வேலைக்கு செல்லும் பெண்கள்

  பெண்கள் ஏன் வேலைக்கு செல்கிறார்கள் ? இது ஒரு அபத்தமான கேள்வி (ஆண்கள் ஏன் வேலைக்கு செல்கிறார்கள் என்று நாங்கள் கேட்பதில்லை). ஆனாலும் இதற்கான பதில்கள் சுவாரஸ்யமானவை குடும்ப பாரம் பகிர்ந்து கொள்ள அத்தியாவசியத் தேவைகளுக்கு ஆடம்பர செலவுகளுக்கு வீட்டில் போரடிப்பதால் படித்த படிப்பு வீணாகாமல் இருக்க மாமியார் தொல்லையில் இருந்து தப்பிக்க தனக்கென ஒரு அடையாளம் தேவை என சுயத்தை நிலைநாட்ட பணம் ஈட்ட பெண்கள் வேலைக்கு செல்வதற்கு நேரும் இடையூறுகள் இப்போதெல்லாம் முன்னை … More வேலைக்கு செல்லும் பெண்கள்

சாலையைக் கடக்கக் கால் மணி நேரம்

இன்று காலை ஒரு சின்ன சாலையை கடப்பதற்கு கால் மணிநேரம்..! கால் மணிநேரம்/ பதினைந்து நிமிடங்கள்/ தொள்ளாயிரம் வினாடிகள்..! காலை வெய்யிலில் மரங்கள் வெட்டப் பட்ட சாலையோரத்தில், அந்த பதினைந்து நிமிடங்கள் பல யுகங்களாக தெரிந்தது. என்னுடன் ஒரு பாட்டி, பள்ளி சிறுவர்களை அழைத்துச் செல்லும் இரு பெண்கள் மட்டும் சாலையை வெறித்துக் கொண்டு இருபுறமும் மாறி மாறிப் பார்த்தவாறு நிற்கிறோம். சில ஆண்கள் ஓடிச் சென்று சாலையைக் கடந்தவாறு இருக்கிறார்கள். நாங்கள் நின்றுகொண்டே இருக்கிறோம். (நாங்கள் சாலையைக் … More சாலையைக் கடக்கக் கால் மணி நேரம்

ரஜினிகாந்தும் வில்ஸ்மித்தும்!!

  மனிதனின் நிறம் பற்றிய பதிவு எழுத வேண்டும் என்பது என் நீண்ட நாள் எண்ணம். இப்போதுதான் சிறிது நேரமும், மின்சாரமும் கிடைத்தது. நமது தோலில் உள்ள மெலனின் என்னும் நிறமி தான் நிறத்தைத் தீர்மானிப்பதில் முதன்மையான பங்கு வகிக்கிறது. அதன் அடர்த்திக்கேர்ப்ப நம்மை கருப்பாகவும், மாநிறமாகவும், சிவப்பாகவும் காட்டும் வல்லமை படைத்தது. தோலின் நிறத்தால் ஏற்பட்ட பிரிவினைகள், வெறிச்செயல்கள், யுத்தங்கள் எனப் பலவற்றை இந்த உலகம் கண்டிருக்கிறது. நல்ல வேலையாக இந்த நிறமி ரத்தத்தின் நிறத்தை … More ரஜினிகாந்தும் வில்ஸ்மித்தும்!!

படித்தல் தொழில்!!

ஹாய் செல்லம்ஸ், இன்றைய சிந்தனை “படித்தல் தொழில் பழகு” ஒரு மொழியை முழுமையாகக் கற்றுத் தேற அதன் இலக்கணம் மட்டும் படித்தால் போதாது, இலக்கியமும் படித்திருக்க வேண்டும்.  வள்ளுவனும், அவ்வையும் தெரியாமல் தமிழில் பாண்டித்தியம் பெறமுடியாது. அதே போலத் தான் ஆங்கிலமும். வெறும் பேச்சு வழக்கு ஆங்கிலம் கல்லாக் கட்ட உதவலாம், ஆனால் ஆங்கில இலக்கியங்கள் தெரியாதவன் ஆங்கிலம் அறிந்தவன் ஆக மாட்டான். மனிதன் தோன்றிய காலம் தொட்டே படித்துக் கொண்டே தான் இருக்கின்றான். மண், வானம், … More படித்தல் தொழில்!!

மனசே!!!

அம்மாவின் துப்பட்டாவை சேலையாக சுற்றிக் கொண்டு, கையில் குச்சி வைத்துக்கொண்டு டீச்சர் விளையாட்டு விளையாடும் எதிர்வீட்டுக் குழந்தை.. “அம்மா தினமும் தயிர் சாதமா? பிள்ளைங்கெல்லாம் சிரிப்பாங்க மா”, சிணுங்கும் பள்ளிச்சிறுமி.. “அப்பா fast track வாடச் தான் வேணும், என் பிரெண்ட்ஸ் எல்லாம் அது தான் உபயோகிக்கிறார்கள்” என கெஞ்சும் விடலை.. “என் மகனை/மகளை அந்த பொறியியல் கல்லூரியில் சேர்த்து விடுவேன், சொந்தக்காரர்களிடம் சொல்ல மதிப்பாக இருக்கும்’” என நினைக்கும் பெற்றோர்கள்… “இந்த இன்க்ரிமென்ட் வந்தவுடன் கார் … More மனசே!!!