மழை !!!

கோடுகளாய் கிறுக்கிச் செல்லும் மழை, வானத்தின் தேவநகரி!! மழை ரசிக்கும் நேரத்தில் கவிதை எழுதுதல் கால விரயம்!! மழை ஆடும் ஆட்டத்திற்கு இடி பக்க வாத்தியம்!! தேவனும் சாத்தானும், தேவ சாத்தானும் மழை தான்!! # நிற்கவும், பெய்யவும் சம பிரார்த்தனைகள். மழை இல்லா வானும் இசை இல்லா வாழ்வும் வீண். அன்புடன், ரேணுகா Advertisements

மழை!!!

வெளியே பெய்து கொண்டிருக்கிறது மழை.. உள்ளே கரைந்து கொண்டிருக்கிறது மனது… நம் தாடித் தாத்தா திருவள்ளுவர் முதல் சினிமாக் கவிஞர்கள் வரை ஏற்கனவே கையாண்ட மழை தான். ஆனால் சற்றும் புதுக்கருக்கு குறையாமல் ஒவ்வொரு துளியிலும் ஈர்த்துக் கொண்டே உள்ளது. ஆகவே மீண்டும் மழை பற்றி கிறுக்க ஆசை… தென்னை மரத்தின் கிளை நுனியில் சொட்டிக் கொண்டிருக்கும் மழைத் துளியைப் பார்த்துக் கொண்டே இருந்தால் பொழுது போவதே தெரியாது. மழை மென்மையானது மட்டுமல்ல, பெண்மையானதும் கூட, உலகையே … More மழை!!!

மழை!! (ட்விட்டர் ஹாண்டில் காரணக்கதை)

மழை!! நம் எல்லாருக்குமே பிடித்தமானது. மழைக்கும் நம்மை பிடித்தே இருக்கிறது. சில நேரங்களில் மழை வந்து இம்சிக்கும். பல நேரங்களில் வராமலே இம்சிக்கும். எல்லார் வாழ்விலும், பால்யம் முதல் முதுமை வரை ஞாபகம் வைத்துக் கொள்ள ஏதாவதொன்றை தந்து சென்றிருக்கும். சில மென்மையான தருணங்களில் பெய்த மழை அப்படியே உறைந்து நிற்கிறது ஒரு Bookmark போல.  நாம்,  நினைவுகளை அசைபோடும் போது மழையும் சேர்ந்து கொட்டித் தீர்க்கிறது, சில நேரம் கண்ணீரோடும், சில நேரம் வறட்டுப் புன்னகையோடும். … More மழை!! (ட்விட்டர் ஹாண்டில் காரணக்கதை)