அபிராமி அந்தாதி #15

பாடல் -51 மோகம் நீங்க அரணம் பொருள் என்றருள் ஒன்றிலாத அசுரர் தங்கள் முரண்அன்றழிய முனிந்த பெம்மானும், முகுந்தனுமே சரணம் சரணம் எனநின்ற நாயகி தன் அடியார் மரணம், பிறவி இரண்டும் எய்தார் இந்த வையகத்தே. பொருள்: திரிபுரத்தை நிலையென்று எண்ணி அசுரர்கள் செய்த தீவினைகள் அற்றுப் போகுமாறு செய்த சிவபிரானும், திருமாலும் வணங்கக் கூடிய நாயகியே, உன்னை வணங்குகின்ற அடியவர்களின் பிறப்பறுத்து முக்தி தருவாய் நீயே! #140விளக்கம் #அபிராமிஅந்தாதி51 திரிபுரம் அழித்த சிவனும், திருமாலும் வணங்கக்கூடிய … More அபிராமி அந்தாதி #15

அபிராமி அந்தாதி #14

  பாடல் – 46 (நல்நடத்தையோடு வாழ) வெறுக்கும் தகைமைகள் செய்யினும் தம் அடியாரை மிக்கோர் பொறுக்கும் தகைமை புதியதன்றே; புது நஞ்சைஉண்டு கறுக்கும் திருமிடற்றான் இடப்பாகம் கலந்துபொன்னே! மறுக்கும் தகைமைகள் செய்யினும், யான் உன்னை வாழ்த்துவேனே! பொருள்: வையத்து மக்களைக் காக்க ஆலகால விஷத்தை உண்டு, அதைத் தன் கழுத்தில் நிறுத்திக் கொண்டதால் கறுத்த தொண்டையுடைய சிவபிரானின் இடபாகத்தில் அமர்ந்த பொன் மேனியளே! செய்யக் கூடாத தவறுகளை செய்து விட்ட சிறியோர்களை, பெரியவர்கள் பொறுத்துக் கொள்வது … More அபிராமி அந்தாதி #14

அபிராமி அந்தாதி #13

பாடல்கள் 41-45 பாடல் 41: (நல்லடியார் நட்புப் பெற) புண்ணியம் செய்தனமே மனமே! புதுப் பூங்குவளைக் கண்ணியும், செய்ய கணவரும் கூடி நம் காரணத்தால் நண்ணி இங்கே வந்து தம் அடியார்கள் நடுவிருக்கப் பண்ணிநம் சென்னியின் மேல் பத்மபாதம் பதித்திடவே. பொருள்: இப்போதுதான் பூத்துவிட்ட புதிய குவளை போன்ற மலர்க் கண்களுடைய அன்னையும், அன்னையின் பதியாகிய சிவந்த திருமேனியுடைய சிவனும் சேர்ந்து நமக்கு அருள்புரியும் பொருட்டு இங்கு தோன்றியுள்ளனர், அது மட்டுமல்லாமல், நம் சிரத்தில் அவர்களின் தாமரைப் பாதங்கள் … More அபிராமி அந்தாதி #13

அபிராமி அந்தாதி #12

 பாடல்கள் 34-40 பாடல் 34: (சிறந்த நன்செய் நிலங்கள் கிடைக்க) வந்தே சரணம் புகும் அடியாருக்கு வான்உலகம் தந்தே பரிவொடு தான்போய் இருக்கும் சதுர்முகமும் பைந்தேன் அலங்கல் பருமணி ஆகமும் பாகமும் பொன் செந்தேன் மலரும் அலர்கதிர் ஞாயிறும் திங்களுமே. பொருள்: அன்னை  அபிராமியானவள் நான்முகங்களிலும், பசுந்தேன் கலந்த துளப மாலையும், நவமணிகளும் அணிந்திருக்கும் திருமாலின் மார்பிலும், ஈசனின் இட பாகத்திலும் வியாபித்திருக்கிறாள். அவள் பொன்னிறமான செந்தேன் சொரியும் தாமரை மலரிலும் விரிந்த கதிர்களைக் கொண்ட கதிரவனிலும், குளிர் … More அபிராமி அந்தாதி #12

அபிராமி அந்தாதி #11

          இந்த அபிராமி அந்தாதி – 11, பகுதியில் 31, 32 மற்றும் 33ஆம் பாடல்கள் இடம் பெறுகின்றன. மூன்று பாடல்களும் மரணம் சம்பத்தப்பட்ட பாடல். சாவைக் கண்டு பயப் படாதவர் யாரும் இல்லை. ஆனால், இறப்பிற்குப் பின் முக்தி அல்லது பிறவாநிலை கிடைக்க வேண்டும் என்பதே முக்கிய அபிலாஷையாக இருந்து வருகிறது. மரண பயத்தை வெல்ல வேண்டுமென்றால் நமக்கு அன்னையின் அருள் துணை புரியும். பட்டர் சாகும் தருவாயில் உன்னை அழைப்பேன், நீ ஓடோடி வரவேண்டும் என்று அபிராமியை … More அபிராமி அந்தாதி #11

அபிராமி அந்தாதி #10

இந்த ஐந்து பாடல்களுமே அன்னையின் திருவருளையும், அன்பையும் மெச்சிப் பாடப்பட்டுள்ளன. பட்டர் அம்மன் தன பாடல்களை ஏற்றுக் கொண்டதை மிகுந்த உவகையுடன் எடுத்துரைக்கிறார். பின் அபிராமியின் அருளால் கிடைக்கும் வரங்களைப் பற்றிக்  கூறி நம்மையும் அன்னையின் அடியவர்களாக்கி விடுகிறார். கடைசிப் பாடலில் (30) இன்னும் கொஞ்சம் உரிமை எடுத்துக் கொண்டு ஒருமுறை நம்மை ஏற்றுக் கொண்டால் பிறகு நாம் பாவம் செய்தாலும் நம்மை விடுவிப்பாள் அன்னை என்று கூறி அபிராமியின் எல்லையற்ற தாயன்பைச் சுட்டிக் காட்டுகிறார். பாடல் – … More அபிராமி அந்தாதி #10

அபிராமி அந்தாதி #9

நண்பர்களே, இன்றைய பாடல்களிலும் எப்போதும் போல் பக்தி தான் நிறைந்துள்ளது. ஒரு பெண்ணை ஆதிபராசக்தியாக, அன்னையாக, உலகின் முதல் கடவுளாக உருவகப்படுத்தி பட்டர் பாடியிருப்பது ஒரு பெண்ணாக மிகுந்த மகிழ்ச்சியைத் தருகிறது. அதிலும் அவரின் ஒருமித்த பக்தி, நமக்கு மன ஒருமையைக்  கற்றுத் தருகிறது. பாடல் – 21 (அம்பிகையை வழிபடாமல் இருந்த பாவம் தொலைய) மங்கலை! செங்கலசம் முலையாள்! மலையாள்! வருணச் சங்கலை செங்கை! சகலகலாமயில்! தாவுகங்கை பொங்கு அலைதங்கும் புரிசடையோன் புடையாள்! உடையாள்! பிங்கலை! … More அபிராமி அந்தாதி #9

அபிராமி அந்தாதி #8

என் அன்னை அபிராமி எனக்கு நீண்ட இடைவேளை கொடுத்துவிட்டாள். இனி என்னுடனே இருந்து இந்தத் தொகுப்பை முடிக்க உதவி செய்யுமாறு அன்னையை இறைஞ்சி விட்டு ஆரம்பிக்கிறேன். பாடல் – 17 (கன்னிப் பெண்களுக்கு நல்ல வரன் அமைய துதிக்க வேண்டிய பாடல்) எத்தனை அழகான பாடல்! இந்த பாடலின் இனிமையிலிருந்து மீள்வது கடினம்..! அதிசயமான வடிவுடையாள், அரவிந்தமெல்லாம் துதிசய ஆனன சுந்தரவல்லி, துணைஇரதி பதிசயமானது அபசயம் ஆக முன் பார்த்தவர் தம் மதிசயமாக அன்றோ வாமபாகத்தை வவ்வியதே. … More அபிராமி அந்தாதி #8

அபிராமி அந்தாதி #7

பாடல் – 14 (தலைமை பெற) வந்திப்பவர் உன்னை வானவர், தானவர், ஆனவர்கள்; சிந்திப்பவர் நல் திசைமுகர் நாரணர் சிந்தையுள்ளே; பந்திப்பவர் அழியாப் பரமானந்தர்; பாரில் உன்னைச் சந்திப்பவர்க்கு எளிதாம் எம்பிராட்டி நின் தண் ஒளியே. பொருள்: அன்னையே, வானவர்களும், அசுரர்களும் உன்னை வணங்குகிறார்கள். நான்முகன் பிரம்மனும், நாராயணனும் உன் அருளை எண்ணி தியானிக்கிறார்கள். என்றும் அழிவிலாத பரமானந்தமாக விளங்கும் சிவபெருமானோ உன்னை தன் மனத்தினின்று நீங்காமல் ஒரு பந்தந்தில் கட்டி வைத்துள்ளார். இத்தனை சிறப்புக்கள்  கொண்ட தாயே … More அபிராமி அந்தாதி #7

அபிராமி அந்தாதி #6

  பாடல் – 11 (இல்வாழ்க்கையில் இன்பம் பெற) ஆனந்தமாய் என் அறிவாய், நிறைந்த அமுதமுமாய்,வான் அந்தமான வடிவுடையாள், மறை நான்கினுக்கும்தான் அந்தமான சரணார விந்தம் தவளநிறக்கானம் தம் ஆடரங்கம் எம்பிரான் முடிக்கண்ணியதே. பொருள்: ஆனந்த உருவே, என் அறிவே, நிறைந்திருக்கக் கூடிய அமிழ்தமே, ஆகாயத்தை எல்லையாகக் கொண்ட பஞ்ச பூதங்களான, நிலம், நீர், காற்று, நெருப்பு ஆகியவற்றின் வடிவங்கொண்டவளே,  நான்கு வேதங்களின் எல்லையாக இருக்கும் அன்னை அபிராமியே, உந்தன் தாமரை போன்ற பாதங்கள், வெண்ணிறச் சாம்பல் … More அபிராமி அந்தாதி #6