அம்மாவின் பொய்கள்

அண்ணன் நினைப்பாவே இருக்கும்மா என்று அழுகிறாள்டா பாவம் ரெண்டு வார்த்தை தொலை பேசி விடு.. தங்கச்சிக்குத்தான்னு ஒரு கடிகாரம் வாங்கிட்டு வந்தான் விடுமுறைக்கு வரும்போது எடுத்திட்டுப் போவியாம்.. உங்கள எதாச்சும் சொன்னா புள்ளங்களுக்கு கோவம் பொத்துட்டு வருது, அப்படி மறுகறாங்க போங்க.. குழந்தைங்க சாப்பிட்டாச்சான்னு கேக்காம ஒரு கவளம் சோறு கூட இறங்காது உங்கப்பாவுக்கு.. விதவிதமாக பொய்கள் பல சொல்லி எங்களிடையே பிணைப்பை வளர்க்கும் அம்மா மேல் ஆலமரமாய் பாசம் வேரூன்றி வளர்ந்திட எந்தப் பொய்யும் தேவையிருக்கவில்லை … More அம்மாவின் பொய்கள்

ஒன்னும் இல்லைங்க

கால் கொலுசுகள் ஒலிக்க அழைப்பு மணியழுத்தி பழைய துணி இருக்கா என்றொரு பெண் வந்தாள் பூட்டியிருந்த கம்பிக் கதவுகள் வழியாக ஒன்னும் இல்லீங்க என்று கதவறையும் போது நினைவுக்கு வருகிறது திறந்தே கிடக்கும் கிராமத்து வீடும் அக்கம் பக்கத்து வீடுகளின் திருடர் அனுபவமும் அன்புடன்  -ரேணுகா

பாட்டி – என் சாய்குட்டி

வலைப்பதிவு ஆரம்பிச்சு இரண்டு வருடம் ஆனதைக் கொண்டாடும் விதமாக என் செல்லப் பாட்டிக்காக ஒரு பதிவு. பாட்டி பேரு திருமதி. சாயம்மா ராமசாமி.   இது கவிதையா, உரைநடையான்னு குழம்பாம படிக்கவும் (ஏன்னா, எனக்கே தெரியல:) ). கீழ இருக்க ஒவ்வொரு எழுத்தும் நிஜம், இன்னும் எழுதாம விட்டது எத்தனையோ இன்னும் இருக்கு.      சாய்குட்டி சாய்குட்டி  என் செல்ல சாய்குட்டி அழகு பெத்த பாட்டிக்கு  என்னோட முத்தங்கள்   எத்தனையோ பேரிருந்தும்  நான் மட்டும்  உனக்குத் தனி  சித்திகளும் அத்தைகளும்  … More பாட்டி – என் சாய்குட்டி

கடல்!!

இந்த அருமையான  கடல் கவிதை எழுதியவர் @ravan181.. ஆழ்கடலும், ஆண்டவனை அடிபணிந்து வேண்டியது! “ஊழ் வினைக்கு உயிர் கொடுக்கும் உமையவளின் நாயகனே, தாழ் பணிந்து வேண்டுகிறேன் தவறென்ன நான் செய்தேன்? கங்கையை தாய் என்று காலமெல்லாம் வழிபடுவார் !! காவிரியை காதலுடன் வா என்று அழைத்திடுவார் !! எங்கேயோ பிறக்கின்ற எழில் மிகு நதிகள் யாவும் என்னிடத்தே கலந்தாலும் எனை மதிப்பார் யாருமில்லை !! உப்பிலா பண்டமெல்லாம் குப்பையிலே போடென்று செப்பியவர் மொழி கேட்டு செருக்கோடு நான் நிமிர்ந்தால், … More கடல்!!

மகளிர் தினமாம்!!

  மகளிர் தின வாழ்த்துக்கள் பல வந்தன.. குறுஞ்செய்தி அனுப்பினர் சிலர். அழகான படங்களோடு முகநூலில் டாகினர்.. மின்னஞ்சலில் ஒரு கூட்டம் வாழ்த்து வீசியது.. அலுவலகத்தில் விஷேசக் கூட்டம் என்றனர்.. புதிய ஆடை அணிந்து கொண்டேன்.. பொருத்தமான வளையல்கள் அணிந்து கொண்டேன்.. முழம் முப்பது ரூபாய் என்று மல்லிகை கூட வாங்கினேன். ரோஜாப் பூக்கள் தந்தார்கள்.. சாக்கலேட் பட்டைகள் தந்தார்கள். பரிசாக எதையோ சுற்றித் தந்தார்கள்.. பெருமை பொங்கப் பேசினார்கள்.. மாலை நெருங்க அம்மாவின் அழைப்பு.. இன்னும் என்ன செய்கிறாய், … More மகளிர் தினமாம்!!