சினேகிதி

“உள்ளே வா உமா” என்று கைப்பிடித்து வீட்டிற்குள் அழைத்தவாறு உள்ளே பார்த்து “ஜிராபி, ஹேய் ஜிராபி” என்று கூறிக் கொண்டே கதவைத் திறந்தாள் அஞ்சலி. குழப்பத்துடன் அண்ணாந்து பார்க்க எத்தனித்த விழிகளை சிரமப்பட்டு தாழ்த்தியவாறு உள்ளே சென்று அமர்ந்தாள். காலின் கீழ் புசுபுசுவென எதோ உரச, திடீரென ஏற்பட்ட கூச்சத்தால், துள்ளிக் குதித்தாள் உமா. “இதுதான் என் செல்லகுட்டி ஜிராபி உன்ன வரவேற்க இப்ப இவன் ஒருத்தன் தான் இருக்கான்” என்றபடி அவனை/அதைத் தூக்கிக் கொஞ்சியபடி “யாரு … More சினேகிதி

எதிர் நீச்சல்

எப்போதும் போல் இன்றும் தாமதமாக சென்னை வந்தடைந்த கோவை எக்ஸ்பிரசில் இருந்து பயணிகள் இறங்கத் தொடங்கியதும் ரயில் நிலையத்தில் பரபரப்பு தொற்றிக் கொண்டது. மக்கள் வெகு வேகமாக நகரத் தொடங்கினர், ஏதோ ரயிலின் தாமதத்தைத் தங்கள் வேகத்தால் சரி செய்துவிடுபவர்கள் போல. மக்களின் வேகத்தில் தானும் உந்தப்பட்டவன் போல பரமுவும் நகர்ந்து அல்லது நகர்த்தப்பட்டு வெளியே வந்தான். ஓரிடத்தில் நின்று கை கால்களை அசைத்துக் கொண்டான். முன்பதிவு செய்யாமல் வந்த அவனுக்கு முண்டியடித்து இடம் பிடிக்கும் சாமர்த்தியம் … More எதிர் நீச்சல்

நானும் மாறிப் போனேனே!!

  திருமணமாகி நேற்றோடு ஒன்பது மாதங்கள் கடந்துவிட்டன. நான் என்னைப் பற்றி யோசிக்க ஒரு நாள் கிடைத்தது. முன்பு இருந்த என் உலகம் வேறு, இப்போதைய என் உலகம் முற்றிலும் வேறு. உணவு, தூங்கும் நேரம், இடம், செய்யும் வேலைகள், நண்பர்கள், அம்மாவின் அருகாமைகள் எல்லாமே தாறுமாறாக மாறிவிட்டது. வீட்டு வேலைகள் ஒன்றும் பெரிய பிரதானம் இல்லை, காலை இரண்டு மணி நேரம் வேலை முடிந்தால் மாலை வரை தொலைகாட்சி, இணையம், தூக்கம் மட்டுமே. முனைவர் பட்டம் … More நானும் மாறிப் போனேனே!!

பிக்பாக்கெட்காரன்

மாலை மயங்கி இருள் கவியத் தொடங்கும் நேரம் என்று கவித்துவமாகக் கூற ஆசையிருந்தும் ஊராட்சி பணியாளர்கள் பொருத்தியிருந்த சூரிய ஒளி விளக்குகள் அவ்வாறு சொல்ல விடவில்லை. புதிதாக நகரமாக மாறிக் கொண்டிருக்கும் கிராமத்தில் ஜன சந்தடி அதிகமில்லை. பெரும்பாலானவர்கள் பக்கத்தில் உள்ள ஆலைகளில் வேலை செய்பவர்கள். இயல்பிலேயே சின்ன விஷயங்களை ரசிக்கும் மனநிலை கொண்டவன் என்பதால், இந்த மெலிதான வெளிச்சத்தையும் வெகுவாக ரசித்தபடி மெதுவாக நடந்து கொண்டிருந்ததேன். அன்று சற்றே அதிகப்படியான உற்சாகத்தைத் தந்தது பையில் இருந்த … More பிக்பாக்கெட்காரன்

எறும்புகள் என்னைக் கடிப்பதில்லை

கோடைக்காலக் குயிலொன்று தன் குரல்வரிசையைக் காட்டி என்னை அழைத்தது. குயிலோசை தென்புற அறையின் ஜன்னலோர மாமரத்திலிருந்து வருவதை உணர்ந்து சுவற்றோடு ஒட்டிக் கொண்டு அந்தக் கருங்குயிலைத் தேடினேன். சுகமான காற்று முகத்தில் மோத குயிலின் இரவல் வீட்டைப் பற்றிய கதைகளை ஒரு முறுவலோடு அசை போடலானேன். சுரீரென ஏதோ கடித்து என் எண்ணவோட்டத்தைத்  தடைசெய்தது. என்னவென்று பார்த்தால் எறும்புகளின் வரிசை மேல் கைவைத்திருக்கிறேன். காலையில் தான் சுவரோரம் எல்லாம் அடித்து வீட்டைத் துடைத்தேன், என்று எண்ணியபடியே எறும்புகள் … More எறும்புகள் என்னைக் கடிப்பதில்லை

அம்மாவின் பொய்கள்

அண்ணன் நினைப்பாவே இருக்கும்மா என்று அழுகிறாள்டா பாவம் ரெண்டு வார்த்தை தொலை பேசி விடு.. தங்கச்சிக்குத்தான்னு ஒரு கடிகாரம் வாங்கிட்டு வந்தான் விடுமுறைக்கு வரும்போது எடுத்திட்டுப் போவியாம்.. உங்கள எதாச்சும் சொன்னா புள்ளங்களுக்கு கோவம் பொத்துட்டு வருது, அப்படி மறுகறாங்க போங்க.. குழந்தைங்க சாப்பிட்டாச்சான்னு கேக்காம ஒரு கவளம் சோறு கூட இறங்காது உங்கப்பாவுக்கு.. விதவிதமாக பொய்கள் பல சொல்லி எங்களிடையே பிணைப்பை வளர்க்கும் அம்மா மேல் ஆலமரமாய் பாசம் வேரூன்றி வளர்ந்திட எந்தப் பொய்யும் தேவையிருக்கவில்லை … More அம்மாவின் பொய்கள்

ஒன்னும் இல்லைங்க

கால் கொலுசுகள் ஒலிக்க அழைப்பு மணியழுத்தி பழைய துணி இருக்கா என்றொரு பெண் வந்தாள் பூட்டியிருந்த கம்பிக் கதவுகள் வழியாக ஒன்னும் இல்லீங்க என்று கதவறையும் போது நினைவுக்கு வருகிறது திறந்தே கிடக்கும் கிராமத்து வீடும் அக்கம் பக்கத்து வீடுகளின் திருடர் அனுபவமும் அன்புடன்  -ரேணுகா

உடையார் – ஒரு உரையாடல்

தலைப்பு : உடையார் ஆசிரியர்: பாலகுமாரன் பக்கங்கள் : 2725   இந்த உரையாடல் எனக்கும் என் கணவருக்கும் நடந்தது. புத்தகம் படித்துவிட்டு ட்விட்டரில் போட, பலரும் விமர்சனம் எழுதக் கேட்டனர். என்ன எழுதுவது என்று யோசித்து என்னவருடன் நடந்த உரையாடலையே தந்து விட்டேன். முன்குறிப்பு: பழைய பதிப்பில் தான் படித்தேன். சமீபத்திய பதிப்பில், ஏதேனும் தவறுகள் களையப் பட்டிருக்கலாம். இப்போதே முன்ஜாமீன் வாங்கிக்கொள்கிறேன். 🙂 பழைய பதிப்பில் தவறு இருந்தாலும் தவறு தான் என்பது என் … More உடையார் – ஒரு உரையாடல்

பாட்டி – என் சாய்குட்டி

வலைப்பதிவு ஆரம்பிச்சு இரண்டு வருடம் ஆனதைக் கொண்டாடும் விதமாக என் செல்லப் பாட்டிக்காக ஒரு பதிவு. பாட்டி பேரு திருமதி. சாயம்மா ராமசாமி.   இது கவிதையா, உரைநடையான்னு குழம்பாம படிக்கவும் (ஏன்னா, எனக்கே தெரியல:) ). கீழ இருக்க ஒவ்வொரு எழுத்தும் நிஜம், இன்னும் எழுதாம விட்டது எத்தனையோ இன்னும் இருக்கு.      சாய்குட்டி சாய்குட்டி  என் செல்ல சாய்குட்டி அழகு பெத்த பாட்டிக்கு  என்னோட முத்தங்கள்   எத்தனையோ பேரிருந்தும்  நான் மட்டும்  உனக்குத் தனி  சித்திகளும் அத்தைகளும்  … More பாட்டி – என் சாய்குட்டி

தெனாலிராமன்

               ட்ரைலர் பார்த்ததில இருந்தே இந்தப் படத்தை பாத்தே ஆகனும்ன்னு சொல்லிட்டே இருந்தேன். ஆனா முதல் நாளே பாப்பேன்னு நெனக்கல. என் அவருக்கு நன்றிகள். இத்தன வருசத்துல முதல் நாள் பாத்த படம் தெனாலிராமன்  தான். பட விமர்சனம் எழுதிப் பழக்கம்  இல்லை. இருந்தாலும் எழுதுவேன், நீங்க  படிக்கணும். படிச்சே ஆகணும், ஆங்க்..                தெனாலிராமன் கதைகள் எனக்கு அறிமுகமானது எங்க … More தெனாலிராமன்