@kryes) சாரின் எதிர் வினைக்குக் காரணம்.

https://twitter.com/amas32/status/817569021767729152

https://twitter.com/RenugaRain/status/818517743968260096 (screen shot)

நாம் இது போன்ற விஷயங்களுக்கு எதிராகக் கண்டிப்பாகக் குரல் கொடுத்தேயாக வேண்டும். இல்லாவிட்டால் அவர்கள் சொல்வதே சரியென ஆக்கி விடுவார்கள். திருக்குறளுக்கே இந்த நிலைமை என்றால் நினைத்துப் பார்க்கவே அச்சமாக இருக்கறது. நம் மொழி நம் மானம், இதைக் கண்டு கொள்ளாமல் விடாதீர்கள். யார் திருக்குறளை இழித்தாலும் சினம் கொள்ளுங்கள்.

இப்போதும் அவர்கள் take it என்று இளித்துக் கொண்டு சொல்வதை சரிங்க எசமான் என்று கேட்டுக் கொண்டு அடிமையாக நிற்காதீர்கள், கேவலமாக இருக்கிறது. take it என்று இந்த விளக்கங்களை வையுங்கள் https://twitter.com/kryes/status/818480273172140032

தன்மானம், சுய மரியாதை முக்கியம் மக்களே, சோறு கூட அடுத்து தான்.

அனைவருக்கும் வேண்டுகோள், தமிழ் ட்விட்டர்கள் அனைவரும் @kryes அவர்களைப் பின் தொடர வேண்டும், அவர் வைக்கும் விளக்கங்களைக் கண்டிப்பாகப் படிக்க வேண்டும். எத்தனையோ அற்ப விஷயங்களுக்கு நேரத்தை செலவிடும் நாம் இவற்றைப் படிப்பதால் கொஞ்சமேனும் மழுங்கிப் போன தமிழுணர்வு கூர் தீட்டப் படும்.

திரு கண்ணபிரான் ரவிசங்கர் என்கிற முருகரே.. தமிழின் மேல் உங்களுக்குள்ள பற்று நான் நன்கு அறிவேன், ஆனால் பல நேரங்களில் எதுக்கு இந்த மனுஷன் இப்படிக் கோவப்படனும், யாரோ என்னவோ சொல்லிட்டுப் போறாங்கன்னு விட வேண்டியதுதானே என்று நினைத்திருக்கிறேன். மன்னித்துக் கொள்ளுங்கள்.. நீங்கள் மானமுள்ள தமிழர், உங்களைப் பின்பற்றவே விரும்புகிறேன். நானும் இதைப் போல உண்மையாகக் கோவப்பட வேண்டுமென்றால் நிறையப் படிக்க வேண்டும், அதற்கொரு குறுக்கு வழியாக உங்களைப் பின் பற்றிக் கொள்கிறேன்.:)

கடைசியாக உண்மைக்குத் துணையாக இருங்கள் தமிழர்களே, யார் சொல்வதும் உண்மையை முழுதாக ஆராய்ந்து பார்க்காமல் ஏற்றுக் கொள்ளாதீர்கள், உங்கள் நட்பை விட, பக்தியை விட ஏன் சோற்றை விட தமிழ் பெரிது! தமிழ் நமது பெருமை, சுய மரியாதை!

பின்குறிப்பு:

என் பதிவில் ஆங்கிலம்/ஸம்ஸ்க்ருதம் கலந்திருக்கிறது என்று சொல்ல வந்ததைப் புரிந்து கொள்ளாமல் திசை திருப்பும் முயற்சியோடு யாரும் பின்னூட்டம் இடவேண்டாம்.

 

நன்றி

ரேணுகா

Advertisements

One thought on “திருக்குறள் : தமிழரின் தன்மானம்

  1. ஏன் எப்போ பாரு தமிழ் தமிழ்ன்னு பேசி ஒன்னும் இல்லாம போறீங்க, தமிழ் படிச்சா என்ன ஆகா போகுது இப்படி பேசுற ஆளுங்களுக்கு தமிழ்நாட்டுல தாய் மொழியை தமிழாக கொண்டவர்கள் தான். இவங்களுக்கு விளக்கம் கொடுக்காமனும்னா ஆயுசு பத்தாது.

    இன்னும் முகத்தில அரைஞ்சது மாதிரி சொல்லனும்னா ரஷ்யாவை சொல்லலாம்.உலக முழுவதும் எல்லோரும் அறியப்பட்ட ஜேம்ஸ் பாண்ட் படத்துல (அநேகமாக எல்லா படத்திலயும்) ரஷ்யாவத்தான் வில்லனா காட்டி இருப்பாங்க இதுல வேடிக்கை என்னன்னா ஜேம்ஸ் பாண்ட் படங்களில் ஒரு ரஷ்யாக்காரன் கூட நடிக்க மாட்டான்.இதுதான் இனப்பற்று.

    பாதகம் செய்பவரை கண்டால் நீ பயம் கொள்ளலாகாது பாப்பா;மோதி மிதித்துவிடு பாப்பா அவர் முகத்தில் உமிழ்ந்து விடு …

Leave a Reply

Fill in your details below or click an icon to log in:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out /  Change )

Google+ photo

You are commenting using your Google+ account. Log Out /  Change )

Twitter picture

You are commenting using your Twitter account. Log Out /  Change )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out /  Change )

w

Connecting to %s