மானஸ சஞ்சரரே!!

இந்த பாடலை எதேச்சையாக கேட்க நேர்ந்து, பின்னர் பாம்பே ஜெயஸ்ரீ பாடியதை தரவிறக்கி மீண்டும் மீண்டும் கேட்கத் தூண்டியது எதுவெனெத் தெரியவில்லை. ஆனால் ஒவ்வொரு வரியும் மனதை அமைதி கொள்ளச் செய்கிறது, மனபாரம் வெகுவாகக் குறைகிறது. சரி அதன் விளக்கம் தேடிப் பார்க்கலாம் என்றால், மிக சில விளக்கங்களே, அதுவும் ஆங்கிலத்தில் கிடைத்தன. அதனால் தமிழில் எழுதிவிடலாம் என்று முயற்சியைத் தொடங்கி விட்டேன். முன் குறிப்பு: எனக்கு சங்கீத ஞானமோ, சமஸ்க்ரித அறிவோ சுத்தமாகக் கிடையாது. பாடல் பற்றி: … More மானஸ சஞ்சரரே!!

எனக்குப் பிடித்த பாடல் வரிகள்!

மூங்கில் தோட்டம் மூங்கில் தோட்டம்!! மூலிக வாசம் மூலிக வாசம்!! நெறஞ்ச மௌனம், நெறஞ்ச மௌனம்!! நீ பாடும் கீதம், நீ பாடும் கீதம்!! பௌர்ணமி இரவு, பௌர்ணமி இரவு!! பனி விழும் காடு, பனி விழும் காடு!! ஒத்தயடிப் பாதை, ஒத்தயடிப் பாதை!! உன்கூடப் பொடி நடை, உன்கூடப் பொடி நடை!! இது போதும் எனக்கு, இது போதுமே!! வேறென்ன வேண்டும், நீ போதுமே!! அன்புடன், ரேணுகா Thanks to; Lyrics: Vairamuthu

ரெக்கை முளைத்தேன்!!!

                      இந்தப் பாடல் பற்றி ஏற்கனவே பல முறை ட்விட்டரில் சிலாகித்திருக்கிறேன். இருந்தாலும் கேட்டதில் பிடித்தது என்ற பகுதியில் இந்த பாடலை பகிர வேண்டும் போல் தோன்றியது. பொதுவாவே நான் பாட்டெல்லாம் அதிகமாகக் கேட்க மாட்டேன். இசையைப் பற்றியும் பெரிதாக ஒன்றும் தெரியாது. பாடல்கள் பற்றி நம் பிரபல கீச்சர்கள் சொக்கன் சார், ஜீரா, கானா அண்ணன், உமாக்ரிஷ் சொல்வதை எல்லாம்  பட்டிக் காட்டான் மிட்டாய்க் கடையைப் பார்ப்பது  போல் பார்த்துக் கொண்டிருப்பேன். … More ரெக்கை முளைத்தேன்!!!