காலப்பெயர்வு

இந்த உணவு விடுதியில் தான் கொஞ்சம் கூட்டம் குறைவாக இருக்கும் என்று யோசித்து, போக்குவரத்து நெரிசலில் சிக்கி வந்து சேரும் போது மணி இரண்டைத் தொட்டது. டோக்கன் நம்பர் 975K என்றது, அப்பாடா என்று எனக்கான இருக்கையில் அமர்ந்தேன். இன்று விரைவில் உணவு கிடைக்கும் என்று ஒரு ஆசுவாசம் கிடைத்தது. அரை மணி நேர காத்திருப்புக்குப் பின் தானியங்கிக் கைகள் லொட்டு லொட்டென்று ஒரு லட்சம் தட்டுக்களை எங்கள் சாப்பாட்டு மேசைகளில் வரிசையாக அடுக்கியது. தலைக்கு மேலிருந்து … More காலப்பெயர்வு

தேவதை

“இன்னிசை பாடி வரும் இளங்காற்றுக்கு உருவம் இல்லை” காதோடு கேட்ட பாடலில் மனமுருகிக் கொண்டிருந்தது. கோவையிலிருந்து மதுரைக்கு  ஒரு தோழியின் திருமணத்திற்கு சென்று கொண்டிருந்தேன். ஜன்னலோரக் காற்றும் வழியில் வேகமாகப் பின் நகரும் வயல் வெளிகளும் பேருந்தின் தாள லயமும் இது தான் சொர்க்கலோகம் என்றது. கண்கள் மூடி ஒரு மோன நிலையில் சித்ராவின் குரலில் என்னைத் தந்திருந்தேன். திடீர் என்று இனம் காண முடியாத அடர்த்தியான வாசனையறிந்து வேகமாகப் பக்கத்து இருக்கையைப் பார்த்தேன். “மதுரைக்குங்களா?” என்று … More தேவதை

சினேகிதி

“உள்ளே வா உமா” என்று கைப்பிடித்து வீட்டிற்குள் அழைத்தவாறு உள்ளே பார்த்து “ஜிராபி, ஹேய் ஜிராபி” என்று கூறிக் கொண்டே கதவைத் திறந்தாள் அஞ்சலி. குழப்பத்துடன் அண்ணாந்து பார்க்க எத்தனித்த விழிகளை சிரமப்பட்டு தாழ்த்தியவாறு உள்ளே சென்று அமர்ந்தாள். காலின் கீழ் புசுபுசுவென எதோ உரச, திடீரென ஏற்பட்ட கூச்சத்தால், துள்ளிக் குதித்தாள் உமா. “இதுதான் என் செல்லகுட்டி ஜிராபி உன்ன வரவேற்க இப்ப இவன் ஒருத்தன் தான் இருக்கான்” என்றபடி அவனை/அதைத் தூக்கிக் கொஞ்சியபடி “யாரு … More சினேகிதி

எதிர் நீச்சல்

எப்போதும் போல் இன்றும் தாமதமாக சென்னை வந்தடைந்த கோவை எக்ஸ்பிரசில் இருந்து பயணிகள் இறங்கத் தொடங்கியதும் ரயில் நிலையத்தில் பரபரப்பு தொற்றிக் கொண்டது. மக்கள் வெகு வேகமாக நகரத் தொடங்கினர், ஏதோ ரயிலின் தாமதத்தைத் தங்கள் வேகத்தால் சரி செய்துவிடுபவர்கள் போல. மக்களின் வேகத்தில் தானும் உந்தப்பட்டவன் போல பரமுவும் நகர்ந்து அல்லது நகர்த்தப்பட்டு வெளியே வந்தான். ஓரிடத்தில் நின்று கை கால்களை அசைத்துக் கொண்டான். முன்பதிவு செய்யாமல் வந்த அவனுக்கு முண்டியடித்து இடம் பிடிக்கும் சாமர்த்தியம் … More எதிர் நீச்சல்

பிக்பாக்கெட்காரன்

மாலை மயங்கி இருள் கவியத் தொடங்கும் நேரம் என்று கவித்துவமாகக் கூற ஆசையிருந்தும் ஊராட்சி பணியாளர்கள் பொருத்தியிருந்த சூரிய ஒளி விளக்குகள் அவ்வாறு சொல்ல விடவில்லை. புதிதாக நகரமாக மாறிக் கொண்டிருக்கும் கிராமத்தில் ஜன சந்தடி அதிகமில்லை. பெரும்பாலானவர்கள் பக்கத்தில் உள்ள ஆலைகளில் வேலை செய்பவர்கள். இயல்பிலேயே சின்ன விஷயங்களை ரசிக்கும் மனநிலை கொண்டவன் என்பதால், இந்த மெலிதான வெளிச்சத்தையும் வெகுவாக ரசித்தபடி மெதுவாக நடந்து கொண்டிருந்ததேன். அன்று சற்றே அதிகப்படியான உற்சாகத்தைத் தந்தது பையில் இருந்த … More பிக்பாக்கெட்காரன்

எறும்புகள் என்னைக் கடிப்பதில்லை

கோடைக்காலக் குயிலொன்று தன் குரல்வரிசையைக் காட்டி என்னை அழைத்தது. குயிலோசை தென்புற அறையின் ஜன்னலோர மாமரத்திலிருந்து வருவதை உணர்ந்து சுவற்றோடு ஒட்டிக் கொண்டு அந்தக் கருங்குயிலைத் தேடினேன். சுகமான காற்று முகத்தில் மோத குயிலின் இரவல் வீட்டைப் பற்றிய கதைகளை ஒரு முறுவலோடு அசை போடலானேன். சுரீரென ஏதோ கடித்து என் எண்ணவோட்டத்தைத்  தடைசெய்தது. என்னவென்று பார்த்தால் எறும்புகளின் வரிசை மேல் கைவைத்திருக்கிறேன். காலையில் தான் சுவரோரம் எல்லாம் அடித்து வீட்டைத் துடைத்தேன், என்று எண்ணியபடியே எறும்புகள் … More எறும்புகள் என்னைக் கடிப்பதில்லை

நல்லவனா? கெட்டவனா?!!

            காலை அவசரமாக அலுவலகம் கிளம்பிக் கொண்டிருந்தேன். பாலு, என் மகன் பள்ளிக்குக் கிளம்பி புத்தகப் பையை தோளில் மாட்டிக் கொண்டே “அப்பா என் கூட ஸ்கூலுக்கு வா, வாத்தியார் கூட்டிட்டு வரச் சொன்னார்” என்று விட்டு பதிலுக்குக் காத்திராமல் என் வண்டியில் ஏறி அமர்ந்தான். “ஏன்டா முதல்லையே சொல்லாம இப்போ கிளம்பறப்ப சொல்ற” என்ற கேள்வி மனதிலேயே கரைந்தது. இவனிடம் கேட்டு பதில் வாங்க முடியாது என்று தோன்றியது. எங்களுக்குள் நெருக்கம் குறைந்து கொண்டே வருவதை … More நல்லவனா? கெட்டவனா?!!

கீச் கீச்..

          காலை ஆறு மணி. அலார சத்தத்தில் விழித்த நீலா குழந்தை உறங்குகிறதா என்று கவனித்து ஒரு முத்தமிட்டுப் பின் மெதுவாக படுக்கையில் இருந்து இறங்கி சென்றாள். இரவு முழுதும் குழந்தை சரியாக தூங்காமல் அழுது கொண்டே இருந்தான். என்னவென்று பார்க்கவேண்டும் என்று நினைத்துக் கொண்டவாளாக காலை நேரக் கடமைகளில் ஆழ்ந்தாள். அவள் கணவன் பெயர் கதிர், அவர் ஒரு பெரிய நிறுவனத்தில் பணிபுரிகிறார். நல்ல அறிவாளி, பெண்ணியச் சிந்தனைகள் அவர் பேச்சிலும் அவரின் கீச்சுகளிலும் ஒளிரும். … More கீச் கீச்..

சுஜாதாவின் “கன்னத்தில் முத்தமிட்டால்”

                               சுஜாதா அவர்களின் “தேர்ந்தெடுக்கப் பட்ட சிறுகதைகள்” தொகுப்பு படித்துக் கொண்டிருந்தேன். புத்தகத்தின் கடைசிக் கதையாக ” அமுதாவும் அவனும்” படிக்க ஆரம்பித்தேன். “இது எங்கயோ படித்த அல்லது பார்த்த கதை மாதிரியே இருக்கேன்னு” யோசித்துக் கொண்டே படித்தேன். அமுதாவின் அம்மா பெயர் சியாமா என்றதும் நினைவுக்கு வந்துவிட்டது, இது கன்னத்தில் முத்தமிட்டால் கதை என்று. சுஜாதா எங்கே ஈழம் சென்றார், இந்த … More சுஜாதாவின் “கன்னத்தில் முத்தமிட்டால்”

சொர்க்கம் வேண்டுமா?

ஒருத்தன் சாமி நம்பிக்கை இல்லாத ஆட்டோ ஓட்டரவனாம். இன்னொருத்தர் எந்நேரமும் சாமி கும்பிட்டுட்டே இருப்பாராம். ரெண்டு பேரும் கடைசிக் காலத்துல ஒரே நேரத்துல இறந்துட்டாங்களாம். சரி ஒரே செலவாப் போச்சுதுன்னு எமன் ஒரே எருமைல ஏத்தி கூட்டிட்டு போய் வெயிட்டிங் ரூம்ல உக்காரச் சொல்லிட்டுப் போனாராம். ஒரு அழகான ரிசப்சனிஸ்ட் ரெண்டு பேருக்கும் சொர்க்கத்துல அலாட் ஆகியிருக்குன்னு, ஆட்டோக் காரருக்கு மட்டும் VIP அந்தஸ்துன்னு சொன்னாங்களாம். உடனே நம்ம தெய்வ பக்தி அசாமி டென்சன் ஆகிட்டாராம். எப்படி … More சொர்க்கம் வேண்டுமா?