பிக்பாக்கெட்காரன்

09SM-P_2-RAJINI_09_1292859g

மாலை மயங்கி இருள் கவியத் தொடங்கும் நேரம் என்று கவித்துவமாகக் கூற ஆசையிருந்தும் ஊராட்சி பணியாளர்கள் பொருத்தியிருந்த சூரிய ஒளி விளக்குகள் அவ்வாறு சொல்ல விடவில்லை. புதிதாக நகரமாக மாறிக் கொண்டிருக்கும் கிராமத்தில் ஜன சந்தடி அதிகமில்லை. பெரும்பாலானவர்கள் பக்கத்தில் உள்ள ஆலைகளில் வேலை செய்பவர்கள்.

இயல்பிலேயே சின்ன விஷயங்களை ரசிக்கும் மனநிலை கொண்டவன் என்பதால், இந்த மெலிதான வெளிச்சத்தையும் வெகுவாக ரசித்தபடி மெதுவாக நடந்து கொண்டிருந்ததேன். அன்று சற்றே அதிகப்படியான உற்சாகத்தைத் தந்தது பையில் இருந்த முதல் மாத சம்பளப் பணம். இன்னும் வங்கியில் கணக்கு தொடங்காததால் சம்பளத்தைக் கவரில் போட்டுத் தந்திருந்தார்கள்.

அன்றைய நாளின் முடிவில் கணக்காளர் வாழ்த்து கூறி சம்பளம் தந்தது, நண்பர்கள் “ட்ரீட், ட்ரீட்” என்று சுற்றி வந்தது என்று யோசித்து மகிழ நன்றாக இருந்தது. முதல் சம்பளத்தை அம்மாவுக்கு கொடுத்து “எது வேண்டுமோ வாங்கிக் கொள்” என்று சொல்லி அவள் சந்தோசப்படுவதைப் பார்க்க வேண்டும், அப்பாவிடம் ஆசி வாங்க வேண்டும் என்றெண்ணியவனாக நடையை எட்டிப் போட்டேன்.

205680_Mammootty_1024x768

அப்போது திடீரென ஒரு திருப்பத்தில் ஒருவன் என்னைத் தள்ளிவிட்டு பணப்பையைப் பறித்துக் கொண்டு கண் மண் தெரியாமல் ஓடத் தொடங்கினான். ஒரு வினாடி திகைத்து விட்டுப் பின் அவனை விட்டுவிடக் கூடாது என்று துரத்தத் தொடங்கினேன்.

வேகமாக பக்கத்தில் இருந்த சந்து ஒன்றில் புகுந்து ஓடத் தொடங்கினான். நான் பிறந்து வளர்ந்த இடம் என்பதால் நான் சற்று ஆசுவாசமாகவே தொடர்ந்தேன். இடது திருப்பத்தில் திரும்பியவன் சட்டென தயங்கி நின்றான். நானும் வேகத்தைக் குறைத்து என்னவென்று பார்க்கும் ஆவலில் நின்றேன். அந்த இடத்தோடு வீதி முடிந்து அந்தப் பக்கம் முழுவதும் ஆலையொன்றின் சுவர் வழி மறித்து நின்றது.

சுவற்றின் பக்கம் ஒரு சிறிய பெட்டிக் கடையில் மூன்று பேர் நின்றிருந்தார்கள். அதில் ஒருவன் என் பள்ளி நண்பன். இப்போது எனக்கும் அந்த பெட்டிக் கடைக்கும் நடுவே பிக்பாக்கெட்காரன். ஒரு சிறிய குரல் எழுப்பினால் போதும் அவனைப் பிடித்து விடலாம். இப்போது என்ன செய்கிறான் பார்ப்போம் என்று, என் நண்பனை சத்தமாக பெயர் சொல்லி அழைத்து “என்னடா ஷிப்ட்டுக்கு நேரம் ஆகல” என்றவாறு அவன் முகத்தைப் பார்த்தவாறு மெதுவாக நெருங்கினேன்.

images

லேசாக நடுங்கத் தொடங்கியிருந்த கரங்களால் என பர்சை எடுத்து என்னிடம் தந்துவிட்டு முகத்தைத் தொங்கப் போட்டுக் கொண்டான். என் வாழ்க்கையில் இவ்வாறு திருடனை சந்தித்தது முதல் முறை. இவனிடம் மாற்றத்தை உணர்ந்து “ஃபர்ஸ்ட் டைமா” என்றேன், தலையாட்டியவனிடம் “எனக்கும் தான்” என்றேன் சலனமில்லாமல்.

பெட்டிக் கடையை அடைந்து “சிகரட்” என்றேன் கேள்வியாக, வேண்டாமென்று ஒரு பிஸ்கட் பாக்கெட் வாங்கிக் கொண்டான். இருபதுகளின் தொடக்கத்தில் இருந்த இருவரும் சாதாரணமாகவே பேசிக் கொண்டு வீடு நோக்கி நடக்கத் தொடங்கியிருந்தோம்.

oey54hrmu5vx

முதன் முறை பிக்பாக்கெட் அடிக்க முயன்று தோற்றுவிட்ட தோல்வியுணர்ச்சியில் அவனும், சம்பளப் பணத்தைக் காப்பாற்றிய வீர சாகசம் புரிந்த கர்வத்தில் நானும்.

பெரும்பாலும் நான் தான் பேசிக் கொண்டிருந்தேன், அதுவும் அறிவுரைகளாக, எதையும் மறுக்காமல் அமைதியாகக் கேட்டுக் கொண்டான். அவனைக் காட்டிக் கொடுக்காமல் இருந்தது அவனுக்கு நன்றியுணர்ச்சியைத் தந்திருக்கலாம். “இந்த மூஞ்சிய வச்சுக்கிட்டு திருட வந்தாம் பாரு” என்று கேலி செய்தபடியே வீட்டை நெருங்கி விட்டோம்.

நான் வீட்டிற்குள் செல்லத் தயங்கி தர்ம சங்கடத்துடன் நிற்க, அவனோ ஆவலோடு என்னைப் பார்த்துக் கொண்டு நிற்கிறான், ஏதோ அவன் பணத்தை நான் பறித்துக் கொண்டதைப் போல. வாசலில் நிழலாடுவதை உணர்ந்து அம்மா எழுந்து வந்தார்கள். “என்ன தம்பி இவ்வளவு நேரம்” என்று கடிந்து கொண்டே வந்தவர் வாசலில் நின்றவனைப் பார்த்து பேச்சை நிறுத்தினார்.

“ஒ, இதுதான் நீ சொன்ன பையனா? வாப்பா வா” என்று வரவேற்றபடியே உள்ளே சென்றுவிட்டார். பிச்க்பாக்கெட்காரனோ, அவன் பெயர் கண்ணன், “இப்போது என்ன சொல்கிறாய்” என்று கண்களால் கேட்டபடி எனக்கு முன் வீட்டிற்குள் சென்றுவிட்டான்.

என் பள்ளி நண்பன் ஒருவன் இங்கே வந்து வேலை செய்ய அம்மாவிடம் அனுமதி கேட்டது இப்போதுதான் நினைவுக்கு வந்தது. வீட்டில் என்னைத் தவிர அப்பா, இரண்டு அண்ணன்கள் என்று நாங்கள் இத்தனை பேர் இருப்பதால் என்ன தான் நடக்கும் பார்ப்போம் என்று தோன்றவே எதுவும் பேசாமல் உள்ளே நடந்தேன்.

அம்மா அவனைப் பார்த்துவிட்டு “என்னப்பா இப்படி எழும்பும் தோலுமாய் இருக்க, நாலு நாள் என் கையால் சாப்பிடு, அப்பறம் வேலை தேடிக்கலாம்” என்று பலகாரம் தந்து உபசரித்தார், அம்மாவின் இயல்பு அது. இரவு உணவுக்குப் பின்னர் புழுக்கமாக இருக்கிறதென்று நாங்கள் இருவரும் மொட்டை மாடிக்குச் சென்று பாய் விரித்துப் படுத்தோம். நல்ல களைப்பில் இருந்ததால் இருவரும் ஆழ்ந்த உறக்கத்தில் ஆழ்ந்துவிட்டோம்.

காலை எழுகையில் அருகில் அவன் இருந்த இடம் காலியாக இருப்பதை உணர்ந்து திகைத்தேன் வேகமாக எழுந்து மூச்சு வாங்கியபடி அவனைத் தேடினேன். சமையல் அறையில் அம்மாவுடன் அமர்ந்து காய் நறுக்கிக் கொண்டிருந்தான். காபியை என்னிடம் நீட்டிய அம்மா வாயெல்லாம் பல்லாக “டேய் சங்கரா, என் பையன் எனக்கு என்னெல்லாம் வேலை செஞ்சு குடுக்கறான் பாரு” என்று சொல்லிக் கொண்டிருந்தாள். வீடு வாசல் பெருக்கித் தண்ணீர் பிடித்து வைத்தானாம். பிக்பாக்கெட்காரன் திடீரென என் சகோதரனாகிவிட்டான் என்று சிரித்தபடியே காபியை உறிஞ்சினேன்.

dhalapathy

அலுவலகலம் கிளம்பும் போது கண்ணனும் என்னுடனே வந்தான். வீதியின் திருப்பத்தில், கைகளைப் பிடித்துக் கொண்டான். “சங்கரா, வேறு வழியே இல்லாமல் புத்தி தடுமாறி நேத்து தப்பு பண்ணிட்டேன், என்னை மன்னிச்சு ஒரு வேலை வாங்கி கொடு, ஊருல அம்மா அப்பா எல்லாம் ரொம்பக் கஷ்டப் படுறாங்க” என்றான். அவன் கண்களில் உண்மை வழிந்தது. “முடியாது” என்றேன் நிதானமாக.

thalapathi

ஆதூரமாக பார்த்தவனிடம் “அம்மா சொன்னமாதிரி நாலு நாள் நல்லா சாப்பிடு, அடுத்த வாரம் எங்க ஆபிசுக்குக் கூட்டிட்டு போறேன்” என்றேன். அவன் எந்த தைரியத்தில் என்னுடன் வந்தான், நான் எந்த நம்பிக்கையில் அவனை நம்பி வீட்டில் தங்க வைத்தேன் என்பது இன்னும் விளங்காத புதிர்.

இப்போது நாங்கள் நல்ல நண்பர்கள். உற்சாகத்தின் உச்சத்தில் அவனை பிக் பாக்கெட்காரா என்று அழைப்பதை அம்மா அர்த்தம் புரியாமல் பார்த்து சிரிப்பாள்.

sunbeam

பின்குறிப்பு:
இந்த படங்கள் அதிகப்படி சுவாரஸ்யத்துக்காக சேர்க்கப் பட்டுள்ளன.
படங்களுக்கும் கதைக்கும் சம்பந்தம் இல்லை. சம்பந்தப்பட்டவர்கள் ஆட்சேபம் தெரிவித்தால் படங்கள் நீக்கப்படும்.
நன்றி


11 thoughts on “பிக்பாக்கெட்காரன்

  1. கதை சொல்லும் நடையில் எந்த குறையுமில்லை. ஆனால் கதையின் பாடம் (அ) திருப்பம் எங்கு எப்போ வரணும்கிறதுதான் முக்கியமா கவனிக்க வேண்டிய விஷயம். போனவார குமுதம் 12.11.14 பக்கம் 121 ல் 11 வரிகளில் ஒரு ஒருபக்க கதை. படித்து பாருங்கள். வாழ்த்துக்கள் 🙂

    1. நன்றிங்க அய்யா. அந்த கதை படிக்க முயற்சிக்கிறேன். உங்களோட தொடர் ஆதரவு இருக்கறதுனால சீக்கரம் தேறிடுவேன் 🙂

  2. கதை ஆரம்பித்த நடை மிகவும் அழகாக இருந்தது அதவும் “ஊராட்சி பணியாளர்கள் பொருத்தியிருந்த சூரிய ஒளி விளக்குகள் அவ்வாறு சொல்ல விடவில்லை” இடம் மிகவும் அருமை. வாழ்த்துக்கள் தாயீ

  3. டாக்டர் எழுத்தாளர் ஆகிட்டீங்க வாழ்த்தூஸ்

  4. :-)) அருமை! எழுத்துலகில் இன்னும் வேகமாக முன்னேற வாழ்த்துகள் 🙂

    amas32

Leave a reply to மழை!! Cancel reply