தைப் பொங்கலும் வந்தது..

சின்ன வயதில் வந்த தைப் பொங்கலுக்கும் இப்போதைய தைப் பொங்கலுக்கும் நிறைய வித்தியாசங்கள் உணர முடிகிறது. எல்லாருக்குமே அப்படித் தோன்றுகிறதா இல்லை எனக்கு மட்டுமேயா என்று தெரியவில்லை. என் நினைவடுக்குகளில் உள்ள தைப் பொங்கல் பற்றி யோசிக்கிறேன். தீபாவளி அளவுக்கு பெரிய கொண்டாட்டம் இல்லாவிட்டாலும், சற்றும் மகிழ்ச்சிக்குக் குறைவில்லாதது பொங்கல். பெரிதாக புத்தாடைகள் அணிந்து கொண்டாடியதாக நினைவில்லை. பள்ளிக்கு சீருடை என்பதோடு தீபாவளித் துணியின் புதுக்கறுக்கே குறைந்திருக்காது என்பதால் தேவையும் இருந்திருக்கவில்லை. அப்போதைய காலத்தில் தேவை என்பது … More தைப் பொங்கலும் வந்தது..

2 0 1 4 – 2 0 1 5

கடந்தது கிபி இரண்டாயிரத்திப் பதினான்கு. இந்த வருடம் ஆரம்பம் முதல் இறுதி வரை சற்றும் தடுமாறாமல் மின்னலாய் சென்று விட்டது. ஒரு வருஷம் ஆயிடுச்சா என்று ஆச்சரியம் தந்த ஆண்டு. இந்த ஆண்டு என் மனதைத்  தொட்ட / பாதித்த சம்பவங்கள்:- சில நாள் முதல்வர் அரவிந்த் கெஜ்ரிவால் திமுகவில் இருந்து அழகிரி நீக்கம் இரண்டான ஆந்திரா ராஜீவ்காந்தி கொலை கைதிகள் விடுதலை அறிவிப்பு நரேந்திர மோடி இந்தியாவின் பதினைந்தாவது பிரதமராக பதவியேற்றார். திருநங்கைகளை மூன்றாம் பாலினத்தவர் என்று … More 2 0 1 4 – 2 0 1 5

நான் யார்?

நான் யார்.. இந்தப் பிரசித்தி பெற்ற கேள்வியைத் தனக்குள் கேட்டுக் கொள்ளாதவர்கள் எண்ணிக்கை மிகச் சொற்பமே. இந்தக் கேள்வியும் இதற்கான பதில்களும் ஆளுக்கு ஆள் வேறுபடலாம். அல்லது பூமியில் உள்ள எல்லா உயிர்களுக்கும் பொதுவானதாகவும் இருக்கலாம். ஒவ்வொரு முறை இந்தக் கேள்வி எனக்குள் எழும்போதும் அப்போதைய வயதுக்கும் அறிவுக்குமான ஒரு பதில் தோன்றி வந்திருக்கிறது. தன்னை அறிவது என்பது பெரும்பாலும் மத, தத்துவ சித்தாந்தங்களுடன் சம்பந்தப்பட்டது. இதன் எந்த சாயலும் இல்லாமல் எனக்குள் நானே நான் யார் … More நான் யார்?

நானும் மாறிப் போனேனே!!

  திருமணமாகி நேற்றோடு ஒன்பது மாதங்கள் கடந்துவிட்டன. நான் என்னைப் பற்றி யோசிக்க ஒரு நாள் கிடைத்தது. முன்பு இருந்த என் உலகம் வேறு, இப்போதைய என் உலகம் முற்றிலும் வேறு. உணவு, தூங்கும் நேரம், இடம், செய்யும் வேலைகள், நண்பர்கள், அம்மாவின் அருகாமைகள் எல்லாமே தாறுமாறாக மாறிவிட்டது. வீட்டு வேலைகள் ஒன்றும் பெரிய பிரதானம் இல்லை, காலை இரண்டு மணி நேரம் வேலை முடிந்தால் மாலை வரை தொலைகாட்சி, இணையம், தூக்கம் மட்டுமே. முனைவர் பட்டம் … More நானும் மாறிப் போனேனே!!

எறும்புகள் என்னைக் கடிப்பதில்லை

கோடைக்காலக் குயிலொன்று தன் குரல்வரிசையைக் காட்டி என்னை அழைத்தது. குயிலோசை தென்புற அறையின் ஜன்னலோர மாமரத்திலிருந்து வருவதை உணர்ந்து சுவற்றோடு ஒட்டிக் கொண்டு அந்தக் கருங்குயிலைத் தேடினேன். சுகமான காற்று முகத்தில் மோத குயிலின் இரவல் வீட்டைப் பற்றிய கதைகளை ஒரு முறுவலோடு அசை போடலானேன். சுரீரென ஏதோ கடித்து என் எண்ணவோட்டத்தைத்  தடைசெய்தது. என்னவென்று பார்த்தால் எறும்புகளின் வரிசை மேல் கைவைத்திருக்கிறேன். காலையில் தான் சுவரோரம் எல்லாம் அடித்து வீட்டைத் துடைத்தேன், என்று எண்ணியபடியே எறும்புகள் … More எறும்புகள் என்னைக் கடிப்பதில்லை

ஒன்னும் இல்லைங்க

கால் கொலுசுகள் ஒலிக்க அழைப்பு மணியழுத்தி பழைய துணி இருக்கா என்றொரு பெண் வந்தாள் பூட்டியிருந்த கம்பிக் கதவுகள் வழியாக ஒன்னும் இல்லீங்க என்று கதவறையும் போது நினைவுக்கு வருகிறது திறந்தே கிடக்கும் கிராமத்து வீடும் அக்கம் பக்கத்து வீடுகளின் திருடர் அனுபவமும் அன்புடன்  -ரேணுகா

அம்மா வீடு..

                          திருமணம் முடிந்து முதன் முறையாக அம்மா வீடு சென்று வந்தேன். இதற்கு முன்பும் விடுதியில் இருந்து வாரம் ஒருமுறை செல்வேன் தான். ஆனால் அதற்கும், இம்முறை சென்றதற்கும் நிறைய வேறுபாடுகள். அபிரிதமான பாசம், அதிக வகை உணவுகள், தம்பி, அக்கா குடும்ப வருகை என அமர்க்களமாகக் கழிந்தது. நேரம் புல்லெட் ட்ரைன் போல அல்லவா பறந்தது!!       … More அம்மா வீடு..

ரேணு விருதுகள் #2013

அனைவருக்கும் இனிய புத்தாண்டு வாழ்த்துக்கள்.. விருதுக்கு ஆசைப் படாதவந்தான் மத்தவங்களுக்கு அதைக் குடுத்து அழகு பாக்கணும்ன்னு நெனைப்பான். இந்த பஞ்ச் டயலாக்குடன் நம்ம விருதுப் பட்டியலுக்குப் போயிறலாம். எனக்கு ரொம்ப பிடித்த பாசமிகு அண்ணன், இசைக் காத/வலன், நல்லவர். @kanapraba இவரு RT பண்ணா அது நல்ல ட்வீட்டாத் தான் இருக்கும்.. @HarryGowtham ரொம்ப decent ஆன, ரசிக்கப்படும் fake ID @dpriya_ என்னைப் போல் ஒருத்தி @umakrishh கலக்கல் ட்வீட்ஸ், அசத்தும் DPக்கள்.. @krajesh4u குட்டிச் … More ரேணு விருதுகள் #2013

கெத்து!!

                 நேற்று வழக்கம் போல் தொலைக் காட்சிப் பெட்டியில் நேரத்தைத் தொலைத்துக் கொண்டிருந்தோம். எதேச்சையாக ஜெயா டிவியில் ஓடிக்கொண்டிருந்த “சுதந்திர தின விழா” காட்சிகளை பார்த்தோம். எனக்கு அரசியலில் அதிக ஈடுபாடு இல்லாததால், பெரிதாக எந்த கட்சியின் மீதும் அபிப்ராமோ, கருத்துக்களோ இல்லை. எந்த உணர்வுகளும் இல்லாமல் பார்க்க ஆரம்பித்தேன்.              நம் தமிழக முதல்வர் தன் வாகனத்தில் பல பாதுகாப்பு வாகனங்கள் புடை சூழ வான் மழை வரவேற்க வருகை தரும் காட்சி … More கெத்து!!

என் முதல் பதிவு !! (May 15, 2012)

ஓடுங்க !! (பதிவு எழுத போகிறேன்)!! அன்பான கீச்சுலக மக்களே!! தலைப்பை பார்த்தால் எதோ எதிர்மறையாக உள்ளதே என என்ன வேண்டாம் கண்மணிகளே!! ஒரு சென்டிமென்டாக இருக்கட்டுமே என்று இந்தத் தலைப்பை வைத்துள்ளேன். உங்களை எல்லாம் பொறுத்தவரை இந்த தலைப்பானது மிகச் சாதாரமாகத் தோன்றக்கூடும். ஆனால் முதல் முறையாக எழுத முடிவெடுத்திருக்கும் எனக்கு இந்த தலைப்பானது மிக பிரம்மிப்பாக தோன்றுவது ஒன்றும் ஆச்சரியமான விடயமில்லை. இந்த பதிவை வாசிப்பவர்களுக்கு நன்றி கூறி தொடர்கிறேன். முதலில் என் வாசிப்பு … More என் முதல் பதிவு !! (May 15, 2012)